பதிவு செய்த நாள்
18 ஆக2017
10:32
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்போசிஸ் தலைவர் மற்றும் இயக்குனர் பதவியை விஷால் சிக்கா ராஜினாமா செய்ததால், அந்நிறுவன பங்குகள் கடுமையாக சரிந்துள்ளது.
சிக்காவின் ராஜினாமாவை ஏற்பட்டதாக இன்போசிஸ் நிர்வாகம் அறிவித்ததை அடுத்து இன்போசிஸ் நிறுவன பங்குகள் 6.09 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஆக.,18, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 210.84 புள்ளிகள் சரிந்து 31,584.62 புள்ளிகளாகவும், நிப்டி 62.20 புள்ளிகள் சரிந்து 9841.95 புள்ளிகளாகவும் உள்ளன.
ஐடிசி, மகேந்திரா அன் மகேந்திரா, பார்தி இன்போடெல், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் மதிப்பு ஏற்றத்துடன் காணப்பட்ட போதிலும், இன்போசிஸ், எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|