ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு ...
ஜி.எஸ்.டி., காலம் நல்ல பதி­லையே சொல்­லும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2017
07:28

இந்­தியா, நுகர்­வோ­ரின் சந்­தை­யாகி வெகு கால­மாகி விட்­டது. அத­னால், நுகர்­வோரே, சந்­தை­யின் போக்கை தீர்­மா­னிப்­ப­வர்­க­ளா­க­வும் விளங்­கு­கின்­ற­னர். அரசு இயந்­தி­ரம், ஒழுங்­கு­மு­றைப்­ப­டுத்­தும் ஓர் அமைப்­பாக மட்­டுமே செயல்­பட வேண்­டிய காலம், வெகு தொலை­வில் இல்லை. இதற்­கான, தானி­யங்கி மற்­றும் சுய பரி­சோ­தனை கட்­டுப்­பா­டு­கள், ஜி.எஸ்.டி., சட்­டத்­தில் ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளதே, இதன் சிறப்­பா­கும்.
இந்த சட்­டம், ஒரு விளக்­க­மான மற்­றும் சுய நிர்­வா­கச் சட்­ட­மாக உள்­ள­தால், இத­னால் ஏற்­படும் சில சிறிய பிரச்­னை­களை, வெகு சுல­ப­மாக களைய முடி­யும். இது­த­விர, அரசு துறை­கள் மேற்­கொள்­ளும், பல்­வேறு தணிக்கை நட­வ­டிக்­கை­களும் குறைந்து, மிக­வும் தேவை­யான இடங்­கள் மற்­றும் நேரங்­களில் மட்­டுமே, தணிக்கை செய்­யப்­படும் என்­ப­தாக மாறி­வி­டும்.
பிரிட்­டன்:
தற்­போது, உலக பொரு­ளா­தார அள­வில், பல பெரிய மாற்­றங்­கள் ஏற்­ப­டு­கின்றன. உதா­ர­ண­மாக, ஐரோப்­பிய பொரு­ளா­தா­ரத்­தி­லி­ருந்து பிரிட்­ட­னின் வில­கல். இது, பொதுச் சந்தை எனும் கருத்­துக்கு ஏற்­பட்ட ஒரு பின்­ன­டை­வா­கவே கரு­தப்­ப­டு­கிறது. ஆனால், இந்த விஷ­யத்­தில், நாம் முக்­கி­ய­மாக கவ­னிக்க வேண்­டி­யது என்­ன­வென்­றால், ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு என்­பதே, பல நாடு­களின் கூட்­டணி ஆகும். ஏதா­வது ஒரு நாடு, தன்­னு­டைய நலன்­கள், ஒரு பொது நோக்­கத்­திற்கு பலி­யி­டப்­ப­டு­கிறது என, எண்­ணு­மே­யா­னால், கூட்­டணிஎந்­நே­ர­மும் முறி­யும் வாய்ப்பு ஏற்­ப­டு­கிறது. இது தான், ‘பிரக்­ஸிட்’ [BREXIT] எனப்­படும், பிரிட்­ட­னின் வில­க­லில் ஏற்­பட்­டது.
இந்­தி­யா­வில், இது போன்­ற­தொரு நிலை உண்­டா­குமா? அதற்­கான வாய்ப்பே இல்லை என, கூற­லாம். முதற்­கண், ஐரோப்­பிய கூட்­டணி நாடு­கள் போல, இந்­தியா பல நாடு­களின் கூட்­டணி அல்ல. இந்­தியா, பல மாநி­லங்­களின் தனித்­து­வ­மான கூட்­டாட்சி தத்­து­வத்­தில் இயங்­கும், ஓர் அமைப்­பா­கும். அடுத்து, ஜி.எஸ்.டி., சட்­டம், மூன்று பிரி­வு­க­ளாக இயற்­றப்­பட்டு உள்­ளது. ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி., சட்­டம் (ஐ.ஜி.எஸ்.டி.,) – மாநி­லம் விட்டு மாநி­லம், இறக்­கு­மதி வரி விதிப்பு போன்­றவை; மத்­திய,ஜி.எஸ்.டி., சட்­டம் (சி.ஜி.எஸ்.டி.,) –உள்­மா­நில மற்­றும் யூனி­யன் பிர­தேச வரி விதிப்­பில், மத்­திய அர­சின் பங்கு; மாநில மற்­றும் யூனி­யன் பிர­தேச, ஜி.எஸ்.டி., சட்­டம் (எஸ்.ஜி.எஸ்.டி., – யு.ஜி.எஸ்.டி.,) –உள்­மா­நில மற்­றும் யூனி­யன் பிர­தேச வரி விதிப்­பில், அந்­தந்த மாநில அல்­லது யூனி­யன் பிர­தே­சங்­களின் பங்கு.
