கரன்சி நிலவரம்கரன்சி நிலவரம் ... பங்கு வெளியீட்டுக்கு ஆயத்தம்: பந்தன் வங்கி அறிவிப்பு பங்கு வெளியீட்டுக்கு ஆயத்தம்: பந்தன் வங்கி அறிவிப்பு ...
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2017
07:47

இணக்க வரி திட்­டத்தை, தவ­று­த­லாக தேர்வு செய்து விட்­டேன். தற்­போது, நான், சாதா­ரண வரி நிலையை தேர்வு செய்ய விரும்­பு­கி­றேன். அதற்கு என்ன வழி?– மணி குமார், இளை­யான்­குடிஇணக்க வரி திட்­டத்தை தேர்வு செய்த நபர், அதை ரத்து செய்­து­விட்டு, மீண்­டும், சாதா­ரண வரி நிலையை தேர்வு செய்ய முடி­யாது. உங்­க­ளு­டைய வழங்­கல் தொகை, 75 லட்­சம் ரூபாயை தாண்­டும் போது, உங்­க­ளால், சாதா­ரண வரி நிலையை தேர்வு செய்ய முடி­யும்.

ஐயா, உங்­க­ளது இந்த சேவை, மேலும் சிறக்க வாழ்த்­து­கள். நாங்­கள், ஜி.எஸ்.டி., பதிவு பெற்­றுள்­ளோம். எங்­க­ளது உற்­பத்தி பொருளை, பதிவு பெறாத நப­ருக்கு சப்ளை செய்­யும் போது, நாங்­கள் செய்ய வேண்­டி­யது என்ன? தய­வு­செய்து விளக்­க­வும்.– எம்.ஆர்.அசோ­சி­யேட்ஸ், திருச்­செங்­கோடுவாழ்த்­துக்கு நன்றி. பதிவு பெறாத நப­ருக்கு சப்ளை செய்­யும் போது, ஜி.எஸ்.டி., சட்­டத்­தில், எந்த கட்­டுப்­பா­டும் விதிக்­க­வில்லை. நீங்­கள், உங்­க­ளு­டைய வரி விலைப் பட்­டி­ய­லில், வரி வசூ­லித்து, அர­சுக்கு செலுத்த வேண்­டும். பொது­வாக, பதிவு செய்­யாத நப­ருக்கு விற்­பனை செய்­தால், உள்­ளீட்டு வரி பயன் பெறு­வ­தில், சிக்­கல் இருக்­கும் என, பலர் நினைக்­கின்­ற­னர். இது, முற்­றி­லும் தவ­றான கருத்து. பதிவு பெறாத நப­ருக்கு விற்­பனை செய்­தா­லும், உங்­க­ளு­டைய உள்­ளீட்டு வரி பய­னில், எந்த பாதிப்­பும் இருக்­காது.

சார், நாங்­கள், கூட்­டாண்மை நிறு­வ­னம் ஒன்றை நடத்தி வரு­கி­றோம். இதற்கு, ஜி.எஸ்.டி., பதிவு பெற்று விட்­டோம். தற்­போது, எங்­க­ளு­டைய பார்ட்­னர்­களில் ஒரு­வர், தனி­யாக ஒரு நிறு­வ­னத்தை, அவ­ரு­டைய பெய­ரில் துவங்க இய­லுமா? அதற்கு, ஜி.எஸ்.டி., பதிவு பெறு­வ­தில் சிக்­கல் ஏதே­னும் இருக்­குமா?– ஜெய­ராஜ், தேனிதாரா­ள­மாக துவங்­க­லாம். அவர், ஜி.எஸ்.டி., பதிவை பெறு­வ­தில், எந்த சிக்­க­லும் இருக்­காது. உங்­க­ளு­டைய கூட்­டாண்மை நிறு­வ­னத்­தின், ஜி.எஸ்.டி., பதி­வெண் என்­பது, அதன், ‘பான்’ எண்ணை பொறுத்து இருக்­கும். தற்­போது, உங்­க­ளு­டைய பார்ட்­னர் நிறு­வ­னம் துவங்­கி­னால், அதன், ஜி.எஸ்.டி., எண், அவ­ரு­டைய, ‘பான்’ எண்ணை பொறுத்து இருக்­கும்.

நான், தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னத்­தில், ‘அக்­க­வுன்ட்ஸ்’ துறை­யில் உள்­ளேன். என் நிறு­வ­னத்­தின் துணை நிறு­வ­னம், சிங்­கப்­பூ­ரில் உள்­ளது. அந்­நி­று­வ­னம், எங்­க­ளுக்கு இல­வ­ச­மாக, சில தொழில்­நுட்ப உத­வி­களும், தொழில்­நுட்ப அதி­கா­ரி­க­ளை­யும், இந்­தி­யா­விற்கு அனுப்பி வரு­கிறது. அவர்­கள் அளிக்­கும் இந்த சேவைக்கு வரி உண்டா? ஆம் எனில், எத்­தனை சத­வீ­தம் செலுத்த வேண்­டும்?– ஜம்­பு­நா­தன், உத்­தண்டிசிங்­கப்­பூ­ரில் உள்ள உங்­க­ளு­டைய துணை நிறு­வ­னம், உங்­க­ளுக்கு இல­வ­ச­மாக, மேற்­கு­றிப்­பிட்ட சேவை­களை செய்­தா­லும், அதற்கு நீங்­கள், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில், ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி., செலுத்த வேண்­டும். இதே வித­மான சேவையை, தொடர்பு அல்­லாத நப­ருக்கு, உங்­கள் துணை நிறு­வ­னம் செய்­தால், எவ்­வ­ளவு தொகை சேவை கட்­ட­ண­மாக விதிக்­கப்­ப­டுமோ, அத்­த­கைய தொகை­யில், 18 சத­வீ­தம் வரி செலுத்த வேண்­டும். அதை, நீங்­கள் உள்­ளீட்டு வரி பய­னாக பெற்­றுக் கொள்ள முடி­யும்.

இ.பி.சி.ஜி., சலுகை முறை­யில், மூல­தன இயந்­தி­ரங்­களை இறக்­கு­மதி செய்­யும் போது, செலுத்த வேண்­டிய அனைத்து வரி­யி­லி­ருந்­தும் விலக்கு அளிக்­கப்­ப­டுமா?– பெஞ்­ச­மின், பெங்­க­ளூருஇ.பி.சி.ஜி., சலுகை முறை­யில், இறக்­கு­மதி செய்­யும் போது, நீங்­கள் செலுத்த வேண்­டிய சுங்க வரி­யி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­படும். நீங்­கள், ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி., செலுத்த வேண்­டும். அதற்கு, விலக்கு இல்லை. ஆனால், அவ்­வாறு செலுத்­திய, ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி.,யை, 100 சத­வீ­தம் உள்­ளீட்டு வரி பய­னாக பெற­லாம்.

-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)