ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம் ... ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம் ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம் ...
ஜி.எஸ்.டி., சில விளக்­கங்­கள்; தெளி­வு­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2017
04:49

சுதந்­திர இந்­தி­யா­வின், மிகப்­பெ­ரியசீர்­தி­ருத்­தத்­தின் வாயி­லில், நாம் நிற்­கி­றோம். ‘ஒரே நாடு; ஒரே வரி; ஒரே சந்தை’ என்ற தாரக மந்­தி­ரத்தை, ஜி.எஸ்.டி., விதிப்பு முறை, இன்று நமக்கு வழங்கி உள்­ளது.

வரி­களை ஒருங்­கி­ணைப்­ப­தால், மத்­திய அரசு, சேவை­களின் மீது வரி விதிக்­கும் தன் உரி­மையை, விட்­டுக்­கொ­டுக்க வேண்டி உள்­ளது. மாநி­லங்­கள், தங்­கள் விருப்­பம் போல், பொருட்­களின் மீதான விற்­பனை வரியை நிர்­ண­யம் செய்­யும் உரி­மையை, விட்­டுக்­கொ­டுக்க வேண்டி உள்­ளது.

இத­னால், அர­சி­யல் பொது நோக்­க­மா­கிய, ‘கூட்­டு­றவு கூட்­டாட்சி’யும், ‘பொரு­ளா­தார பொதுச் சந்­தை­யும்’ நாட்­டில் ஏற்­ப­டக்­கூ­டிய சூழ்­நிலை உரு­வாகி உள்­ளது.
விலை குறை­யும்ஜி.எஸ்.டி., என்­பது, புது வரி அல்ல. ஏற்­க­னவே இருக்­கும் பல­முனை வரி­களை ஒரு­மு­னைப்­ப­டுத்தி, ஜி.எஸ்.டி., வசூ­லிப்­ப­தால், விளை­யும் நன்­மை­கள் அநே­கம். அவற்­றில், சில­வற்றை காண்­போம்.

முத­லில், வரி செலுத்­து­வோ­ருக்கு என்­னென்ன நன்­மை­கள் என்­பதை பார்க்­க­லாம்.இதற்கு முந்­தைய வரி விதிப்பு முறை­யில், பொருட்­களின் விலை­யேற்­றத்­திற்கு, மத்­திய, மாநில அர­சு­கள் விதித்த வரி­கள், ஒரு முக்­கிய கார­ண­மாக இருந்­தன.

அதற்­கான உள்­ளீட்டு வரி பய­னும், முழு­மை­யாக கிடைக்­கா­த­தால், வரி செலுத்­து­வோ­ரா­கிய நுகர்­வோர், ஒரு பொருள் தயா­ரிப்­ப­தில் துவங்கி, அது நுக­ரப்­படும் வரை, பல்­வேறு முனை­களில், பல­த­ரப்­பட்ட வரி­களை, வெளிப்­ப­டை­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ செலுத்த வேண்­டி­யி­ருந்­தது.

தற்­போது, ஜி.எஸ்.டி., விதிப்­பின் மூலம், இந்த குறை அறவே நீக்­கப்­பட்­டு­விட்­டது. இதன் மூலம், ஒரு­முனை வரி விதிப்­பும், அதற்­குண்­டான பல்­வேறு நிலை­களில், உள்­ளீட்டு வரி பய­னும் கிடைப்­ப­தால், பல பொருட்­களின் விலை குறை­யும். அதை வசூ­லிப்­ப­தில், வெளிப்­ப­டைத் தன்­மை­யும் ஏற்­படும்.

