சிறந்த சேவைக்கு கூடுதல் தொகை தர இந்தியர்கள் தயார்சிறந்த சேவைக்கு கூடுதல் தொகை தர இந்தியர்கள் தயார் ... இன்போசிஸ் தலைவர் பதவி : ராஜினாமா செய்தார் விஷால் சிக்கா இன்போசிஸ் தலைவர் பதவி : ராஜினாமா செய்தார் விஷால் சிக்கா ...
ஸ்மார்ட் போனில் தகவல் திருட்டு; சீன நிறுவனங்களுக்கு ‘நோட்டீஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2017
00:15

புதுடில்லி : ‘ஸ்மார்ட் போன்’ மூலம், தக­வல்­கள் திரு­டப்­ப­டு­வதை தடுக்க எடுக்­கப்­பட்­டுள்ள பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்து, விரி­வான விளக்­கம் அளிக்­கு­மாறு, இந்­தி­யா­வில் செயல்­பட்டு வரும், சீன ஸ்மார்ட் போன் நிறு­வ­னங்­க­ளுக்கு, மத்­திய அரசு, ‘நோட்­டீஸ்’ அனுப்பி உள்­ளது.

சீனா­வில், ஸ்மார்ட் போன், ‘சர்­வர்’களில் புகுந்து, வங்­கிக் கணக்கு விப­ரங்­கள், தொடர்­பு­கள், படங்­கள் உள்­ளிட்ட, அந்­த­ரங்க தக­வல்­களை திரு­டு­வது அதி­க­ரித்து வரு­கிறது. இந்­தி­யா­வில் செயல்­பட்டு வரும், சீனா­வைச் சேர்ந்த, ‘விவோ, ஒப்போ, ஜியோனி, ஜியோமி’ உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள், அவற்­றின் ஸ்மார்ட் போன்­களில், ‘ஆண்ட்­ராய்டு’ போன்ற ஆணை தொகுப்­பு­களில் செயல்­படும், பல்­வேறு சாப்ட்­வேர் புரோ­கி­ராம்­க­ளை­யும், செய­லி­க­ளை­யும் இணைத்து வழங்­கு­கின்றன.

இந்­நி­று­வ­னங்­களின் மைய சர்­வர்­கள், சீனா­வில் உள்ளன. அவற்­றில் தான், இந்­நி­று­வ­னங்­களின் ஸ்மார்ட் போன் ஹார்­டு­வேர், சாப்ட்­வேர் செய­லாக்­கங்­கள் ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு உள்ளன. இந்த சர்­வர்­களில், கணினி நாச­கா­ரர்­கள் நுழைந்து தக­வல்­களை திரு­டி­னால், இந்­தி­யா­வில், சீன நிறு­வ­னங்­களின் ஸ்மார்ட் போன்­களை பயன்­ப­டுத்­து­வோர் பாதிக்­கப்­ப­டு­வர்.

இத்­த­கைய நிலையை தடுக்க, தனி­ந­பர் தக­வல் பாது­காப்பு தொடர்­பாக எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­கள் குறித்து, விரி­வான அறிக்கை அளிக்­கு­மாறு, விவோ, ஒப்போ உள்­ளிட்ட, 21 நிறு­வ­னங்­க­ளுக்கு, மத்­திய மின்­னணு மற்­றும் தக­வல் தொழில்­நுட்ப அமைச்­ச­கம், ‘நோட்­டீஸ்’ அனுப்பி உள்­ளது.

இது குறித்து, அமைச்­சக அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: சர்­வ­தேச பாது­காப்பு விதி­மு­றை­க­ளின்­படி தயா­ரிக்­கப்­படும் ஸ்மார்ட் போன் சாத­னங்­களை மட்­டுமே, இந்­தி­யா­வில் விற்க முடி­யும். இந்த விதி­மு­றை­களை பின்­பற்ற தவ­றும் நிறு­வ­னங்­கள் மீது, ஐந்து கோடி ரூபாய் அப­ரா­தம் விதிக்­கப்­படும். இந்­தி­யா­வில் இயங்­கும் சீன நிறு­வ­னங்­கள், சர்­வ­தேச பாது­காப்பு விதி­க­ளின்­படி, ஸ்மார்ட் போன்­களை தயா­ரிக்­கின்­ற­னவா என்­பது குறித்து, முழு­மை­யான அறிக்கை அளிக்­கு­மாறு கோரப்­பட்டு உள்ளன.

ஸ்மார்ட் போன் தயா­ரிப்­பின் ஒவ்­வொரு கட்­டத்­தி­லும் செய்­யப்­பட்­டுள்ள பாது­காப்பு அம்­சங்­கள் குறித்து, விரி­வாக விவ­ரிக்­கு­மாறு தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.இயக்­கத் தொகுப்பு, சாப்ட்­வேர் புரோ­கி­ராம்­கள், அப்­ளி­கே­ஷன்­கள், தக­வல் பரி­மாற்­றத்­தில், ‘என்­கி­ரிப்­ஷன்’ வச­தி­கள் ஆகி­யவை தொடர்­பான பாது­காப்­பும், தக­வல் திருட்டை தடுக்க அமைக்­கப்­பட்­டுள்ள பாது­காப்பு அரண்­கள் குறித்­தும், தெளி­வாக குறிப்­பி­டு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்டு உள்­ளது.

சீன நிறு­வ­னங்­கள் மட்­டு­மின்றி, பிற நாடு­க­ளைச் சேர்ந்த, ‘ஆப்­பிள், சாம்­சங், பிளாக் பெரி’ ஆகிய நிறு­வ­னங்­க­ளுக்­கும், உள்­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்­கும், ஸ்மார்ட் போன் தக­வல் பாது­காப்பு தொடர்­பாக எடுத்­துள்ள நட­வ­டிக்­கை­கள் குறித்து, வரும், 28க்குள் விளக்­கு­மாறு, ‘நோட்­டீஸ்’ அனுப்­பப்­பட்டுள்­ளது. இந்­தி­யா­வில் மின்­னணு பயன்­பா­டும், அதை தொடர்ந்து, ஸ்மார்ட் போன் வாயி­லான நிதிச் சேவை­களும் அதி­க­ரித்­துள்­ள­தால், அமைச்­ச­கம் இந்த நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஆகஸ்ட் 18,2017
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)