இதில் வரும் இரு பிரி­வு­களில் – மத்­திய, ஜி.எஸ்.டி., சட்­டம் மற்­றும் மாநில மற்­றும் யூனி­யன் பிர­தேச, ஜி.எஸ்.டி., சட்­டங்­கள், அதன் வரி விகி­தங்­கள் கிட்­டத்­தட்ட ஒரே மாதி­ரி­யா­னவை. அத­னால், ஏதா­வ­தொரு மாநி­லத்­திற்கோ அல்­லது யூனி­யன் பிர­தே­சத்­திற்கோ எதி­ரான வரி விதிப்பு ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பே இல்லை.
நஷ்டஈடு:
ஜி.எஸ்.டி., என்­பது, நுகர்வை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு செயல்­படும் வரி விதிப்பு முறை என்­ப­தால் தான், ஒரு குறிப்­பிட்ட மாநி­லத்­தில், நுகர்வு அதி­க­மாக இருந்­தாலோ அல்­லது ஒரு குறிப்­பிட்ட மாநி­லத்­தில் உற்­பத்தி அதி­க­மாக இருந்­தாலோ, அதை சமன் செய்­யும் பொருட்டு, மாநி­லங்­க­ளுக்­கான நஷ்ட ஈட்டை வழங்­கும் சட்­ட­மும், இந்த, ஜி.எஸ்.டி., சட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக, பார்­லி­மென்­டில் நிறை­வேற்­றப்­பட்டு உள்­ளது. இந்த சட்­டத்­தின் மூலம், அறி­வி­யல்­பூர்­வ­மாக, ஒவ்­வொரு மாநி­லங்­க­ளுக்­கும் ஏற்­படும் இழப்­பீடு கணக்­கி­டப்­பட்டு, மத்­திய அர­சால், தகுந்த நஷ்ட ஈடு வழங்­கப்­படும். இதில், நாம் முக்­கி­ய­மாக கவ­னத்­தில் கொள்ள வேண்­டிய விஷ­யம் என்­ன­வென்­றால், இது­வரை, மாநி­லங்­க­ளுக்கு, சேவை­கள் மீது வரி விதிக்­கும் உரிமை இருந்­த­தில்லை.
ஆனால், மேற்­கண்ட, ஜி.எஸ்.டி., சட்­டங்­கள் மூலம், சேவை­களின் மீது, மாநி­லங்­க­ளுக்­கான, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு சாத்­தி­ய­மாகி உள்­ளது. இது, மறை­மு­க­மாக, மத்­திய அரசு, உற்­பத்தி அதி­க­முள்ள மாநி­லங்­க­ளுக்கு தர வேண்­டிய நஷ்ட ஈட்டை குறைக்­க­வும் உத­வும்.தற்­போது, சில பொருட்­களை வாங்­கும் போதும், சேவை­களை பெறும் போதும், விலை­யேற்­றம் ஏற்­பட்­டு­விட்­ட­தாக ஒரு கருத்­தும் நில­வு­கிறது. ஒரு பொரு­ளுக்கு, முன் இருந்த நிலை­யி­லி­ருந்து, ஜி.எஸ்.டி.,யில், வரி சிறிது அதி­க­மாக இருந்­தா­லும், வர்த்­த­கர், அப்­பொ­ரு­ளின் விலையை ஏற்­றி­வி­டு­கி­றார். ஆனால், அவ­ருக்கு உள்­ளீட்டு வரி பயனை, ஜி.எஸ்.டி.என்.,–ல் தெரி­யப்­ப­டுத்த, மூன்று மாதங்­கள் அவ­கா­சம் இருப்­ப­தால், தற்­போது, அதன் தாக்­கம் உண­ரப்­ப­ட­வில்லை. எனவே, தற்­கா­லி­க­மாக, சில பொருட்­களின் விலை ஏறி­யி­ருக்க வாய்ப்­புள்­ளது.
