சொகுசு கார் மீதான வரியை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்சொகுசு கார் மீதான வரியை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் ... கரன்சி நிலவரம் கரன்சி நிலவரம் ...
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2017
23:51

நான், சென்­னை­யில் மக­ளிர் விடுதி ஒன்றை நடத்தி வரு­கி­றேன். தங்­கும் இடம், சாப்­பாடு மற்­றும் பரா­ம­ரிப்பு ஆகி­ய­வற்­றுக்கு, மாதம் ஒன்­றுக்கு, நப­ருக்கு, 8,000 – 10 ஆயி­ரம் ரூபாய் வரை வாங்­கு­கி­றோம். எங்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., வருமா? ஜி.எஸ்.டி., வராது என்­றால், நாங்­கள் மளிகை மற்­றும் சாமான்­கள் வாங்­கும் போது, ஜி.எஸ்.டி., எண் கேட்­கின்­ற­னர். நாங்­கள், ஜி.எஸ்.டி., கொடுத்து சாமான்­கள் வாங்­கி­னால், அதன், ஜி.எஸ்.டி., தொகையை எப்­படி வசூல் செய்­வது?– பி.பத்மா, பெரம்­பூர்
உங்­க­ளு­டைய ஆண்டு மொத்த வழங்­க­லின் மதிப்பு, 20 லட்­சம் ரூபாய்க்­குள் இருந்­தால், நீங்­கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்­டிய அவ­சி­ய­மில்லை. மளிகை மற்­றும் பிற செல­வு­களில் செலுத்­திய, ஜி.எஸ்.டி.,யை, நீங்­கள் உள்­ளீட்டு வரி பய­னாக பெற இய­லாது. ஒரு­வேளை, உங்­க­ளு­டைய ஆண்டு வரு­மா­னம், 20 லட்­சம் ரூபாய்க்கு மேல் இருந்­தால், நீங்­கள் பதிவு செய்து, 18 சத­வீத வரி வசூல் செய்ய வேண்­டும். அவ்­வாறு பதிவு பெற்­றால், உங்­க­ளுக்கு உள்­ளீட்டு வரி பயன் கிடைக்­கும்.

நான், வீட்­டில் மெத்தை, தலை­யணை மற்­றும் பாவா­டை­கள் செய்து, 15 கி.மீ., துாரத்­தில் உள்ள, என் கடை­யில் விற்­பனை செய்­கி­றேன். ஜி.எஸ்.டி., பதிவு, இரு இடங்­க­ளுக்­கும் உள்­ளது. சரக்­கு­களை தயார் செய்து, வீட்­டி­லி­ருந்து கடைக்கு, 20 நாட்­க­ளுக்கு ஒரு­முறை ஆட்­டோ­வில் எடுத்து செல்­கி­றோம். இதன் மதிப்பு, 20 ஆயி­ரம் ரூபாய்க்­குள் தான் இருக்­கும். சரக்­கு­டன் என்ன, ‘பில்’ வைக்க வேண்­டும்?– முத்து, திருப்­பத்­துார்
நீங்­கள், உற்­பத்தி செய்த பொருட்­களை கடைக்கு எடுத்­துச் செல்­லும் போது, ‘டெலி­வரி சலான்’ மூலம், சரக்­கு­களை அனுப்ப வேண்­டும். இதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­ட­மாட்­டாது.

நான், ஓராண்­டுக்கு, 20 லட்­சம் ரூபாய்க்­குள் வியா­பா­ரம் செய்து கொண்­டி­ருக்­கி­றேன். அத­னால், என்­னு­டைய, ஜி.எஸ்.டி.,யின் தற்­கா­லிக பதிவை ரத்து செய்து விட்­டேன். நான், உள் மாநி­லத்­தில் இருந்­தும், வெளி மாநி­லத்­தில் இருந்­தும், வியா­பா­ரத்­திற்கு பொருட்­களை வாங்க முடி­யுமா?– ராஜ­கோ­பால், அருப்­புக்­கோட்டை
நீங்­கள், பதிவை ரத்து செய்த கார­ணத்­தால், உங்­க­ளு­டைய கொள்­மு­த­லில் எந்த பாதிப்­பும் இருக்­காது. நீங்­கள், தாரா­ள­மாக உள் மற்­றும் வெளி மாநி­லத்­தி­லி­ருந்து பொருட்­களை வாங்க முடி­யும். இதற்கு, தடை இல்லை. உங்­க­ளால், கொள்­மு­த­லில் செலுத்­திய, ஜி.எஸ்.டி.,யை உள்­ளீட்டு வரி பய­னாக பெற இய­லாது.

சார், இணக்க வரி நிலையை தேர்வு செய்த நபர், அவ­ரு­டைய உச்ச வரம்பு, 75 லட்­சம் ரூபாயை தாண்­டி­ய­வு­டன், சாதா­ரண வரி நிலைக்கு மாற்­றப்­பட்­டால், அவர் வழங்­கிய மொத்த வழங்­க­லுக்­கும், சாதா­ரண முறை­யில் வரி செலுத்த வேண்­டுமா அல்­லது அதி­கப்­ப­டி­யான தொகைக்கு மட்­டும், சாதா­ரண முறை­யில் வரி செலுத்­தி­னால் போதுமா?– ராக­வேந்­தி­ரன், சேலம்
அவர் வழங்­கிய அதி­கப்­ப­டி­யான வழங்­க­லுக்கு மட்­டும், ஜி.எஸ்.டி., வசூல் செய்து செலுத்த வேண்­டும். மொத்த வழங்­க­லுக்­கும், சாதா­ரண நிலை­யில் வரி செலுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

நான், சிறு­வர் உல்­லாச பூங்கா ஒன்றை நடத்தி வரு­கி­றேன். ஜி.எஸ்.டி., பதிவு செய்­து­விட்­டேன். நுழை­வுக் கட்­ட­ணம் மற்­றும் இதர விளை­யாட்டு கட்­ட­ணங்­க­ளுக்கு, இப்­போது எத்­தனை சத­வீ­தம் வரி கட்ட வேண்­டும்?– ஆர்.ரவீந்­தி­ரன், தேனிநீங்­கள், 28 சத­வீத வரி வசூல் செய்து, அர­சுக்கு செலுத்த வேண்­டும்.

‘டேக்ஸ் இன்­வாய்ஸ்’ என்­றால் என்ன?– பழ­னி­சாமி, கோபி­செட்­டி­பா­ளை­யம்
வரி விலைப் பட்­டி­யல் என்ற சொல்லே, ஆங்­கி­லத்­தில், ‘டேக்ஸ் இன்­வாய்ஸ்’ எனப்­ப­டு­கிறது. ஜி.எஸ்.டி., பதிவு பெற்ற நபர், வரி விதிப்­பிற்­கு­ரிய வழங்­க­லில் ஈடு­படும் போது, இதை பெறு­ந­ருக்கு அளிக்க வேண்­டும். அதில், தன்­னு­டைய, ஜி.எஸ்.டி., பதிவு எண், வரி விலைப் பட்­டி­யல் எண், தேதி, முக­வரி, சரக்­கின் அல்­லது சேவை­யின் விப­ரம், பெறு­நர் பதிவு செய்­யப்­பட்ட நபர் என்­றால், அவ­ரின், ஜி.எஸ்.டி., பதிவு எண், வரி­யின் சத­வீ­தம், தொகை போன்ற விப­ரங்­களை, தெளி­வாக குறிப்­பிட வேண்­டும். இது, மின்­னணு மூலம் தான் இருக்க வேண்­டும் என்­கிற அவ­சி­ய­மில்லை.

-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)