சுங்­கச் சாவடிமாநில அள­வி­லான சுங்­கச்­சா­வடி முறை, அறவே ஒழிக்­கப்­பட்டு விட்­ட­தால்,பொருட்­கள் மீதான போக்­கு­வ­ரத்து சம்­பந்­த­மான கட்­ட­ணங்­கள் கணி­ச­மாக குறை­யும். இத­னால், இது­வரை, மாநி­லங்­க­ளுக்கு இடை­யே­யான பொருட்­கள் பரி­வர்த்­த­னைக்­கான கட்­ட­ணங்­கள் குறை­யும்.
சிறு, குறு வணி­கர்­க­ளுக்­கான, ‘தொகுப்பு வரி திட்­டம்’ மூல­மும், வரிச்­சுமை குறைக்­கப்­பட்டு உள்­ள­தால், அத்­த­கைய பொருட்­களை உப­யோ­கிக்­கும் நுகர்­வோ­ருக்­கும், குறைந்த வரி செலுத்தி பொருட்­களை வாங்­கும் வாய்ப்பு அதி­க­ரிக்­கும்.

ஒரு பொருளை உள்­நாட்­டில் வாங்­கு­வ­தற்­கும், இறக்­கு­மதி செய்­வ­தற்­கு­மான வரி விதிப்­பில், சம­நிலை ஏற்­பட்டு, சந்­தை­யில் சம­மான போட்டி உண்­டா­கும். இத­னால், வரி செலுத்­து­ப­வர், இந்­தி­யா­வி­லேயே பொருட்­களை தயா­ரிக்க ஊக்­கம் ஏற்­படும். இது, ‘மேக் இன் இந்­தியா’ என்ற உற்­பத்­தித் திறனை வளர்க்­கும்.

தொழில் துறை

ஜி.எஸ்.டி., அறி­மு­கத்­துக்கு முன், தொழில் துறை­யி­னர் வரி வசூ­லிப்­பது, செலுத்­து­வது சம்­பந்­த­மாக, பல்­வேறு அலு­வ­ல­கங்­க­ளுக்கு அலைய வேண்­டி ­இருந்­தது. அதே போல், பொருட்­களை ஏற்­று­மதி, இறக்­கு­மதி செய்­யும் போதும், நிறைய சிர­மங்­கள் ஏற்­பட்­டன.

தற்­போது, ஜி.எஸ்.டி., முறை­யால், இத்­த­கைய நிலை அறவே ஏற்­ப­டாது. உள்­நாட்­டில் பொருட்­கள் மற்­றும் சேவை­கள் கொள்­மு­தலை பொறுத்­த­வரை, தொழில் துறை­யி­னர், ஏதா­வ­தொரு மத்­திய அல்­லது மாநில அரசு அலு­வ­ல­கத்தை மட்­டும் அணு­கி­னாலே போது­மா­னது. மேலும், ஏற்­க­னவே கூறி­யது போல, தடை­யற்ற உள்­ளீட்டு வரி பயன் முறை மூலம், வரிச்­சுமை கணி­ச­மாக குறை­யும்.

இது­வரை, தொழில் துறை­யில் நிலவி வந்த, பல மோசடி முறை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்டு உள்­ள­தால், நியா­ய­மான முறை­யில் தொழில் புரி­வோ­ருக்கு நல்ல ஊக்­கம் கிடைக்­கும்.
வரி செலுத்­து­தல்
சம்­பந்­த­மான அனைத்து படி­வங்­களும், இணை­யத்­தில் பதி­வேற்­றப்­பட்டு உள்­ள­தால், குழப்­பம், சந்­தே­கம் எது­வு­மில்­லா­மல், அவற்றை பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம். இத­னால், ‘செயல்­பாட்டு செலவு’ குறை­யும். நுகர்­வோ­ருக்கு நன்மை அடுத்து, மக்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., மூலம் என்­னென்ன நன்­மை­கள் என, பார்க்­க­லாம்.

