தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைவு ... மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ...
ஜி.எஸ்.டி., ரிட்டர்னை (எகுகூகீ-3ஆ) தாக்கல் செய்ய காலக்கெடு எவ்வளவு நாள்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2017
14:58

ஜூன் 18, 2017 அன்று நடைபெற்ற 17ஆவது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் தான், மிகவும் வரவேற்கப்பட்ட அந்த முடிவை நடைமுறைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. ஜி.எஸ்.டி., சகாப்தத்துக்கான முதல் இரண்டு மாதத்துக்கான Form GSTR 1 மற்றும் Form GSTR 2 போன்றவற்றில் இன்வாய்ஸ் அடிப்படையில் ரிட்டர்னை தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

இந்த செயல்முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிரமங்கள் குறித்த, பல்வேறு வணிக மற்றும் தொழில் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்றும், நாடு முழுவதும் ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்துவதை எளிதாக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களின் இன்வர்ட்(inward) மற்றும் அவுட்வர்ட் (outward) சப்ளைகள் பற்றிய சுருக்கமான விவரத்தை தெரிவிக்கும் வகையில், ரிட்டர்ன் தாக்கல் செய்வது எளிதாக இருந்தால், நிச்சயம் இந்த நடைமுறை வெற்றிகரமாக அமையும். எனினும், மேற்குறிப்பிட்ட இரு மாதங்களுக்கான இன்வாய்ஸ் பற்றிய விவரங்களையும் பிற்பாடு அவசியம் தாக்கல் செய்தாக வேண்டும்.

இந்த கெடு தேதி நீட்டிப்பால், கூடுதலாக 25 வேலைநாட்கள் கால அவகாசம் கிடைப்பது மட்டுமல்ல, தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம் மற்றும் அபராதமும் இந்த குறிப்பிட்ட காலத்துக்கு தவிர்க்கப்படுகிறது.

கெடு தேதிகள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன:

மாற்றியமைக்கப்பட்டுள்ள காலக்கெடு

மாதம்

GSTR-3B : ஆகஸ்ட் 20, 2017 (ஜூலை 2017), செப்டம்பர் 20, 2017 (ஆகஸ்ட் 2017)

GSTR-1 : செப்டம்பர் 1 – 5, 2017 (ஜூலை 2017), செப்டம்பர் 16-20, 2017 (ஆகஸ்ட் 2017)

GSTR-2 : செப்டம்பர் 6 – 10, 2017 (ஜூலை 2017), செப்டம்பர் 21-25, 2017 (ஆகஸ்ட் 2017)

GSTR-3B தாக்கல் செய்தல்

GSTR-3B படிவத்திலுள்ள 6 அட்டவணைகள் ஒவ்வொன்றிலும் குறிப்பிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்:

அட்டவணை 1: ரிவர்ஸ் சார்ஜ் விதிக்கப்படக்கூடிய இன்வர்ட் சப்ளைகள் மற்றும் அவுட்வர்ட் சப்ளைகள் பற்றிய விவரங்கள்:

இந்த அட்டவணையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சப்ளைகளுக்கு வரிவிதிப்புக்கு உட்பட்டவை (CGST, SGST / UTGST, IGST & Cess) பற்றிய விவரங்களுடன், மொத்த வரிவிதிப்பு மதிப்பையும் (மாநிலங்களுக்கு இடையில் (interstate), மாநிலத்துக்குள் (intrastate) இரண்டுக்கும்) இந்த அட்டவணையில் காண்பிக்க வேண்டும்:

வரி செலுத்தவேண்டிய அவுட்வர்ட் சப்ளைகள் (other Zero Rate, Nil Rate மற்றும் exempted வகைப்பட்டவை)

வரி செலுத்த வேண்டிய அவுட்வர்ட் சப்ளைகள் (Zero Rated)

