‘நிடி ஆயோக்’ சி.இ.ஓ., குழுக்கள் அமைப்பு; வேலைவாய்ப்பை உருவாக்க ஆலோசனை‘நிடி ஆயோக்’ சி.இ.ஓ., குழுக்கள் அமைப்பு; வேலைவாய்ப்பை உருவாக்க ஆலோசனை ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.06 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.06 ...
322 திட்டங்களை முடிப்பதில் தாமதம்; ரூ.1.71 லட்சம் கோடி கூடுதல் செலவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2017
06:25

புதுடில்லி : ‘அடிப்­படை கட்­ட­மைப்பு வச­திக்­கான, 322 திட்டங் ­களின் தாம­தத்­தால், அவற்றை முடிக்க நிர்­ண­யித்த தொகையை விட, கூடு­த­லாக, 1.71 லட்­சம் கோடி ரூபாய் செல­வா­கும்’ என, மத்­திய புள்­ளி­யி­யல் மற்­றும் திட்ட செய­லாக்க அமைச்­ச­கம் தெரி­வித்­து உள்­ளது.

குடி­நீர், மின்­சா­ரம், சாலை, துறை­மு­கம், ரயில், விமான போக்­கு­வ­ரத்து உட்­பட, பல்­வேறு துறை­களில் நடை­பெற்று வரும், அடிப்­படை கட்­ட­மைப்பு வசதி திட்­டங்­கள் குறித்த அறிக்­கையை, அமைச்­ச­கம் வெளி­யிட்டு உள்­ளது.

அதன் விப­ரம்: இந்­தாண்டு, மார்ச், 31 நில­வ­ரப்­படி, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­திக்­கான, 1,231 திட்­டங்­கள் செயல்­பாட்­டில் உள்ளன. இவை, தலா, 150 கோடி ரூபாய் மற்­றும் அதற்கு மேற்­பட்ட மதிப்­பி­லான திட்­டங்­கள் ஆகும். இவற்­றின் மொத்த மதிப்பு, 15.59 லட்­சம் கோடி ரூபாய். இத்­திட்­டங்­களில், ஒன்­பது வகைப் பணி­கள், நிர்­ண­யிக்­கப்­பட்ட காலத்­திற்கு முன்­பா­கவே முடிக்­கப்­பட்டு வரு­கின்றன. ஏற்­க­னவே நிர்­ண­யித்த இலக்­கின்­படி, 324 திட்­டப் பணி­கள் நடக்­கின்றன.

ஒப்­பந்­த­தா­ரர்­கள் மேற்­கொண்டு வரும், 327 பணி­களில் தாம­தம் ஏற்­பட்­டுள்­ளது. குறித்த காலத்­தில் முடிக்­கப்­ப­டா­த­தால், 322 திட்­டங்­க­ளுக்­கான செல­வில், 1.71 லட்­சம் கோடி ரூபாய் அதி­க­ரித்­துள்­ளது. திட்­டங்­களை முடிப்­ப­தற்­கான விதி­மு­றை­கள், தற்­போது மறு­வ­ரை­யறை செய்­யப்­பட்டு உள்ளன. இதன்­படி கணக்­கிட்­டால், தாம­த­மான திட்­டங்­களின் எண்­ணிக்கை, 253 ஆக குறை­யும்.

தாம­த­மான, 327 திட்­டங்­களில், 63 திட்­டங்­கள், 1 – 12 மாதங்­கள் வரை தாம­த­மாகி உள்ளன. இவை தவிர்த்து, 63 திட்­டங்­கள், 13 – 24 மாதங்­கள் தாம­த­மாக நடக்­கின்றன. மேலும், 119 திட்­டங்­களில், 25 – 60 மாதங்­கள் தாம­தம் ஏற்­பட்­டுள்­ளது. ஆறு மாதங்­க­ளுக்­கும் மேலாக, 311 திட்­டங்­கள் தாம­த­மாக நடை­பெ­று­கின்றன. 231 திட்­டங்­க­ளுக்­கான செலவு, தலா, 100 கோடி ரூபாய்க்­கும் அதி­க­மாக உயர்ந்­துள்­ளது.

இந்­தாண்டு மார்ச் நில­வ­ரப்­படி, மதிப்­பீட்­டிற்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்ட திட்­டங்­களில், 7.46 லட்­சம் கோடி ரூபாய் செல­வி­டப்­பட்டு உள்­ளது; இது, இத்­திட்­டங்­களின் மொத்த மதிப்­பில், 43 சத­வீ­தம் ஆகும். கால தாம­தம் உள்­ளிட்ட பல்­வேறு கார­ணங்­க­ளால், மதிப்­பீட்­டிற்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்ட, 1,231 திட்­டங்­களின் மொத்த செல­வி­னம், 17.31 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இது, நிர்­ண­யிக்­கப்­பட்ட திட்­டச் செலவை விட, 1.71 லட்­சம் கோடி ரூபாய் அதி­க­மா­கும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
நிலம் கைய­கப்­ப­டுத்­து­வ­தில் ஏற்­படும் சிக்­கல், சுற்­றுச்­சூ­ழல் துறை எதிர்ப்பு போன்ற கார­ணங்­க­ளால், பல திட்­டங்­கள் முடி­வ­டைய தாம­த­மா­கின்றன.

மொத்த மதிப்பு:
இந்­தாண்டு, ஆக., 15 நில­வ­ரப்­படி, மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­களில், அரசு மற்­றும் தனி­யார் துறை­யில், 52 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பி­லான, 8,882 அடிப்­படை கட்­ட­மைப்பு வசதி திட்­டங்­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)