தவிர, முன், 15 சத­வீ­த­மாக இருந்த சேவை வரி, தற்­போது, ஜி.எஸ்.டி.,யில், 18 வரி விகித அடுக்­கில் வந்­து­விட்­ட­தால், சில சேவை­களின் மீதான வரி விதிப்பு அதி­க­மா­கி­விட்­டது. ஆனால், இத்­த­கைய சேவை வழங்­கு­வோ­ருக்கு உரிய உள்­ளீட்டு சேவை­களின் மீதான வரி பய­னும், இதே அள­வில் உயர்ந்தே அவ­ருக்கு கிடைப்­ப­தால், அத்­த­கைய சேவை­களின் விலை, சிறி­த­ளவு உய­ரவே வாய்ப்­பி­ருக்­கிறது. இதை, நுகர்­வோர் பொறுத்­துக் கொள்ள வேண்­டும்.
கண்­கா­ணிப்பு:
மேலும், குறைந்த கால அள­வில் நோக்­கி­னால், ஜி.எஸ்.டி.,யால் சிறி­த­ள­வுக்கு பண­வீக்­கம் உயர வாய்ப்­புள்­ளது. ஏனெ­னில், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, பெரும்­பா­லும், சேவை துறை­யையே சார்ந்­துள்­ள­தும், ஜி.எஸ்.டி., விதிப்­பில், சேவை­க­ளுக்­கான வரி விகி­தம், 3 சத­வீ­தம் உயர்ந்­தி­ருப்­ப­தும் ஆகும்.இது மட்­டு­மின்றி, வர்த்­த­கர்­கள், தங்­கள் உள்­ளீட்டு வரி பயனை, ‘ரீபண்டு’ பெறும் காலம் வரை, அவர்­கள், வணி­கத்­தில் முத­லீடு செய்­துள்ள மூல­த­னத்தை உப­யோ­கப்­ப­டுத்­து­வது இய­லா­த­தா­கிறது. தவிர, மாநி­லங்­கள், ஜி.எஸ்.டி., தவிர, விதிக்­கும் மேலும் சில வரி­யி­னங்­க­ளால், விலை­வாசி ஏற வாய்ப்­பி­ருக்­கிறது.
சில மாநி­லங்­கள், விவ­சா­யி­க­ளுக்­கான கடன்­களை தள்­ளு­படி செய்­துள்ளன. இத்­த­கைய நிகழ்­வு­க­ளால், அந்­தந்த மாநி­லங்­களின் நிதி­நிலை மீது அழுத்­தம் ஏற்­ப­ட­வும், விலை­யேற்­றம் அல்­லது பண­வீக்­கம் அதி­க­ரிக்­க­வும் வாய்ப்­பி­ருக்­கிறது.இத்­த­கைய பண­வீக்­கம், பொது­மக்­களை நேர­டி­யாக பாதிக்­கும் என்­ப­தால், ஜி.எஸ்.டி.,யின் குறு­கிய கால விளை­வு­கள் பற்றி, அரசு நேரடி கவ­னம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இதற்­கான ஏற்­பா­டு­க­ளை­யும், அரசு அவ்­வப்­போது செய்­கிறது.
எடுத்­துக்­காட்­டாக, நாடு முழு­வ­தும், பல்­வேறு பொருட்­கள் மற்­றும் சேவை­களின் விலை­மாற்­றத்தை கண்­கா­ணிக்­க­வும், அவற்றை, அவ்­வப்­போது அர­சுக்கு தெரி­யப்­ப­டுத்தி, தேவை­யான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வும், 205 அரசு உய­ர­தி­கா­ரி­களை, ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு ஒரு அதி­காரி என்ற விகி­தத்­தில், அரசு நிய­மித்­துள்­ளது.இது­த­விர, அர­சின் முக்­கி­ய­மான, 18 துறை­கள் மீது, ஜி.எஸ்.டி., விதிப்­பின் விளை­வு­கள் என்ன என்­பதை கண்­ட­றிந்து, அதற்­குண்­டான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டி, துறை சார்ந்த செயற்­கு­ழுக்­கள் அமைக்­கப்­பட்டு உள்ளன. இத்­த­கைய முயற்­சி­கள் மூலம், அரசு, விலை­வாசி ஏற்­றத்தை கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க முயற்­சிக்­கிறது.
