ஜி.எஸ்.டி., சில விளக்­கங்­கள்; தெளி­வு­கள்ஜி.எஸ்.டி., சில விளக்­கங்­கள்; தெளி­வு­கள் ... ஜி.எஸ்.டி., காலம் நல்ல பதி­லையே சொல்­லும் ஜி.எஸ்.டி., காலம் நல்ல பதி­லையே சொல்­லும் ...
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2017
07:27

நாங்­கள், எங்­கள் அலு­வ­ல­கம் மற்­றும் பணி­யா­ளர்­களின் பயன்­பாட்­டிற்கு, லாரி­யில் தண்­ணீர் வாங்­கு­கி­றோம். இதற்கு, எத்­தனை சத­வீ­தம், ஜி.எஸ்.டி., விதிக்­கப்­படும்.– பொன்­னு­சாமி, சென்னைநீங்­கள், அலு­வ­லக பயன்­பாட்­டிற்­காக, லாரி­யில் வாங்­கும் தண்­ணீ­ருக்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டாது. கனி­மம் சேர்ந்த, சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட, வடி­கட்­டப்­பட்ட, மருத்­துவ குண­முள்ள மற்­றும் மூடிய, ‘சீல்’ செய்­யப்­பட்ட கொள்­க­ல­னில் விற்­கப்­ப­டு­கிற தண்­ணீ­ருக்கு மட்­டும் தான், ஜி.எஸ்.டி., விதிக்­கப்­படும்.

‘பிரீ­ஸர்’ மூலம் பதப்­ப­டுத்­தப்­பட்ட காய்­க­றி­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டுமா? அதை, பதிவு செய்­யாத நபர்­க­ளி­ட­மி­ருந்து கொள்­மு­தல் செய்­யும் போது, வரி செலுத்த வேண்­டுமா?– ராம­சாமி, வாகை­கு­ளம்ஆம். பதப்­ப­டுத்­தப்­பட்ட காய்­க­றி­க­ளுக்கு, 5 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., விதிக்­கப்­படும். அவற்றை, பதிவு செய்­யாத நபர்­க­ளி­ட­மி­ருந்து கொள்­மு­தல் செய்­யும் போது, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி செலுத்த வேண்­டும்.

வசூ­லிக்­கப்­பட்ட, ஜி.எஸ்.டி., குறிப்­பிட்ட நிறு­வ­னத்­தால், அர­சுக்கு செலுத்­தப்­பட்டு உள்­ளதா என்­பதை, வாடிக்­கை­யா­ளர்­கள், தங்­க­ளி­டம் உள்ள பில் / ரசீதை கொண்டு உறுதி செய்­துக் கொள்ள முடி­யுமா?– சந்­தி­ர­மோ­கன், பெரிய நாய­கன்­பா­ளை­யம்இது, ஒரு நல்ல கேள்வி. நீங்­கள், பதிவு செய்த நபர் என்­றால், தாங்­கள் செலுத்­திய வரியை, உள்­ளீட்டு வரி பயன் பெறு­வ­தற்­காக, மின்­னணு முறை­யில், தங்­க­ளி­டம் வரி வசூல் செய்­த­வர், வரி செலுத்தி விட்­டாரா எனும் விப­ரத்தை, ஜி.எஸ்.டி.ஆர்., 2 படி­வம் மூலம் தெரிந்து கொள்­ள­லாம். ஒரு­வேளை, நீங்­கள் நுகர்­வோ­ராக இருந்­தால், பில் / ரசீது வாரி­யாக, அந்த விப­ரம் அறிய முடி­யாது. மாறாக, பொது­வாக குறிப்­பிட்ட பதிவு செய்­யப்­பட்ட வழங்­கு­னர், வரி செலுத்­து­வ­தில் சரி­யாக இருக்­கி­றாரா என, ஜி.எஸ்.டி.என்., வலை­த­ளத்­தில் தெரிந்து கொள்ள வழி­வகை செய்­துள்­ள­னர்.