Nil Rated மற்றும் exempted கோரும் அவுட்வர்ட் சப்ளைகள்

ரிவர்ஸ் சார்ஜ் அடிப்படையில் செலுத்தப்படக்கூடிய இன்வர்ட் சப்ளைகள்

ஜி.எஸ்.டி.க்கு உட்படாத (Non-GST) அவுட்வர்ட் சப்ளைகள்

அட்டவணை 2: மாநிலங்களுக்கிடையில், பதிவு செய்யாத நபர்கள்(unregistered persons), கம்போசிஷன் டீலர்கள்(composition dealers) மற்றும் யு.ஐ.என்.(UIN) வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட சரக்குகள் விவரம்

இந்த அட்டவணையில், சப்ளை அனுப்பும் இடம், வரி விதிக்கக்கூடிய மொத்த மதிப்பு, மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரிவுகளில் அடங்குகிறவர்களுக்கு அனுப்பட்டுள்ள இன்டர்ஸ்டேட் சப்ளைகள் மீதான IGST ஆகியவற்றின் விவரங்கள் அளிக்கப்பட வேண்டும்.

மாநிலங்களுக்கிடையில், பதிவுசெய்யப்படாத நபர்களுக்கு அனுப்பப்பட்ட சரக்குகள்

மாநிலங்களுக்கிடையில், கம்போசிஷன் டீலர்களுக்கு அனுப்பபட்ட சரக்குகள்

மாநிலங்களுக்கிடையில், UIN பெற்றிருப்பவர்களுக்கு அளிக்கப்பட்ட சரக்குகள் விவரம்

அட்டவனை 3: தகுதியான இன்புட் டாக்ஸ் கிரெடிட் (ITC) பெறுவதற்கான விவரங்கள்

இந்த அட்டவணையில் கீழ்க்கண்ட விவரங்களை நீங்கள் அளிக்க வேண்டும்:

ITC இருப்பு (முழுமையாக, பகுதியளவு எப்படியிருந்தாலும்): ஐ.டி.சி., கோரும் கீழ்க்கண்ட இன்வர்ட் சப்ளைகள பற்றி தனித்தனியாக விவரங்களை நீங்கள் அளிக்க வேண்டும்:

சரக்கு இறக்குமதி: இறக்குமதி செய்யப்பட்ட சர்க்குகளுக்கு செலுத்தப்பட்ட IGST டாக்ஸ் கிரெடிட் விவரம்

சேவை இறக்குமதி: இறக்குமதி செய்யப்பட்ட சேவைகளுக்கு செலுத்தப்பட்ட IGST டாக்ஸ் கிரெடிட் விவரம்

ரிவர்ஸ் சார்ஜுக்கு உட்பட்ட இனவர்ட் சப்ளைகள்: இறக்குமதி சரக்குகள் மற்றும் சேவைகள் தவிர்த்த, ஸ்பான்ஷர்ஷிப் சேவைகள், யு.ஆர்.டி. இடமிருந்து வாங்கப்பட்டவை, இன்னும் பிற, போன்ற ரிவசர்ஸ் சார்ஜுக்கு உட்பட்ட இன்வர்ட் சப்ளைகளுக்கு செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி.யின் டாக்ஸ் இன்புட் கிரெடிட்டை குறிப்பிட வேண்டும்.

ஐ.எஸ்.டி.யிடமிருந்து பெறும் இன்வர்ட் சப்ளைகள்: இன்புட் சர்வீஸ் டிஸ்ட்ரிபியூட்டர்(ISD) இடமிருந்து பெற்ற இன்புட் டாக்ஸ் கிரெடிட்.

மற்ற அனைத்து ITC : மேலே சொல்லப்பட்டவற்றில் இடம்பெறாத, பிற இன்வர்ட் சப்ளைகளின் ITC விவரங்கள் இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.

ரிவர்ஸ் செய்யப்பட்ட ITC: இன்புட் பயன்பாடு/ இன்புட் சேவைகள்/ பிசினஸ் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மூதலீட்டுச் சரக்கு (capital goods), அல்லது விலக்களிக்கப்பட்ட சப்ளையர்களுக்காக பகுதியளவு பயன்படுத்தப்பட்டது, இவற்றின் மீதான reversibile ITCயை நீங்கள் அளிக்க வேண்டும். மேலும், முதலீட்டுச் சரக்குகள், பிளான்ட் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றின் வரியில் தேய்மானம் கோரப்பட்டால், பின்னர் ITC அனுமதிக்கப்படாது. அத்தகைய மாற்றங்கள் இந்த அட்டவணையில் அளிக்கப்பட வேண்டும்.