உரிமை பாது­காப்பு:
இந்த, ஜி.எஸ்.டி., விதிப்­பின் மூலம், நம் நாட்­டில், ‘நிதி கூட்­டாட்சி நிர்­வா­கம்’ எனும், புதிய பரி­மா­ணம்விரை­வில் ஏற்­ப­டப் போகிறது. வரி விகி­தங்­களை தீர்­மா­னிப்­ப­தில், ஜி.எஸ்.டி., சபையே உச்­ச­கட்ட அமைப்­பாக உள்­ள­தால், வரி விதிப்­பில் ஒரு ஸ்தி­ரத்­தன்­மை­யும், எல்லா மாநி­லங்­களின் உரி­மை­களின் பாது­காப்­பும் உறுதி செய்­யப்­ப­டு­கிறது.உண்­மை­யில், இந்த, ஜி.எஸ்.டி.,சபை மூலம், மத்­திய அர­சா­னது, இது­வரை வரி விதிப்­பில் கொண்­டி­ருந்த, தன் ஏக­போக உரி­மையை விட்­டுக் கொடுத்து, மாநி­லங்­களின் உரி­மை­க­ளோடு பகிர்ந்து கொண்­டுள்­ளது.
மேலும், மத்­திய அர­சா­னது, ஜி.எஸ்.டி., சபை­யில், மூன்­றில் ஒரு பங்கு ஓட்­டு­ரிமை மட்­டுமே கொண்­டி­ருப்­ப­தால், வரி விதிப்­பில், மாநி­லங்­களின் பெரும்­பான்மை கருத்­துக்கே, முத­லி­டம் அளிக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­க­மா­கும்.ஜி.எஸ்.டி., விதிப்பு அமல்­ப­டுத்­தப்­பட்ட சில நாடு­களில், அதை அமல்­ப­டுத்­தும் போது ஏற்­பட்ட, அசா­தா­ர­ண­மான நிதா­னத்­தால், மக்­களின் போராட்­டங்­கள் ஏற்­பட்­டன. உதா­ர­ணம், மலே­ஷியா. ஆனால், நம் நாட்­டில், ஜி.எஸ்.டி., அம­லாக்­கம், பிற நாடு­களில் ஏற்­பட்ட பிரச்­னை­கள், அவற்­றின் தீர்­வு­கள், இவற்­றி­லி­ருந்து கற்­றுக் கொண்ட பாடங்­கள், கணி­னி­ம­ய­மாக்­கல், வரி விலக்­க­ளித்­தல், வரி அடுக்கை நிர்­ண­யம் செய்­தல் போன்ற, பல்­வேறு அல­சல்­க­ளுக்கு பின்னே சாத்­தி­ய­மாகி உள்­ளது.
‘பிற­ரின் அனு­ப­வங்­களில் இருந்து, பாடம் கற்­ப­வனே புத்­தி­சாலி’ என்ற அறி­ஞர்­களின் கூற்­றுக்­கேற்ப, இந்­தியா நிச்­ச­ய­மாக, ஜி.எஸ்.டி., அமல்­ப­டுத்­தப்­பட்ட நாடு­க­ளான, பிரான்ஸ், ஆஸ்­தி­ரே­லியா, மலே­ஷியா போன்­ற­வற்­றி­ட­மி­ருந்து, பல நல்ல பாடங்­களை கற்­றுள்­ளது என்­றால், அது மிகை­யா­காது. மேலும், சென்­ற­டை­யும் திட்­டம், அலு­வ­லர்­க­ளுக்கு பயிற்சி, சேவை மையங்­கள் அமைப்­பது என, பல வழி­களில், ஜி.எஸ்.டி., விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்டு, சந்­தே­கங்­களை நீக்­கும் முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது. அத்­து­டன், ஊட­கங்­கள் மற்­றும் சமூக ஊட­கங்­கள் மூல­மும், விழிப்­பு­ணர்வு பிர­சா­ரங்­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்றன.