மறை­முக வரி­கள் ஒரு­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு, உள்­ளீட்டு வரி பய­னும் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்டு உள்­ள­தால், கள்­ளச் சந்தை ஒழிந்து, நல்ல சந்தை உரு­வா­கும். இதன் மூலம், பொருட்­கள் மற்­றும் சேவை­கள், நியா­ய­மான விலை­யில் கிடைக்க வாய்ப்­புள்­ளது. மேலும், ஒரே வரி விதிப்பு முறை­யால், பொதுச் சந்தை உரு­வாக துவங்கி உள்­ளது.

பொருட்­கள் தயா­ரிப்­பது மற்­றும் விற்­பனை செய்­வது, சேவை­கள் அளிப்­பது ஆகி­யவை எளி­மை­யாக்­கப்­பட்­ட­தா­லும், பொருட்­கள் போக்­கு­வ­ரத்து விரை­வு­ப­டுத்­தப்­பட்டு உள்­ள­தா­லும், இதில் ஈடு­பட்­டுள்­ள­வர்­கள் வரு­மா­னம், வாழ்க்­கைத் தரம் உயர வழி­வகை ஏற்­பட்­டுள்­ளது.

ஜி.எஸ்.டி.,யின் முக்­கி­ய­மான ஒரு சிறப்­பம்­ச­மாக, அமைப்பு சாரா தொழில்­கள் மற்­றும் சேவை­களை, ஓர் அமைப்­பின் கீழ் கொண்டு வர முயற்சி மேற்­கொள்­ளப்­பட்டு உள்­ளது. இத­னால், அமைப்பு சாரா தொழில் மூலம் தயா­ரிக்­கப்­படும் பொருட்­கள் மற்­றும்சேவை­கள், பொது­மக்­களை எளி­தில் சென்­ற­டைய வழி ஏற்­பட்­டுள்­ளது.

ஒரு­வர், அமைப்­பு­சார் தொழில் மூலம் பெறும் பொருட்­கள் மற்­றும் சேவை­க­ளுக்குஇணை­யாக, இந்த அமைப்பு சாரா தொழில் மற்­றும் சேவை­களை தரம் உயர்த்­த­வும், பொது­மக்­கள், குறைந்த விலை­யி­லேயே பொருட்­கள் மற்­றும் சேவை­களை, அமைப்பு சார் தொழில் மற்­றும் சேவை­க­ளுக்கு நிக­ராக பெற­வும் வழி­வகை ஏற்­பட்­டுள்­ளது.

ஆக, மொத்­தத்­தில், ஜி.எஸ்.டி., விதிப்­பின் பல்­வேறு பரி­மாண தாக்­கங்­க­ளால், பொது­மக்­க­ளுக்கு நன்­மை­கள் தான் அதி­கம் ஏற்­படும்.

தவ­றான கருத்து

இது­வரை, யார் யாருக்கு என்­னென்ன நன்­மை­கள் என்­பதை பார்த்­தோம். இனி, அடுத்த கேள்வி, எது நல்ல, ஜி.எஸ்.டி.,யாக இருக்க முடி­யும்?

வரி செலுத்­து­ப­வ­ரால், அது சரி­யாக பின்­பற்­றக்­கூ­டிய முறை­யில் இருக்­கி­றதா; வரி அடித்­த­ளத்தை அது விரி­வு­ப­டுத்­துமா; விலை­வா­சியை அது குறைக்­குமா அல்­லது சம­னப்­ப­டுத்­துமா; அர­சின் வரி வரு­மா­னம் அதி­க­ரிக்­குமா; மக்­க­ளி­டையே செல்­வாக்கை பெறுமா என்­ப­வற்றை பொறுத்து, அது அமை­யும்.

இதற்கு பதி­லாக, தேவை­யில்­லாத, அதி­க­பட்­ச­மான நோக்­கங்­களை, ஜி.எஸ்.டி., மீது சுமத்­து­வது, முற்­றி­லும் தவ­றா­னது. பெரும்­பா­லான பத்­தி­ரிகை செய்­தி­களும், சமூக ஊட­கங்­களும், இத்­த­கைய தேவை­யில்­லாத ஆட்­சே­பங்க­ளையே, ஜி.எஸ்.டி., மீது சுமத்­து­கின்றன.

