பதிவு செய்த நாள்
19 ஆக2017
07:29

புதுடில்லி : எஸ்.இ.எப்.எல்., என, சுருக்கமாக அழைக்கப்படும், ஸ்ரி எக்யுப்மென்ட் பைனான்ஸ் நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க இயந்திரங்களுக்கு கடனுதவி வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஹேமந்த் கனோரியா கூறியதாவது: நிறுவனத்தின் இயக்குனர் கூட்டத்தில், பங்கு வெளியீட்டில் இறங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், நிறுவனத்திற்கு வரும் புதிய மூலதனம் வாயிலாக, வளர்ச்சி இலக்கை எட்ட முடியும். அத்துடன், முதலீட்டாளர்களின் பங்குகளுக்கு கூடுதல் மதிப்பும் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள், அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளதால், கட்டுமானம் மற்றும் சுரங்கப் பணிகளுக்கான இயந்திரங்களின் தேவை அதிகரித்துள்ளது.
இது, நிறுவனத்தின் கடன் வளர்ச்சிக்கு உதவிகரமாக உள்ளது. வாடிக்கையாளர்கள், இயந்திரங்களை வாங்க அல்லது குத்தகைக்கு பெறுவதற்கு தேவையான நிதியை, நிறுவனம் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பங்கு வெளியீடு குறித்த விபரங்கள், விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|