பதிவு செய்த நாள்
20 ஆக2017
03:16

வரி விலைப் பட்டியலை, வழங்கல் நடந்தவுடன் அளிக்க வேண்டுமா அல்லது இதில் ஏதாவது சலுகை உள்ளதா?– காசிம், ஆற்காடுபொதுவாக, வழங்கல் நடந்தவுடன் வரி விலைப் பட்டியலை வழங்க வேண்டும். சில குறிப்பிட்ட தருணங்களில், வழங்கல்நடந்த தேதியிலிருந்து, 30 நாட்களுக்குள், வரி விலைப் பட்டியலை வழங்க சலுகை உள்ளது.
இணக்க வரி நிலையை தேர்வு செய்த ஒரு நபர், எந்த சூழலிலும் வரி வசூலிக்கக் கூடாதா?– நிஷாந்த், பெருந்துறைஆம். இணக்க வரி நிலையை தேர்வு செய்த நபர், நுகர்வோர் மற்றும் பதிவு செய்யப்பட்ட நபரிடமிருந்து வரி வசூல் செய்யக் கூடாது.
சார், முந்தைய சட்டத்தின்படி இருந்த, உள்ளீட்டு வரி பயனை பெறுவதற்கு, டிரான்- – 1 படிவம் தாக்கல் செய்ய வேண்டும் என, கூறினீர்கள். அதில், ‘சி’ படிவ விபரத்தை, ஒவ்வொன்றாக தெரிவிக்க வேண்டுமா அல்லது மொத்தத் தொகையை தெரிவித்தால் போதுமா?– காந்தியன், வாழவல்லான்‘சி, எப், எச், ஐ’ படிவங்களின் விபரங்களை, சீரியல் நம்பர் வாரியாகதெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால் மட்டுமே, உள்ளீட்டு வரி பயன் கிடைக்கும்.நாங்கள், மூங்கிலால் ஆன மரச் சாமான்கள் மற்றும் ஊஞ்சல்களை தயார் செய்து, விற்பனை செய்து வருகிறோம். இதற்கு, எத்தனை சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும்? எங்களால், இணக்க வரி நிலையை தேர்வு செய்ய இயலுமா? இது குறித்து விளக்கவும்.– குருபிரசாத், அவிநாசிமூங்கிலினால் செய்யப்பட்ட மர வேலைப்பாடுகள் மற்றும் ஊஞ்சல்களுக்கு, 18 சதவீதம் வரி விதிக்கப்படும். உங்களால், இணக்க வரி சட்டத்தை தேர்வு செய்ய இயலும்.
சார், நாங்கள், கோழி முட்டை வியாபாரம் செய்கிறோம். எங்களுடைய ஆண்டு விற்பனை, ஒரு கோடி ரூபாயை தாண்டும். வெளி மாநில கொள்முதல், 20 லட்சம் ரூபாயை தாண்டிவிடும். நாங்கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டுமா?– கிருஷ்ணராஜன், நாமக்கல்நீங்கள் செய்யும் வியாபாரத்திற்கு, 100 சதவீத வரி விலக்கு உள்ளது. நீங்கள் முட்டை வியாபாரம் மட்டுமே செய்தால், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய அவசியமில்லை. வெளி மாநில கொள்முதல் தொகையால், எந்த பாதிப்பும் இல்லை.
சாதாரண வரி நிலையை தேர்வு செய்த நபர், வழங்கலில் ஈடுபடவில்லை என்றாலும், படிவம் – 3பி தாக்கல் செய்ய வேண்டுமா?– சந்தானம், பர்கூர்ஆம். பதிவு செய்துள்ள நபர், ஜூலை மாதத்தில் வழங்கலில் ஈடுபடவில்லை என்றாலும், படிவம் – 3பி தாக்கல் செய்ய வேண்டும். இது, இணக்க வரி நிலையை தேர்வு செய்த நபர்களுக்கு பொருந்தாது.‘டெபிட் அல்லது கிரெடிட் கார்டு’ மூலம், ஜி.எஸ்.டி.,யை செலுத்த முடியுமா?– சோமேஸ்வரன், அரக்கோணம்நீங்கள், 10 ஆயிரம் ரூபாய் வரை, வரி செலுத்த வேண்டியதிருந்தால், அதை பணமாக வங்கியில் செலுத்த இயலும். அதற்கு மேல் செலுத்த வேண்டியதிருந்தால், நீங்கள், இணையதள வங்கி சேவை மூலமாகவோ அல்லது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமாகவோ செலுத்த முடியும்.
ஜி.எஸ்.டி., புதிய பதிவிற்கு, எந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்த முடியுமா? மேலும், வணிகரே, நேரடியாக இணையதளத்தில் பதிவு செய்ய முடியுமா?– பொற்செல்வி, மதுராமங்கலம்நீங்கள், www.gst.gov.in எனும் இணையதளத்திற்கு சென்று, ஜி.எஸ்.டி., புதிய பதிவை செய்து கொள்ளலாம். வணிகரே, நேரடியாக பதிவு செய்து கொள்ள வழியுண்டு. இருப்பினும், நீங்கள் வரி ஆலோசகர் உதவியை நாடினால், பிழையில்லாமல் பதிவு செய்ய முடியும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|