நியாயமற்ற சந்தைப்படுத்தும் முறைக்கு கடிவாளம் மருந்து விலையை குறைக்க நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு அமைக்க முடிவுநியாயமற்ற சந்தைப்படுத்தும் முறைக்கு கடிவாளம் மருந்து விலையை குறைக்க ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.05 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.05 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சொந்த கார்.. வாடகை கார்..
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2017
05:47

சொந்த வீடு கனவு போலவே, சொந்­த­மாக கார் வாங்க வேண்டும் என்­பதும் நடுத்­தர வர்க்­கத்தின் கன­வாக இருக்­கி­றது. வீட்­டுக்­கடன் போலவே, வாக­னக்­கடன் மூலம் சொந்த கார் கன­வையும் நிறை­வேற்­றிக்­கொள்ளும் வாய்ப்பு அதி­க­மாக இருக்­கி­றது. எனினும், தற்­போது கால் டாக்சி நிறு­வ­னங்­களின் சேவை பர­வ­லாகி வரும் நிலையில், சொந்த காரை விட வாடகை காரை பயன்­ப­டுத்­து­வது சிறந்­ததா எனும் கேள்வி எழுந்­துள்­ளது.

செலவு ஒப்­பீடு:
போக்­கு­வ­ரத்து தேவைக்கு சொந்த கார் பயன்­பாடு சிறந்­ததா... அல்­லது வாடகை கார் சிறந்­ததா என்­பதை தீர்­மா­னிக்க இரண்­டுக்­கு­மான செலவை ஒப்­பிட்டு பார்க்க வேண்டும். சொந்த கார் எனில், வாகனக் கட­னுக்­கான தவணை, பெட்ரோல் செலவு, பரா­ம­ரிப்பு செலவு ஆகி­ய­வற்றை கணக்கில் எடுத்­துக்­கொள்ள வேண்டும். கால் டாக்சி உள்­ளிட்ட வாடகை கார் எனில் வாடகை கட்­டணம் மற்றும் பயன்­பாட்டை கருத்தில் கொள்ள வேண்டும்.

15,000 கி.மீ.,:
சொந்த கார் – வாடகை கார் விவாதம் தொடர்ந்து நடை­பெற்று வந்­தாலும், இதற்­கான பதில் மாறு­ப­டக்­கூ­டி­ய­தா­கவே இருக்­கி­றது. இந்­நி­லையில், அண்­மையில், ‘கிரிசில் ரிசர்ச்’ அமைப்பு நடத்­திய ஆய்வு, இந்­திய சூழலில் சொந்த கார் வைத்­தி­ருப்போர், ஆண்­டுக்கு, 15 ஆயிரம் கி.மீ.,க்கு மேல் பயன்­ப­டுத்­தினால் தான் அது லாப­க­ர­மாக இருக்கும் என தெரி­வித்­துள்­ளது. கி.மீ.,க்கு, 22 ரூபாய் பயன்­பாட்டு செலவு எனும் அடிப்­ப­டையில் இது கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.

12,000 கி.மீ.,:
பொது­வாக இந்­திய கார்கள் ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக, 12 ஆயிரம் கி.மீ., பய­ணிப்­ப­தாக கரு­தப்­ப­டு­கி­றது. இதன் அடிப்­ப­டையில் பார்த்தால், சரா­ச­ரிக்கும் குறை­வான பயன்­பாடு கொண்­ட­வர்­க­ளுக்கு, சொந்த கார் செலவு மிக்­க­தாக அமை­யலாம். இவர்கள் வாடகை காரை பயன்­ப­டுத்­து­வதே சிக்­க­ன­மா­ன­தாக இருக்கும். வாடகை கார் எனும் போது பரா­ம­ரிப்பு பிரச்­னை­களும் இல்­லாமல் இருக்­கி­றது.

முதல் கார் :
சொந்த கார் – வாடகை கார் ஒப்­பீட்டில் செலவு ஒரு முக்­கிய விஷ­ய­மாக அமைந்­தாலும், இந்­தி­யர்­களில் பெரும்­பா­லானோர் சொந்த காரை விரும்பி நாடு­வர் என கரு­தப்­ப­டு­கி­றது. கார், அந்­தஸ்தின் அடை­யா­ள­மாக இருப்­பதால், முதல் முறை கார் வாங்க இருப்­ப­வர்கள், செலவை ஒரு முக்­கிய அம்­ச­மாக கரு­தாமல், நிதி நிலை கைகொ­டுக்கும் போது சொந்த காரை வாங்­கவே விரும்­பு­வர்.

வாடகை கார் ஆத­ரவு:
ஓலா, உபெர் உள்­ளிட்ட கால்­டாக்சி நிறு­வ­னங்கள் அதிக அளவில் கார்­களை வாங்கி வரு­வதால், கார் விற்­ப­னையில் வாடகை கார்­களின் பங்கு அதி­க­ரித்­துள்­ளது. தற்­போ­தைய வேகத்தில், 2020ம் ஆண்டு வாக்கில், கார் விற்­ப­னையில் வாடகை காரின் பங்கு, 20 சத­வீ­த­மா­கவும், 2030ல், 30 சத­வீ­த­மா­கவும் இருக்கும் என கரு­தப்­ப­டு­கி­றது. வாடகை கார் எனில், அவை முழு ஆயு­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­படும் வாய்ப்பும் உள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)