நான், ‘ரெடி­மேட்’ துணி­களை விற்­பனை செய்­கி­றேன். ஜி.எஸ்.டி., பதிவை பெற்று விட்­டேன். என் ஆண்டு கொள்­மு­தல், 10 லட்­சம் ரூபாய் வரை இருக்­கும். என் ஆண்டு விற்­பனை தொகை, 20 லட்­சம் ரூபாய்க்கு குறை­வாக உள்ள கார­ணத்­தால், ‘ரிட்­டர்ன்’ தாக்­கல் செய்ய வேண்­டுமா? நான், வெளி மாநி­லத்­தி­லி­ருந்து கொள்­மு­தல் செய்­வ­தால், அவ­சி­யம், ‘ரிட்­டர்ன்’ தாக்­கல் செய்ய வேண்­டுமா? எவ்­வாறு தாக்­கல் செய்ய வேண்­டும்?– செந்­தில் குமார், திரு­வண்­ணா­மலைஉங்­கள் அனைத்து கேள்­வி­க­ளுக்­கும், ஒரே பதில். நீங்­கள் அவ­சி­யம், ‘ரிட்­டர்ன்’ தாக்­கல் செய்ய வேண்­டும். பதிவு செய்­துள்ள நபர்­கள் அனை­வ­ரும், ‘ரிட்­டர்ன்’ படி­வம் தாக்­கல் செய்ய வேண்­டும். நீங்­கள் வழங்­க­லில் ஈடு­ப­ட­வில்லை என்­றா­லும், ‘நில் ரிட்­டர்ன்’ தாக்­கல் செய்ய வேண்­டும். வெளி மாநில கொள்­மு­த­லுக்­கும், ‘ரிட்­டர்ன்’ தாக்­கல் செய்­வ­தற்­கும், எந்த சம்­பந்­த­மும் இல்லை. www.gst.gov.in எனும் இணை­ய­த­ளத்­தில், நீங்­கள், ‘ரிட்­டர்ன்’ படி­வம் தாக்­கல் செய்ய வேண்­டும்.

நாங்­கள், பஞ்சு நுாற்பாலை இயக்கி வரு­கி­றோம். நுாற்பாலை செல­வி­னங்­களில், ஐ.டி.சி., எடுக்க இய­லுமா?– பிர­காஷ், கோவைநீங்­கள், தாரா­ள­மாக, உங்­க­ளு­டைய செல­வீ­னங்­களில் உள்ள, ஜி.எஸ்.டி., தொகையை, உள்­ளீட்டு வரி பய­னாக பெற்று கொள்­ள­லாம். இதில், தடை ஏது­மில்லை.

ஐயா, தங்­கள், ‘ஜி.எஸ்.டி., – கேள்­வி­கள் ஆயி­ரம்’ பகு­தியை, நாள்­வி­டாது வாசித்து வரு­கி­றேன். ‘தின­ம­லர்’ வாச­கன் என்­ப­தில், மேலும் பெருமை அடை­கி­றேன். எங்­க­ளது, மஹா­ராஷ்­டிரா கிளைக்­கான புதிய பதிவு விண்­ணப்­பம், முறை­யான நிலை­களை கடந்து, தற்­போது, ஸ்டே­ட­சில், ‘அசைன்ட் டு சென்­டர்’ என வந்து, 10 நாட்­க­ளா­கி­யும், எந்த முன்­னேற்­ற­மு­மின்றி நின்­று­விட்­டது. இதை, எவ்­வாறு சரி செய்­வது?– சம்­பத் குமார், கொரட்­டூர்சில நேரங்­களில், தொழில்­நுட்ப கோளாறு அல்­லது விப­ரங்­களை சரி­பார்க்­கும் கார­ணத்­தால், இது போன்ற தாம­தங்­கள் ஏற்­ப­டு­கின்றன. நீங்­கள், உங்­க­ளு­டைய விப­ரத்தை, கீழ்­கண்ட மின்­னஞ்­சல் முக­வரி மூலம், ஜி.எஸ்.டி., உதவி மையத்­திற்கு தெரி­யப்­ப­டுத்­தி­னால், இது போன்ற தொழில்­நுட்ப பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண முடி­யம். மின்­னஞ்­சல் முக­வரி: helpdesk@gst.gov.in