ஜி.எஸ்.டி., என்­பது, ஒரு நுகர்வு வரி. எனவே, ஒரு பொருளோ அல்­லது சேவையோ, யாரை கடை­சி­யாக சென்­ற­டை­கி­றதோ, அவர்­கள் மேல் தான் அந்த வரிச்­சுமை விழும். எனவே, ஜி.எஸ்.டி.,க்குள் வரி விகித வேறு­பாடு இருந்­தால், அது, ஏழை மக்­களின் நுகர்­வுக்கு ஏற்­றார்­போல அமைய வேண்­டுமே தவிர, செல்­வந்­தர்­களின் நுகர்­வுக்கு ஏற்ப அல்ல.

மேலும், இந்த வரி விகித வேறு­பாடு மூலம், வேலை­வாய்ப்பு, தொழில் கொள்கை, சமூக சீர்­தி­ருத்­தம் இவற்­றில் மிகப்­பெ­ரிய மாறு­தல் கொண்டு வர வேண்­டும் என்­பது கட்­டா­ய­மில்லை.‘ஒரே நாடு; ஒரே வரி’ எனச் சொல்­லி­விட்டு, ஐந்து வரி விகி­தங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றதே என்­றால், அதற்கு மேற்­கூ­றப்­பட்­டதே பதி­லாக அமை­யும்.

எரி­பொ­ருள்
ஜி.எஸ்.டி., என்­பது, மத்­திய, மாநில அர­சு­களின் கூட்டு முயற்­சி­யா­கும். ஜி.எஸ்.டி., விதிப்­பால், மாநி­லங்­கள் விதித்து வந்த, ‘வாட்’ வரி மாறு­த­லுக்கு உட்­பட்டு, மாநி­லங்­களின் வரி வரு­வாய் பாதிக்­கப்­பட வாய்ப்­பி­ருக்­கிறது.

இதை தவிர்க்க, வரு­வாய் இழப்பை சந்­திக்­கக்­கூ­டிய மாநி­லங்­களின், வரி விகி­தத்­துக்­கான கோரிக்­கை­கள் பரி­சீ­லிக்­கப்­பட்டு, ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டன. மேலும், வரி விகி­தங்­களை நிர்­ண­யிக்­கை­யில், உள்­ளீட்டு வரி பய­னின் விளை­வு­க­ளை­யும் கணக்­கில் கொள்­ளப்­பட்­டது.சரி, ஜி.எஸ்.டி.,யில் குறையே இல்­லையா?

பெரிய குறை என, ஏதா­வது சொல்­வ­தென்­றால், சில பொருட்­க­ளுக்கு, அதி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­பட்­டதை சொல்­ல­லாம். பெட்­ரோ­லிய கச்சா எண்­ணெய், அதி­வேக டீசல், பெட்­ரோல், இயற்கை எரி­வாயு மற்­றும் விமான எரி­பொ­ருள் ஆகி­ய­வையே அவை. ஆனால், அது­வும் தற்­கா­லி­க­மா­னது தான்.பெட்­ரோ­லி­யப் பொருட்­கள் மூலம், இப்­போது கிடைக்­கும் கலால் வரி, மொத்த கலால் வரி வசூ­லிப்­பில், 40 சத­வீ­த­மா­கும்.

மேலும், மாநி­லங்­கள் இவற்­றின் மீதான விற்­பனை வரியை கூட்­டவோ, குறைக்­கவோ வழி­யி­ருப்­ப­தால், இது, பண­வீக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஒரு விஷ­ய­மா­கும். அத­னால், ஜி.எஸ்.டி.,யின் கீழ், பெட்­ரோ­லி­யப் பொருட்­களை எதிர்­கா­லத்­தில் கொண்டு வர, சட்­டத்­தில் வழி­வகை செய்­யப்­பட்டு உள்­ளது.

