கரன்சி நிலவரம்..கரன்சி நிலவரம்.. ... மாருதி சுசூகி நிறுவனம் கார் விற்பனை உயர்வு மாருதி சுசூகி நிறுவனம் கார் விற்பனை உயர்வு ...
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2017
00:19

சார், நாங்­கள், ஜி.எஸ்.டி., ஆர்.3பி ரிட்­டர்ன் தாக்­கல் செய்­யும் ­போது, சி.ஜி.எஸ்.டி., மற்­றும் எஸ்.ஜி.எஸ்.டி., தொகைக்கு பதி­லாக, ஐ.ஜி.எஸ்.டி., என்று தவ­றாக பதி­வேற்­றம் செய்து விட்­டோம். இதை திருத்­திக்­கொள்ள வழி உள்­ளதா?–அப்­லாண்ட் கார்ப்­போ­ரேட், சென்னை
நீங்­கள் தாக்­கல் செய்த ரிட்­டர்ன் படி­வத்­தில் மாற்­றங்­கள் செய்ய இய­லாது. ஜூலை மாத வழங்­கல்­க­ளுக்கு, மாத ரிட்­டர்ன் ஜி.எஸ்.டி ஆர்.1 தாக்­கல் செய்­யும்­போது, சரி­யான விப­ரத்தை குறிப்­பிட்டு கணக்கை சரி செய்து கொள்­ள­லாம்.
*********
சார், ஜி.எஸ்.டி., ஆர்.3பி ரிட்­டர்ன் ஒவ்­வொரு மாத­மும் தாக்­கல் செய்ய வேண்­டுமா?–மாத­வன், நிலக்­கோட்டை
ஜி.எஸ்.டி., எனும் புதிய சட்­டத்­திற்கு வணி­கர்­களை தயார் செய்­வ­தற்கு ஏது­வாக, அனைத்து தக­வல்­களும் அடங்­கிய முழு­மை­யான ரிட்­டர்ன் படி­வத்­திற்கு பதில், எளி­மைப்­ப­டுத்­தப்­பட்ட, ஜி.எஸ்.டி., ஆர்.3பி ரிட்­டர்ன் தாக்­கல் செய்ய வேண்­டும். இந்த ரிட்­டர்ன், ஜி.எஸ்.டி., அமல்­ப­டுத்­திய ஜூலை மாதத்­திற்­கான வழங்­கல்­களுக்கு மட்­டும் பொருந்­தும். இதை ஒவ்­வொரு மாத­மும் தாக்­கல் செய்ய வேண்­டாம்.
*********
பதிவு செய்­யாத நப­ரி­டம், ஜாப் ஒர்க் முறை­யில் சேவை­களை பெறும்­போது, ரிவெர்ஸ் சார்ஜ் முறை­யில் வரி செலுத்­த­வேண்­டும் என்று கூறி­யி­ருந்­தீர்­கள். இத்­த­கைய சேவைக்­கான பில், நாங்­கள் உரு­வாக்க வேண்­டுமா, அல்­லது ஜாப் ஒர்க் செய்­யும் நபர் அளிக்க வேண்­டுமா?திரு­வண்­ணா­மலை, அருப்­புக்­கோட்டை
வணிக ரீதி­யாக, ஜாப் ஒர்க் செய்­யும் பதிவு பெறாத நபர், பில் அளிப்­பார். அதற்கு நீங்­கள் பணம் செலுத்­து­வீர்­கள். இதில் மாற்­றம் இல்லை. இத்­த­கைய பரி­வர்த்­த­னைக்கு ரிவெர்ஸ் சார்ஜ் முறை­யில் ஜி.எஸ்.டி., வரி செலுத்­து­வ­தற்­காக, நீங்­கள் வரி விலைப் பட்­டி­யலை உங்­கள் பெய­ரில் உரு­வாக்கி வைத்­துக்­கொள்ள வேண்­டும். இதை, ‘செல்ப் இன்­வாய்­சிங்’ என குறிப்­பி­டு­வர்.
*********
ஐயா, என்­னு­டைய இரு­சக்­கர வாக­னத்தை பரா­ம­ரிப்­புக்­காக, கம்­பெனி சர்­வீஸ் சென்­ட­ரில் கொடுத்த போது, பில்­லில், ஜி.எஸ்.டி., தொகையை சேர்த்­தி­ருந்­த­னர். அந்த ஜி.எஸ்.டி., தொகையை நான் திரும்ப பெற முடி­யுமா? முடி­யு­மெ­னில் அதற்கு என்ன செய்ய வேண்­டும்?அருள்­ஜோதி, திருப்­பூர்
உங்­களின் ஜி.எஸ்.டி., பதிவு குறித்து நீங்­கள் எந்த விப­ர­மும்அளிக்­க­வில்லை. ஒரு­வேளை, நீங்­கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்­யப்­பட்ட நபர் என்­றால், உங்­களின் வணி­கத்­திற்­காக வாக­னத்தை உப­யோ­கிக்­கி­றீர்­கள் என்­றால், அதன் பரா­ம­ரிப்பு செல­வில்,செலுத்­திய ஜி.எஸ்.டி., வரியை உள்­ளீட்டு வரிப் பய­னாக பெற­லாம். நீங்­கள் உங்­களின் பதிவு எண்ணை குறிப்­பிட்டு பில் பெற­வேண்­டும். நீங்­கள் பதிவு செய்­யப்­ப­டாத நப­ராக இருப்­பின், செலுத்­திய தொகையை திரும்ப பெற இய­லாது.
*********
நான் வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு ஆலோ­சனை அளிக்­கி­றேன். ஜி.எஸ்.டி., பதி­வும் பெற்­று­விட்­டேன். வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள், என் வங்கி கணக்­கிற்கு பணத்தை டால­ராக அனுப்­பு­கின்றன, அதை இந்­திய ரூபா­யாக மாற்­று­வ­தற்கு வங்கி கட்­ட­ணம் வசூ­லிக்­கிறது. அதில் ஜி.எஸ்.டி., வரி­யும் விதிக்­கின்­ற­னர். அந்த வரி தொகையை நான் உள்­ளீட்டு வரிப் பய­னாக பெற­லாமா?கண­பதி, தி.நகர்
நீங்­கள் வங்கி கட்­ட­ணத்­தில் செலுத்­திய, ஜி.எஸ்.டி., தொகையை உள்­ளீட்டு பய­னா­கப் பெற­லாம். இதற்கு தடை­யொன்­றும் இல்லை.
*********
நாங்­கள் திரு­வள்­ளூர் அருகே, எங்­க­ளு­டைய தொழிற்­சா­லை­யில் சுகா­தார மையம் ஒன்றை வைத்­துள்­ளோம். அதில் உள்ள மருத்­து­வர் மற்­றும் செவி­லி­யர்­க­ளுக்கு ஒப்­பந்­தக்­கா­ரர்­கள் மூலம் பணம் செலுத்­து­கி­றோம். மருத்­து­வர் மற்­றும் செவி­லி­யர்­க­ளுக்கு செலுத்­தும் தொகை­யில், ஜி.எஸ்.டி., வரி வருமா?கம­லக்­கண்­ணன், திரு­வள்­ளூர்
பதிவு பெற்ற மருத்­து­வ­ரது சேவைக்கு, ஜி.எஸ்.டி., வரி­யி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது.
- ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)