பதிவு செய்த நாள்
18 ஆக2017
17:45

ஜூன் 18, 2017 அன்று நடைபெற்ற 17ஆவது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் தான், மிகவும் வரவேற்கப்பட்ட அந்த முடிவை நடைமுறைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. ஜி.எஸ்.டி., சகாப்தத்துக்கான முதல் இரண்டு மாதத்துக்கான Form GSTR 1 மற்றும் Form GSTR 2 போன்றவற்றில் இன்வாய்ஸ் அடிப்படையில் ரிட்டர்னை தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இந்த செயல்முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிரமங்கள் குறித்த, பல்வேறு வணிக மற்றும் தொழில் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்றும், நாடு முழுவதும் ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்துவதை எளிதாக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களின் இன்வர்ட்(inward) மற்றும் அவுட்வர்ட் (outward) சப்ளைகள் பற்றிய சுருக்கமான விவரத்தை தெரிவிக்கும் வகையில், ரிட்டர்ன் தாக்கல் செய்வது எளிதாக இருந்தால், நிச்சயம் இந்த நடைமுறை வெற்றிகரமாக அமையும். எனினும், மேற்குறிப்பிட்ட இரு மாதங்களுக்கான இன்வாய்ஸ் பற்றிய விவரங்களையும் பிற்பாடு அவசியம் தாக்கல் செய்தாக வேண்டும்.
இந்த கெடு தேதி நீட்டிப்பால், கூடுதலாக 25 வேலைநாட்கள் கால அவகாசம் கிடைப்பதுமட்டுமல்ல, தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம் மற்றும் அபராதமும் இந்த குறிப்பிட்ட காலத்துக்கு தவிர்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|