வரி விகி­தம்

ஜி.எஸ்.டி.,யை, இது­வரை, கொள்கை அள­வில் அல­சி­னோம். தீர்­வை­யில், இப்­போதுஇருக்­கும் பிழை­கள் என்­ன­வா­யி­ருக்­க­லாம்; அவை சரியா? அவற்­றின் தீர்வு என்ன என்­பதை பார்க்­க­லாம்.

முத­லில், பெரும்­பா­லோ­ரு­டைய சந்­தே­க­மாக இருப்­பது, ‘ஒரே நாடு; ஒரே வரி’ என்ற முழக்­கத்தை கூறி­விட்டு, ஏன் பல வரி அடுக்­கு­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன என்­பதே. இதற்­கான விடை, ‘ஒரே வரி’ என்­பது, ஒரே வரி விதிப்பு முறையை குறிப்­பி­டுகி­றதே ஒழிய, ஒரே வரி விகி­தத்தை குறிப்­ப­தல்ல.

மேலும், இத்­த­கைய பல்­ல­டுக்கு வரி விகி­தம் இல்­லா­ம­லி­ருப்­பது, அதிக பண­வீக்­கத்­திற்கு வழி­வகை செய்­வது மட்­டு­மின்றி, வரி விதிப்­பில், பார­பட்­சத்­திற்­கும் வழி­வ­குக்­கும். உதா­ர­ணத்­திற்கு, அன்­றாட உப­யோ­கப் பொருட்­க­ளுக்­கும், ஆடம்­பர உப­யோ­கப்பொருட்­க­ளுக்­கும், ஒரே வரி விகி­தம் இருக்க முடி­யுமா? அது, வள­ரும் நாடான, இந்­தியா போன்ற நாடு­களில் சாத்­தி­யம் தானா? அத­னால் தான், பெரும்­பா­லான உண­வுப் பொருட்­கள், இயற்கை விளை பொருட்­கள் ஆகி­ய­வற்­றிற்கு, வரி விதிக்­கப்­ப­ட­வில்லை.

தங்­கத்­திற்கு, 3 சத­வீத வரி நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. இது­த­விர, பொருட்­கள் மற்­றும் சேவை­களின் வகையை பொறுத்து, 5, 12, 18 மற்­றும் 28 சத­வீத வரி­கள் விதிக்­கப்­பட்டு உள்ளன.

தீங்கு விளை­விக்­கக்­கூ­டிய பொருட்­க­ளான, பான் மசாலா, புகை­யிலை பொருட்­கள், செயற்கை குளிர்­பா­னங்­கள், சொகுசு கார்­கள் மற்­றும் நிலக்­கரி (சுற்­றுச்­சூ­ழல் மாசு ஏற்­ப­டு­வ­தன் கார­ண­மாக) ஆகி­ய­வற்­றின் மீது, கூடு­தல் தீர்வை விதிக்­கப்­பட்டு உள்­ளது.

சவால்தவி­ர­வும், இந்­தியா போன்ற ஆளுவ­தில் சிர­மங்­கள் நிறைந்த, தொழில்நுட்ப முன்­னேற்­றங்­களை, மெது­வாக மேற்­கொள்­ளும் முயற்­சி­களை உடைய, விழிப்­பு­ணர்வு குறை­வாக உள்ள நாடு­களில், ஜி.எஸ்.டி., போன்ற வரி விதிப்பு முறையை, திறம்­பட செயல்­ப­டுத்­து­வது மிக­வும் சவா­லா­னது.

