பதிவு செய்த நாள்
20 ஆக2017
03:17

புதுடில்லி : நடப்பு, 2016 –- 17ம் பருத்தி பருவத்தில், அதன் உற்பத்தி, கடந்த பருவத்தை விட, அதிகமிருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, ஜவுளித் துறை ஆணையர் கவிதா குப்தா கூறியதாவது:செப்டம்பருடன் முடியும் நடப்பு பருத்தி பருவத்தில், அதன் உற்பத்தி, 3.76 சதவீதம் அதிகரித்து, 345 லட்சம் பொதிகளாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, 2015- – 16ம் பருத்தி பருவத்தில், 332 லட்சம் பொதிகளாக இருந்தது.நடப்பு பருவத்தில், 108.45 லட்சம்ஹெக்டர் பரப்பில், பருத்தி பயிர் செய்யப்பட்டது. இது, கடந்த ஆண்டு பயிரிடப்பட்ட, 122.92 லட்சம் ஹெக்டர் பரப்பை விட குறைவாகும்.இந்நிலையிலும், பருத்தி உற்பத்தி அதிகரிக்கும் என, தெரிகிறது. இதற்கு, பஞ்சாப், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில், பூச்சி தாக்குதல் குறைவாக இருந்ததே காரணம்.பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளால், 2017 – -18ம் பருத்தி பருவத்தில், அதன் பயிர் பரப்பு, 119 லட்சம் ஹெக்டராக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பருப்பு பயிரிடப்பட்ட சில இடங்களில், பருத்தி விவசாயம் நடைபெறுகிறது.இந்திய வேளாண் ஆய்வு கழகம், அதிக சாகுபடிக்கான, பாரம்பரிய பருத்தி விதைகளை உருவாக்கி வருகிறது. இவை, வரும் பருவத்தில், வர்த்தக ரீதியில் பயன்பாட்டிற்கு வரும் என்பதால், பருத்தி உற்பத்தி மேலும் அதிகரிக்கும். மரபணு மாற்றப்பட்ட, ‘பி.டி., பருத்தி’ சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|