முற்­றுப்­புள்ளி:
ஜி.எஸ்.டி., சம்­பந்­த­மான, எல்­லா­வ­கை­யான பணி­களும், ஜி.எஸ்.டி.என்., எனப்­படும், பொது அமைப்­பின் மூலம் இணை­ய­வழி நடை­பெ­றும். இத­னால், பொருட்­கள் மற்­றும் சேவை­களை வழங்­கு­வோர், வரி சம்­பந்­த­மான தங்­கள் தேவை­களை, அரசு அலு­வ­ல­கங்­க­ளுக்கு செல்­லா­ம­லேயே நிறை­வேற்­றிக் கொள்ள, நல்ல வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.மேலும், ஜி.எஸ்.டி., சட்­டத்­தில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள, ‘கொள்ளை லாபத்­திற்கு எதி­ரான ஏற்­பாடு’ அதீத லாபம் ஈட்ட முயல்­வோ­ருக்கு, ஒரு முட்­டுக்­கட்­டை­யாக அமை­யும். இனி­மேல், வரி விலக்கு அளிக்­கப்­பட்­டோர் தவிர, பொருட்­கள் மற்­றும் சேவை­களை அளிப்­ப­வர்­கள் யாராக இருந்­தா­லும், அவர்­கள்,ஜி.எஸ்.டி., ஐ.என்., எனப்­படும், ஜி.எஸ்.டி., குறி­யீட்டு எண்ணை, கண்­டிப்­பாக, தங்­கள்ரசீ­து­களில் குறிப்­பிட வேண்­டும். இத­னால், முறை­யற்ற வணிக நோக்­கங்­க­ளுக்கு, ஒரு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்டு உள்­ளது.
ஜி.எஸ்.டி., சம்­பந்­த­மான எல்லா பரி­வர்த்­த­னை­களும், இணை­ய­வ­ழியே நடை­பெ­று­வ­தால், பொருட்­கள் மற்­றும் சேவை­கள் பற்­றிய எல்லா விப­ரங்­க­ளை­யும், அர­சும், வணி­கர்­களும் இணை­ய­வ­ழியே சரி­பார்த்­துக் கொள்­ள­லாம். இந்த முயற்­சி­யால், வரி ஏய்ப்பு பெரு­ம­ள­வில் தவிர்க்­கப்­படும்.மேலும், உள்­ளீட்டு வரி பயன், எல்லா நிலை­க­ளி­லும் நன்கு கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தால், அர­சுக்கு இது­வரை ஏற்­பட்டு வந்த வரு­வாய் இழப்பு, பெரு­ம­ள­வில் தடுக்­கப்­பட்­டு­வி­டும்.
முடி­வாக, இந்த, ஜி.எஸ்.டி., முறை­யால், நாட்­டின் கூட்­டாட்­சித் தன்மை பாதிக்­கப்­ப­டுமா; 125 கோடி நுகர்­வோ­ருக்கு நல்ல பலன் ஏற்­ப­டுமா?வரி அடித்­த­ளம் விரி­வ­டை­யுமா; ஊழ­லற்றவரி முறை­மைக்கு வழி­வ­குக்­குமா; வெளிப்­ப­டைத் தன்மை, பொறுப்­பு­ணர்வு, வளர்ச்சி ஏற்­ப­டுமா; மாநி­லங்­களின் நிதி சுதந்­தி­ரம் பாதிக்­கப்­ப­டுமா; ஏற்­று­மதி செய்­யும் மாநி­லங்­க­ளுக்கு இழப்பு ஏற்­ப­டுமா என, பல கேள்­வி­கள், ஜி.எஸ்.டி., மசோதா ஏற்­றுக் ள்­ளப்­ப­டு­வ­தற்கு முன், லோக்­ச­பா­வில் கேட்­கப்­பட்­டன.இவற்­றிற்கு, காலம் பதில் சொல்­லும். அது, நிச்­ச­ய­மாக நல்ல பதி­லையே சொல்­லும் என்­ப­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் தான் தென்­ப­டு­கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)