இந்த, ஜி.எஸ்.டி., மாற்­ற­மா­னது, நன்கு விவா­திக்­கப்­பட்டு, பரி­சீ­லிக்­கப்­பட்டு கொண்டு வரப்­பட்­டி­ருந்­தா­லும், சமூக மற்­றும் பொரு­ளா­தார கார­ணி­களை கொண்டு, வரி விதிப்பு முறை­யில், மேலும் பல மாற்­றங்­கள் கொண்டு வரப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் தென்­ப­டு­வ­தாக, மத்­திய நிதி­ய­மைச்­ச­ரும்,வரு­வாய் துறை செய­ல­ரும், பல்­வேறு நிகழ்ச்­சி­களில் கூறி­யுள்­ளது, மிக­வும் உன்­னிப்பாக கவ­னிக்­கப்­பட வேண்­டி­ய­தா­கும். ஜி.எஸ்.டி.,யில், ‘புதிய மொந்­தை­யில், பழைய கள்’ என்ற சங்­கதி இல்லை. இதற்கு முன், அம­லில் இருந்த, மத்­தியகலால் வரி சட்­டம் – 1944, நிதி சட்­டம் – 1994 மற்­றும் பல்­வேறு மாநி­லங்­களின் விற்­பனை வரி சட்­டங்­களை ஒருங்­கி­ணைப்­ப­தி­லும், அதில் அம­லில் இருந்த சிர­மங்­களை களைந்­த­தி­லும், அதை, மேலும் எளி­மை­யாக்கி, சட்ட வடி­வம் அளித்­த­தி­லும், ஜி.எஸ்.டி., கவுன்­சில் எனும் அமைப்­பின் பங்கு அளப்­ப­ரி­யது.
நிறை­களே அதி­கம்
இந்­தியா, ஒரு பன்­முக பரி­மா­ணங்­களை உள்­ள­டக்­கிய நாடு. அத­னால் தான், எந்­த­வொரு வரி சீர்­தி­ருத்­த­மும் அமல்­ப­டுத்­தப்­படும் முன், தீவி­ர­மாக அலசி, ஆராய்ந்து, ஆலோ­ச­னை­கள் பெறப்­படும். பொது­மக்­களின் கருத்­துக்­களும் கேட்­கப்­படும்.

இத்­தனை செரி­மா­னம் செய்த பின்னே, ஜி.எஸ்.டி., விதிப்பு முறை அம­லுக்கு வந்­தி­ருக்­கிறது. எனவே தான், குறை­களை விட, நிறை­களே அதி­கம் காணப்­ப­டு­கின்றன.ஜி.எஸ்.டி., அம­லின் பின்னே உள்ள முக்­கி­ய­மான நோக்­கம், ‘ஒரே சந்தை’ அல்­லது ‘நாடு முழு­வ­தும் பொதுச் சந்தை’ என்ற ஏற்­பாட்டை செய்­வ­தா­கும். இத்­த­கைய ஓர் ஏற்­பாட்டை கொண்டு வர, சில காலம் காத்­தி­ருக்க வேண்டி வரும்.

ஏனெ­னில், ஜி.எஸ்.டி., அம­லாக்­கத்­திற்கு, இந்­திய சந்தை, மாநி­லங்­கள் அள­வில் எதிர்­வினை புரிய வேண்­டும். இது­த­விர, உள்­நாட்டு சந்தை, ஏற்­று­மதி மற்­றும் இறக்­கு­மதி ஏற்­பாட்­டு­டன் இணைந்து செயல்­பட, சில காலம் பிடிக்­க­லாம்.

  • மாநி­லங்­க­ளுக்கு எதி­ரான வரி விதிப்பு ஏற்­பட வாய்ப்­பி­ருக்­கி­றதா?
  • ஜி.எஸ்.டி., பிரிட்­ட­னின் வில­கல் போன்ற நிலை, இந்­தி­யா­வில் ஏற்­பட வாய்ப்­பு உள்­ளதா?
  • பண­வீக்­கம் உய­ருமா?
  • ஆஸ்­தி­ரே­லியா, மலே­ஷியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து, பாடங்­களை கற்­றுக் கொண்­டி­ருக்­கி­றோமா?
இவை குறித்த அல­சலை, நாளை காண­லாம்.– தொட­ரும்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)