தகுதியான ITC.: கிடைக்கக் கூடிய ITCயில் இருந்து மாற்றியமைக்கப்பட்ட ITCயை கழிப்பதன் மூலம் கணக்கிடப்படும்.

தகுதியற்ற ITC: இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெற தகுதியில்லாத, நெகடிவ் லிஸ்டில் பட்டியலிடப்பட்டிருக்கும் இன்வர்ட் சப்ளைகள் மீது செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி பற்றிய விவரங்களை நீங்கள் அளிக்க வேண்டும்.

அட்டவணை 4: விலக்களிக்கப்பட்ட(exempt), nil-rated மற்றும் non-GST இன்வர்ட் சப்ளைகள் பற்றிய விவரம்:

இந்த அட்டவணையில் பின்வருவனவற்றுக்கான இன்டர்ஸ்டேட் மற்றும் இன்ட்ரா ஸ்டேட் விவரங்களை நீங்கள் அளிக்க வேண்டும்.

Composition dealers, exempt மற்றும் nil-rated இன்வர்ட் சப்ளைகள்

ஜி.எஸ்.டி. அல்லாத (non-GST ) இன்வர்ட் சப்ளைகள்

அட்டவணை 5 : வரி செலுத்துதல்

நீங்கள் சுயமாக உறுதிபடுத்திக்கொண்ட செலுத்த வேண்டிய வரி பற்றிய விவரங்களை இந்த அட்டவணையில் குறிப்பிட வேண்டும். பின்வரும் விவரங்களில் இருந்து செலுத்த வேண்டிய வரியை அறியலாம்:

ஐடிசி (CGST, SGST / UTGST, IGST & Cess) மூலமாக செலுத்தப்பட்ட வரி

TDS / TCS ஆக செலுத்தப்பட்ட வரி

ரொக்கமாக செலுத்தப்பட்ட வரி / செஸ்

வட்டி & தாமத கட்டணங்கள்

அட்டவணை 6: TDS / TCS கிரெடிட்

இந்த அட்டவணையில் CGST, SGST / UTGST & IGST ஆகியவற்றுக்கான TDS மற்றும் TCS, விவரங்களை நீங்கள் குறிப்பிட வேண்டும். ஆனாலும், பிசினஸ் என்ற வகையில், ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்துள்ள ஆரம்ப காலத்தில் இவற்றை செயல்படுத்துவது தள்ளிப்போடப்பட்டுள்ளதால், அடுத்த அறிவிப்பு வரும்வரை நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

குறிப்பு: உங்கள் GSTR 3Bஐ தாக்கல் செய்யும் போது, அனைத்து காலச்சூழலிலும் பயன்படுத்தத்தக்க, மொத்த வரிவிதிப்புக்குரிய மதிப்பை பின்வருமாறு கணக்கிடலாம்:

வரிவிதிப்புக்குரிய மதிப்பு = இன்வாய்ஸ்களின் மதிப்பு + டெபிட் நோட்களின் மதிப்பு – கிரெடிட் நோட்களின் மதிப்பு + அதே மாதத்தில் கொடுக்கப்பட்டிருக்காத இன்வாய்ஸ்களுக்கு பெறப்பட்ட அட்வான்ஸின் மதிப்பு – இன்வாய்ஸ்களுக்கு பொருந்த சரிகட்டப்பட்ட அட்வான்ஸ்களின் மதிப்பு

GSTR-3B உள்ளிட்ட ஜி.எஸ்.டி. ரிட்டர்ன் மற்றும் அதைத் தொடர்ந்து தாக்கல் செய்ய வேண்டிய GSTR-1 மற்றும் GSTR-2 போன்றவற்றை, Tally.ERP 9 போன்ற ஜி.எஸ்.டி.ரெடி சாப்ட்வேர்கள் மூலமாக எளிதாக தாக்கல் செய்யலாம் (https://tallysolutions.com/).

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)