நியாயமற்ற சந்தைப்படுத்தும் முறைக்கு கடிவாளம் மருந்து விலையை குறைக்க நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு அமைக்க முடிவுநியாயமற்ற சந்தைப்படுத்தும் முறைக்கு கடிவாளம் மருந்து விலையை குறைக்க ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.05 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.05 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘பாரத் 22’ நிதியின் முக்­கிய அம்­சங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2017
05:44

மத்­திய அரசு சார்பில் அறி­விக்­கப்­பட்­டுள்ள இரண்­டா­வது, இ.டி.எப்., நிதி­யான, ‘பாரத் 22’ நிதி முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில் பர­வ­லான எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில், இந்த இ.டி.எப்., நிதியின் முக்­கிய அம்­சங்கள் பற்றி ஓர் அறி­முகம்:

இ.டி.எப்., என குறிப்­பி­டப்­படும், ‘எக்ஸ்சேன்ஞ் டிரேட் பண்ட்’ நிதி மியூச்­சுவல் பண்ட் வகை­களில் ஒன்று. பொது­வாக, இ.டி.எப்., நிதிகள் முத­லீட்­டா­ளர்­க­ளிடம் இருந்து பணத்தை திரட்டி அந்த நிதியை குறிப்­பிட்ட குறி­யீட்டை, (இன்டெக்ஸ்) சேர்ந்த பங்­கு­களில் முத­லீடு செய்­கின்­றன. இந்த நிதி, அவை முத­லீடு செய்யும் குறி­யீட்டின் செயல்­பாட்டை பிர­தி­ப­லிக்கும். பல வித­மான, இ.டி.எப்., நிதிகள் உள்­ளன. இவை பங்­குச்­சந்­தையில் பட்­டி­ய­லி­டப்­பட்டும், பரி­வர்த்­தனை செய்­யப்­படும். இவற்றை யூனிட்­க­ளாக அப்­போ­தைய சந்தை விலையில் வாங்கி விற்­கலாம்.

மத்­திய அரசு சார்பில் ஏற்­க­னவே சில ஆண்­டு­க­ளுக்கு முன், சி.பி.எஸ்.இ., – இ.டி.எப்., நிதி அறி­முகம் செய்­யப்­பட்­டது. எரி­சக்தி துறையை மைய­மாக கொண்ட, 10 நிறு­வன பங்­கு­களில் முத­லீடு செய்த இந்த நிதியின் மூலம் மூன்று கட்­டங்­க­ளாக, 11 ஆயி­ரத்து, 500 கோடி ரூபாய் திரட்­டப்­பட்­டது. அண்­மையில், இந்த வரி­சையில் ‘பாரத் 22’ இ.டி.எப்., நிதி அறி­முகம் செய்­யப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிதி எரி­சக்தி, நிதி, நுகர்வோர் துறை உள்­ளிட்ட ஆறு துறை­களைச் சேர்ந்த, 22 நிறு­வன பங்­கு­களில் முத­லீடு செய்து அவற்றின் செயல்­பாட்டை ர­தி­பலிக்கும் வகையில் அமையும்.

அரசு நிறு­வ­னங்கள், பொதுத்­துறை வங்­கிகள் மற்றும் அரசு பங்­கு­களை கொண்ட தனியார் நிறு­வ­னங்கள் என, இவை அமைந்­துள்­ளன. அரசின் தேவைக்­கேற்ப இவை ஒவ்­வொரு கட்­ட­மாக வெளி­யி­டப்­படும். பின், பங்­குச்­சந்­தையில் இவை பட்­டி­ய­லி­டப்­பட்டு பரி­வர்த்­தனை செய்­யப்­படும். மத்­திய அரசின் பங்கு விலக்கல் திட்­டத்தின் ஒரு பகு­தி­யாக இந்த நிதி அமை­கி­றது. சில ஆண்­டு­களுக்கு முன் வெளி­யி­டப்­பட்ட, சி.பி.எஸ்.இ., – இ.டி.எப்., நிதி நல்ல செயல்­பாட்டை கொண்­டு உள்ள நிலையில், புதிய நிதியும் முத­லீட்­டா­ளர்­களை ஈர்க்கும் என கரு­தப்­ப­டு­கி­றது.

குறிப்­பிட்ட துறை மட்டும் அல்­லாமல் பல துறை­களில் பங்­கு­களில் பர­வ­லாக்­கப்­பட்­டுள்­ளன. மேலும், பி.எப்., அமைப்பு, இ.டி.எப்., மூல­மான பங்­குச்­சந்தை முத­லீட்டை அதி­க­ரிக்க திட்­ட­மிட்டு­இ­ருப்­பதும் சாத­க­மான அம்­ச­மாக கரு­தப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)