‘எனக்கு நிறுவனம் தான் கோவில்’ : எல் அண்டு டி தலைவர் ஏ.எம்.நாயக் உருக்கம்‘எனக்கு நிறுவனம் தான் கோவில்’ : எல் அண்டு டி தலைவர் ஏ.எம்.நாயக் உருக்கம் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.05 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.05 ...
டாடா மோட்டார்ஸ் செயல்பாட்டில் பங்கு முதலீட்டாளர்கள் அதிருப்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2017
23:53

மும்பை : டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தின் செயல்­பா­டு­கள் ஏமாற்­றம் அளிப்­ப­தாக, அதன் பங்கு முத­லீட்­டா­ளர்­கள் பகி­ரங்­க­மாக தெரி­வித்து உள்­ள­னர்.

டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தின், 72வது ஆண்டு பொதுக்­குழு கூட்­டம், மும்­பை­யில் நடை­பெற்­றது. இதில், பங்கு முத­லீட்­டா­ளர்­கள், நிறு­வ­னம் மீது பல்­வேறு புகார்­களை தெரி­வித்­த­னர். பய­ணி­யர் கார் பிரி­வின் வரு­வாய் குறைந்­தது; புதிய கார்­களின் அறி­மு­கத்­தில் ஏற்­பட்­டுள்ள தொய்வு; இழப்­பில் உள்ள, ‘நானோ’ கார் தயா­ரிப்பை இன்­னும் தொடர்­வது; ‘டிவி­டெண்டு’ வழங்­கா­தது உட்­பட, பல கேள்­வி­களை சர­மா­ரி­யாக எழுப்­பி­னர்.

அவற்­றுக்கு, டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தின் தலை­வர், என்.சந்­தி­ர­சே­க­ரன் அளித்த பதில்: டாடா மோட்­டார்ஸ் வரு­வா­யில், பய­ணி­யர் கார் பிரிவு, 3 – 4 சத­வீ­தம், அதா­வது, 9,000 கோடி ரூபாய் அள­விற்கே உள்­ளது. இப்­பி­ரி­வில், விற்­பனை மற்­றும் வரு­வாயை உயர்த்த வேண்­டி­யது அவ­சி­யம். சமீ­பத்­தில் அறி­மு­கப்­ப­டுத்­திய புதிய கார்­களின் விற்­பனை நன்­றாக உள்­ளது. எனி­னும், புதிய கார்­களை குறித்த காலத்­தில் அறி­மு­கப்­ப­டுத்­தி­னால், கூடு­தல் செல­வு­களை தவிர்க்­க­லாம்; அதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது.

கார் தயா­ரிப்­பி­லும், அதை கைவி­டு­வ­தி­லும், பல­த­ரப்­பட்ட அம்­சங்­களை கவ­னத்­தில் வைத்து தான் முடி­வெ­டுக்க வேண்­டும். அவ்­வப்­போது, முடிவை மாற்­று­வ­தும் சரி­யாக இருக்­காது. இழப்­பில் உள்ள துணை நிறு­வ­னங்­கள் குறித்து, விரை­வில் முடிவு எடுக்­கப்­படும். நடப்பு நிதி­யாண்­டில், வாகன உற்­பத்தி மற்­றும் விரி­வாக்க நட­வ­டிக்­கை­க­ளுக்­காக, 4,000 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்டு உள்­ளது. முத­லீட்­டிற்கு ஏற்ற வரு­வாய் கிடைக்­குமா என்­பதை, பல வகை­யில் ஆய்வு செய்த பின்னே, முத­லீடு மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது. அத­னால், ‘டிவி­டெண்டு’ அளிக்­கும் நிறு­வ­ன­மாக, டாடா மோட்­டார்ஸ் உய­ரும் என்ற நம்­பிக்கை உள்­ளது. டாடா மோட்­டார்ஸ் தலைமை செயல் அதி­காரி, குன்­டெர் பட்­சக் உடன், எனக்கு எந்த கருத்து வேறு­பா­டும் இல்லை. அது, வெறும் வதந்தி.

நிறு­வ­னத்­தின் மணி மகு­ட­மாக, பிரிட்­ட­னில் செயல்­படும் ஜாகு­வார் லேண்­டு­ரோ­வர் பிரிவு உள்­ளது. கடந்த ஆண்டு, இதன் விற்­பனை, 6 லட்­சத்தை தாண்­டி­யது. எனி­னும், மெர்­சி­டஸ் மற்­றும் பி.எம்.டபிள்யு., நிறு­வ­னங்­கள் கடும் போட்­டி­யாக உள்ளன. இதை சமா­ளித்து, விற்­பனை வளர்ச்­சியை இரட்டை இலக்­கத்­திற்கு கொண்டு செல்ல, மூல­த­னம், நவீன கண்­டு­பி­டிப்­பு­கள், புதிய அறி­மு­கங்­கள் தேவை. இதை­யொட்டி, ஜாகு­வார் லேண்­டு­ரோ­வ­ரில், கடந்த ஆண்டு, அதிக முத­லீடு செய்­யப்­பட்­டது. இந்த முத­லீட்­டிற்­கான டிவி­டெண்டு, 15 கோடி பவுண்­டு­க­ளாக நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.

அத­னால், இப்­பி­ரி­வில் செய்து வரும் முத­லீட்­டில், வரு­வாய் கிடைக்­க­வில்லை என்ற புகா­ரில் உண்­மை­யில்லை. அது போல, ஜே.எல்.ஆர்., தலை­வர், ரால்ப் ஸ்பெத்­துக்கு அதிக ஊதி­யம் வழங்­கு­வ­தாக கூறப்­ப­டு­வ­தும் தவறு. பிற நிறு­வ­னங்­களின் தலை­வர்­க­ளு­டன் ஒப்­பி­டும் போது, அது குறைவு. அவ­ருக்கு, 70 லட்­சம் பவுண்­டு­கள் தான் அளிக்­கப்­ப­டு­கின்றன. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)