கட்­ட­டம் கட்­டும் போது, கட்­டு­மான பொருட்­க­ளுக்கு செலுத்­தும், ஜி.எஸ்.டி., தொகை­யில், ஐ.டி.சி., கிடைக்­கப் பெறுமா? மேலும், ஜல்லி, மணல் போன்ற பொருட்­களை, பதிவு செய்­யாத நப­ரி­ட­மி­ருந்து பெறும் பொது, செலுத்­தும் வரி தொகையை, உள்­ளீட்டு வரி பய­னாக பெற­லாமா?– பொன்­னு­சாமி, பீள­மேடுஅசையா சொத்­தான, கட்­ட­டம் கட்­டும் போது செலுத்­திய, ஜி.எஸ்.டி.,யை, உள்­ளீட்டு வரி பய­னாக பெற இய­லாது. மேலும், பதிவு செய்­யாத நப­ரி­ட­மி­ருந்து பெறப்­படும், ஜல்லி மற்­றும் மணல் போன்ற பொருட்­க­ளுக்கு, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி செலுத்த வேண்­டும். அத்­த­கைய தொகை­யை­யும், உள்­ளீட்டு வரி பய­னாக பெற இய­லாது.

நாங்­கள் ஒரு உற்­பத்தி நிறு­வ­னம் நடத்­தி­வ­ரு­கி­றோம். எங்­க­ளது பொருள் தமி­ழ­கம் முழு­வ­தும் விற்­பனை செய்ய வாடகை லாரி­யில் அனுப்­பப்­ப­டு­கிறது. இந்த லாரி வாட­கையை நாங்­கள் கொடுக்­கி­றோம். இதற்கு GST வரி பில்­லில் வசூல் செய்­ய­வில்லை. இந்த வரி 5% நாங்­கள் கட்­டி­விட்டு RCM முறை­யில் இன்­புட் எடுக்­க­மு­டி­யுமா? இதனை தெளி­வு­ப­டுத்­த­வும். – ராமச்­சந்­தி­ரன், கோவைரிவர்ஸ் சார்ஜ் முறை­யில் லாரி வாட­கை­யில் வரி செலுத்­தும் நீங்­கள், தாரா­ள­மாக செலுத்­திய 5% வரியை உள்­ளீட்டு பய­னாக பெற­லாம். இதில் எந்த கட்­டுப்­பா­டும் இல்லை.

ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்­யா­த­வ­ரி­டம் இருந்து வாங்­கும் பொருட்­க­ளுக்கு ரிவர்ஸ் வரி செலுத்த வேண்­டுமா? – ரவி, சைதாப்­பேட்டைஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்த ஒரு­வர், அவ்­வாறு பதிவு செய்­யாத நப­ரி­டம் இருந்து வரிக்கு உட்­பட்ட பொருட்­கள் மற்­றும் சேவை­களை பெற்­றால், ரிவர்ஸ் சார்ஜ் முறை­யில், ஜி.எஸ்.டி., செலுத்த வேண்­டும்.

காம்­போ­சி­ஷன் திட்­டத்­தில், கணக்கு தாக்­கல் செய்­வது எளி­தா­னதா? – முகேஷ், ஆத்­துார்ஆம். காம்­போ­சி­ஷன் திட்­டத்­தில் கணக்கு தாக்­கல் செய்­வது மிக எளி­தா­னது. பதிவு செய்த நபர், காலாண்­டுக்கு ஒரு­முறை ஜிஎஸ்­டி­ஆர்4 படி­வத்தை தாக்­கல் செய்­தால் போதும்.

முன்­ப­ணம் பெற்று சப்ளை செய்­ய­வில்லை என்­றால், டீலர் 'ரீபண்டு வவுச்­சர்' முன்­ப­ணத்­திற்கு மட்­டும் வழங்க வேண்­டுமா அல்­லது ஜி.எஸ்.டி., உட­னான முன்­ப­ணத்­திற்கு வழங்க வேண்­டுமா?– வாஞ்­சி­நா­தன், காரைக்­குடிஜி.எஸ்.டி., உடன் முழு முன்­ப­ணத்­திற்­கும் ரீபண்டு வவுச்­சர் வழங்க வேண்­டும்.

-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)