பதிவு செய்த நாள்
18 ஆக2017
00:14

புதுடில்லி : ஆந்திராவைச் சேர்ந்த, அபெக்ஸ் புரோசன் புட்ஸ் நிறுவனம், 1,338 ஏக்கர் பரப்பில், கடல் உணவுப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனத்திற்கு, ஆந்திராவின், காக்கிநாடாவில், ஆண்டுக்கு, 9,240 டன் கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தும் திறன் கொண்ட தொழிற்சாலை உள்ளது. இத்துடன், அதே மாநிலத்தில், ஆண்டுக்கு, 20 ஆயிரம் டன் இறால்களை பதப்படுத்தும் தொழிற்சாலையை அமைக்க, இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இதற்காகவும், இதர வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும், இந்நிறுவனம், நிதி திரட்டிக் கொள்ளும் நோக்கில், பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது.
அபெக்ஸ் புரோசன் புட்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடு, வரும், 22ல் துவங்கி, 24ல் முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை, 171 – 175 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இப்பங்கு வெளியீட்டின் மூலம், இந்நிறுவனம் அதிகபட்ச விலையில், 152 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|