அபெக்ஸ் புரோசன் புட்ஸ் பங்கு வெளியீடு 22ல் துவக்கம்அபெக்ஸ் புரோசன் புட்ஸ் பங்கு வெளியீடு 22ல் துவக்கம் ... ஸ்மார்ட் போனில் தகவல் திருட்டு; சீன நிறுவனங்களுக்கு ‘நோட்டீஸ்’ ஸ்மார்ட் போனில் தகவல் திருட்டு; சீன நிறுவனங்களுக்கு ‘நோட்டீஸ்’ ...
சிறந்த சேவைக்கு கூடுதல் தொகை தர இந்தியர்கள் தயார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2017
00:14

மும்பை : சிறந்த சேவைக்கு, கூடு­தல் தொகை தர, இந்­தி­யர்­கள் தயா­ராக உள்­ளது ஆய்­வொன்­றில் தெரி­ய­ வந்­துள்­ளது.

அமெ­ரிக்­கன் எக்ஸ்­பி­ரஸ் நிறு­வ­னத்­திற்­காக, கன்­டர் ஐ.எம்.ஆர்.பி., நிறு­வ­னம், இந்­திய வாடிக்­கை­யா­ளர்­கள் குறித்து ஆய்வு மேற்­கொண்­டது.இதில், சென்னை, பெங்­க­ளூரு, மும்பை உள்­ளிட்ட முக்­கிய நக­ரங்­க­ளைச் சேர்ந்த, 1,577 பேர் கலந்து கொண்­ட­னர். அவர்­கள் பயன்­ப­டுத்­தும் ‘கிரெ­டிட் கார்டு, டிவி, ஸ்மார்ட்­போன்’ உள்­நாடு மற்­றும் வெளி­நாட்டு சுற்­றுலா, விமான பய­ணம் ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில், தேர்வு செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­கள் தெரி­வித்த கருத்­துக்­களை தொகுத்து, அமெ­ரிக்­கன் எக்ஸ்­பி­ரஸ் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: ஆய்­வில் பங்­கேற்ற வாடிக்­கை­யா­ளர்­களில், 42 சத­வீ­தத்­தி­னர், சிறந்த சேவை கிடைத்­தால், கூடு­தல் தொகை வழங்க தயா­ராக உள்­ள­தாக தெரி­வித்­துள்­ள­னர். சிறந்த வாடிக்­கை­யா­ளர் சேவைக்கு, 20 – 40 சத­வீ­தம் அதி­க­மாக பணம் தர தயார் என, 53 சத­வீ­தத்­தி­னர் கூறி­யுள்­ள­னர். தங்­கள் கருத்­துக்­களை செயல்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­களின் சேவைக்கு, கூடு­தல் தொகை தர விரும்­பு­வ­தாக, 31 சத­வீ­தம் பேர் தெரி­வித்­துள்­ள­னர். அனைத்து இடங்களிலும் சேவை கிடைத்­தால், அதிக தொகை தரு­வ­தில் தயக்­க­மில்லை என, 27 சத­வீ­தத்­தி­னர் கூறி­யுள்­ள­னர்.

வாடிக்­கை­யா­ளர் சேவை மோச­மாக இருந்­தால், அந்­நி­று­வ­னப் பொருட்­களை பயன்­ப­டுத்த மாட்­டோம் என, 66 சத­வீ­தம் பேர் தெரி­வித்­துள்­ள­னர். சொன்ன வாக்­கு­று­தியை காப்­பாற்­றும், ‘பிராண்டு’ களுக்கு கூடு­தல் தொகையை தர, 83 சத­வீ­தத்­தி­னர், தயா­ராக உள்­ள­னர். சமூக வலை­த­ளங்­கள் மூலம் பிராண்­டு­களை அறிந்து கொள்­வ­தாக, 80 சத­வீ­தம் பேர் கூறி­யுள்­ள­னர். வலை­த­ளங்­கள் மூலம் பிராண்­டு­களை அறிந்து கொள்­வது மற்­றும் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தாக, முறையே, 81 மற்­றும் 48 சத­வீ­தத்­தி­னர் தெரி­வித்­துள்­ள­னர். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)