சரிவில் இருந்து மீண்டது தயாரிப்பு துறைசரிவில் இருந்து மீண்டது தயாரிப்பு துறை ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு ...
இரவு 7.30 மணி வரை இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தக நேரம் நீட்டிப்பு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2017
00:22

புதுடில்லி : பங்கு வர்த்­தக நேரத்தை இரவு 7.30 மணி வரை நீட்­டிப்­பது குறித்து, இந்­திய பங்­குச் சந்­தை­கள் தீவி­ர­மாக பரி­சீ­லித்து வரு­வ­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

இந்­தி­யா­வில் மிகப் பெரிய பங்­குச் சந்­தை­க­ளாக மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­கள் விளங்­கு­கின்றன. இவற்­று­டன், கோல்­கட்டா, கொச்சி என, பல்­வேறு நக­ரங்­களில், சிறிய அள­வி­லான பங்­குச் சந்­தை­கள் இயங்கி வரு­கின்றன. இச்­சந்­தை­களில், 2009 வரை, பங்கு வர்த்­த­கம், காலை, 9:45 மணிக்கு துவங்கி மாலை, 4:00 மணி வரை நடை­பெற்று வந்தது.

இந்­நி­லை­யில், சிங்­கப்­பூர், ஜப்­பான் உள்­ளிட்ட பெரும்­பா­லான ஆசிய நாடு­களில், பங்கு வர்த்­த­கம், முன்­கூட்­டியே துவங்கி விடு­வ­தால், அதற்­கேற்ப வர்த்­த­கத்தை முன்­ன­தா­கவே துவக்க வேண்­டும் என, இந்­திய பங்­குச் சந்­தை­கள், 'செபி' யிடம் கோரின. இதன் மூலம், முத­லீட்­டா­ளர்­கள் இதர ஆசிய நாடு­களை போல, இந்­திய பங்­குச் சந்­தை­க­ளி­லும், ஒரே சம­யத்­தில் வர்த்­த­கம் மேற்­கொள்­ள­லாம் ; வர்த்­தக ஏற்ற, இறக்க பாதிப்பை சமா­ளிக்­க­லாம் என, தெரி­விக்­கப்­பட்­டது.

இதை ஏற்று, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, 'செபி', பங்கு வர்த்­தக நேரத்தை மாற்ற அனு­மதி அளித்­தது. அதன்­படி, இந்­திய பங்­குச் சந்­தை­களின் வர்த்­த­கம், 2010, ஜன­வரி 4 முதல், காலை, 9:00 மணிக்கு துவங்கி மாலை, 3:30 மணி வரை நடை­பெற்று வரு­கிறது. இந்­நி­லை­யில், பெரும்­பா­லான ஐரோப்­பிய பங்­குச் சந்­தை­களின் போக்­கிற்கு ஏற்ப, முத­லீட்டு முடி­வு­களை எடுக்­க­வும், சந்­தை­யின் வர்த்­த­கத்தை அதி­க­ரிக்­க­வும், பங்கு வர்த்­தக நேரத்தை மாலை, 5:00 மணி அல்லது இரவு, 7:30 மணி வரை நீட்­டிப்­பது குறித்து, இந்­திய பங்­குச் சந்­தை­கள் தீவி­ர­மாக ஆலோ­சித்து வரு­கின்றன.

இது குறித்து, பங்­குத் தர­கர் ஒரு­வர் கூறி­ய­தா­வது: சில ஆண்­டு­க­ளுக்கு முன், பங்கு வர்த்­தக நேரத்தை நீட்­டிப்­பது குறித்து பேச்சு எழுந்­தது. அப்­போது பங்­குத் தரகு நிறு­வ­னங்­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தன. தற்­போது மீண்­டும், இத்­திட்­டத்தை அமல்­ப­டுத்த பங்­குச் சந்­தை­கள் துடிக்­கின்றன. இத்­திட்­டம் அம­லா­னால், பங்­கு தரகு நிறு­வன பணி­யா­ளர்­கள், 10 மணி நேரம், இரு 'ஷிப்ட்'களில் வேலை செய்ய நேரும். மேலும், முத­லீட்­டா­ளர்­களின் 'ஆர்­டர்'களை செயல்­ப­டுத்த, காலை, மாலை என, குறைந்­த­பட்­சம் இரண்டு ஆலோ­ச­கர்­களை நிய­மிக்க வேண்­டும்.

காலை­யில், பங்­கு­களை ஒரு ஆலோ­ச­க­ரி­டம் வாங்­கச் சொல்­லும் முத­லீட்­டா­ளர், மாலை­யில் அப்­பங்­கின் நில­வ­ரத்தை அறிந்து, முடி­வெ­டுக்க, இந்த பரி­வர்த்­தனை குறித்து சிறி­தும் அறி­யாத, வேறொரு ஆலோ­ச­கரை அணுக வேண்­டும். இத­னால், முத­லீட்­டா­ள­ருக்கு சரி­யான ஆலோ­சனை வழங்க முடி­யாத நிலை ஏற்­படும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

ஆனால், 'நவீன தொழில்­நுட்ப வச­தி­கள் மூலம், இது­போன்ற பிரச்­னையே இல்­லா­மல், முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு சிறப்­பான ஆலோ­சனை வழங்க முடி­யும்' என, பங்­குச் சந்­தை­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­ப­டு­கிறது. எனி­னும், 'செபி' அனு­மதி அளித்­தால் மட்­டுமே, இத்­திட்டம் சாத்­தி­ய­மா­கும்.

ஒரே நாளில் வாபஸ்:
மெட்­ரோ­பா­லிட்­டன் பங்­குச் சந்தை, ஜூலை, 7ம் தேதி முதல், பங்கு வர்த்­த­கம் 9:00 – 5:00 மணி வரை நடை­பெ­றும் என, அறி­வித்­தது. ஆனால், பங்­குத் தரகு நிறு­வ­னங்­களின் எதிர்ப்பு கார­ண ­மாக மறு­நாளே, அந்த அறிக்­கையை வாபஸ் பெற்­றுக் கொண்­டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)