கரன்சி நிலவரம்கரன்சி நிலவரம் ... இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் பங்கு வெளியிட, ‘செபி’ ஒப்புதல் இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் பங்கு வெளியிட, ‘செபி’ ஒப்புதல் ...
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2017
00:32

சார், நாங்­கள், ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி ரிட்­டர்ன் படி­வம் தாக்­கல் செய்து விட்­டோம். ஆனால், அதில் ஒரு­சில விப­ரங்­கள் தவ­று­த­லாக பதிவு செய்து விட்­டோம். தற்­போது, அதை திருத்­திக் கொள்ள முடி­யுமா?– சுரேஷ், கள்­ளக்­கு­றிச்சிநீங்­கள், ஏற்­க­னவே தாக்­கல் செய்த ரிட்­டர்ன் படி­வத்­தில், மாற்­றம் செய்ய இய­லாது. நீங்­கள், அடுத்த மாதம், ஜி.எஸ்.டி.ஆர்., 1 அல்­லது 2 படி­வம் தாக்­கல் செய்­யும் போது, சரி­யான விப­ரத்தை பதிவு செய்யலாம்.

மின்­னணு முறை­யில், ஜி.எஸ்.டி., டிரான் – 1 படி­வத்தை, தற்­போது தாக்­கல் செய்ய​ முடி­யுமா?– விக்­னேஸ்­வ­ரன், திரு­ந­கர்முடி­யும். ஜி.எஸ்.டி.,​ ​​டிரான் படிவ​ங்கள் தாக்­கல் செய்­வ­தற்­கான வழி­வ­கை­கள் செய்­யப்­பட்டு உள்­ளன. முந்­தைய ​வரி சட்­டத்­தின் உள்­ளீட்டு வரி பயன்­களை பெறு­வ­தற்­காக, ஜி.எஸ்.டி.,​ ​​​​​டிரான்​ – 1 படி­வ­மும்​, சி.டி.டி., ஆவ­ணம் மூலம்,​ ​உள்­ளீட்டு வரி பயன்­களை​ ​பெறு­வ­தற்­காக, ​​டிரான்​ – 3 படி­வ­மும் தாக்­கல் செய்­வ­தற்கு, ஜி.எஸ்.டி., இணை­ய­த­ளத்­தில் வழி­வ­கை­கள் ​செய்­யப்­பட்டு உள்­ளன.

நாங்­கள், முந்­தைய, கலால் வரி ​​சட்­டத்­தின் கீழ் பதிவு செய்­ய­வில்லை. ஆனால், ​2017 ​மே மாதம் வாங்­கிய ​கையி­ருப்பு சரக்­கிற்கு, கலால் வரி செலுத்­திய ஆவ­ணம் எங்­க­ளி­டம் உள்­ளது. அந்த தொகையை, உள்­ளீட்டு வரி பய­னாக பெற இய­லுமா?– வைஜ­யந்தி, அந்­தி­யூர்​நீங்­கள், முந்­தைய, கலால் வரி ​​சட்­டத்­தின் கீழ் பதிவு செய்­ய­வில்லை​ என்­றா­லும், நிபந்­த­னை­களை பூர்த்தி செய்து, நீங்­கள் செலுத்­திய கலால் வரி தொகை​யை,​ உள்­ளீட்டு வரி பய­னாக பெற இய­லும். நீங்­கள், ​​டிரான் –​ 1 படி­வம் மூல­மும், அதை பெற்­றுக் கொள்­ள­லாம்.​

​சார், ஜி.எஸ்.டி., 3பி​ படி­வத்தை ​தாக்­கல் செய்து, அந்த படி­வத்​தை,​ ‘​பிரின்ட்’ செய்து, கையொப்­ப­மிட்டு அனுப்­ப­லாமா​?– லோகாச்­சா­ரி­யன், ஆரணிபதிவு செய்­யப்­பட்ட நபர்​,​ ‘ரிட்­டர்ன்’ ​படி­வத்தை தாக்­கல்​ செய்­து­விட்டு, மின்­னணு ​முறை­யில் ​​கையொப்­ப­மிட (டிஜிட்­டல் சிக்­னேச்­சர்) வேண்­டும். ​படி­வத்தை, ‘​பிரின்ட்’ செய்து, கையொப்­ப­மிட்டு அனுப்ப இய­லாது.

நாங்­கள், தற்­போது, ​ஜி.எஸ்.டி., 3பி படி­வத்தை தாக்­கல் செய்ய உள்­ளோம்​. ​ ​​அதில் கடை­சி­யில், இ.வி.சி., என, குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது​.​ அப்­படி என்­றால் என்ன?​– முரளி, கோயம்­பேடு​‘எலக்ட்­ரா­னிக் வெரி­பி­கே­ஷன் கோ​டு’ என்ற ஆங்­கி­லச் சொல்­லின் சுருக்­கமே,​ இ.வி.சி., என, குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது. பதிவு செய்­யப்­பட்ட நப­ரின் தொலை­பேசி எண்­ணிற்கு, ​ஓ.டி.பி., எனப்­படும், கட­வுச் சொல் ​அனுப்­பப்­படும்​.​ அதன் மூலம், ‘​ரிட்­டர்ன்’ படி­வத்தை உறுதி செய்ய முடி­யும். ​மின்­னணு ​முறை­யில்,​ ​கையொப்­ப­மிட​ வசதி இல்­லா­த­வர்­கள், இதை உப­யோ­கப்­ப­டுத்­திக் கொள்­ள­லாம்.

ஐயா, நாங்­கள், வரி ஆலோ­ச­க­ராக உள்­ளோம். எங்­க­ளு­டைய வாடிக்­கை­யா­ளர், சரக்கு போக்­கு­வ­ரத்து வியா­பா­ரத்­தில் உள்­ளார். அவர் வழங்­கும் அனைத்து ​வழங்­கல்­களும், ​‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில், பெறு­நர் வரி செலுத்த வேண்­டும். இவ்­வாறு இருக்­கை­யில், என் வாடிக்­கை­யா­ளர், ​3பி ​ படி­வம் தாக்­கல் செய்­யும் போது​, வழங்­கல் தொகை மற்­றும் வரி தொகையை எவ்­வாறு குறிப்­பிட வேண்­டும்​?– ராம­நா­தன், நாமக்­கல்அவர் வழங்­கிய மொத்த வழங்­கல்க​ளின்​ தொகையை குறிப்­பிட வேண்­டும். மேலும், வரி தொகையை பூஜ்­ஜி­ய­மாக ​குறிப்­பிட்­டால் போது­மா­னது.​ ஏனெ­னில், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில்​​ பெறு­நர் வரி செலுத்­தும் கார­ணத்­தால், ​அவ்­வாறு குறிப்­பிட வேண்­டும்.

-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)