பதிவு செய்த நாள்
03 செப்2017
05:59

நாங்கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்து, பதிவு எண்ணையும் பெற்றுவிட்டோம். ஜி.எஸ்.டி., பதிவில், எங்களுடைய நிறுவனத்தின் பெயர் தவறாக உள்ளது. அதில் மாற்றம் செய்ய இயலுமா?– ஹரிஷ், கோவில்பட்டிஉங்களால் மாற்றம் செய்ய இயலும். ஆனால், அதற்குரிய வழிவகை இன்னும் இணையதளத்தில் செய்யப்படவில்லை. அது செய்யப்பட்ட பின், நீங்கள் திருத்தம் செய்துக் கொள்ளலாம்.
சார், யு.டி.ஜி.எஸ்.டி., எந்தெந்த மாநிலங்களில் விதிக்கப்படும்?– கருணாகரன், வந்தவாசிசட்டசபை இல்லாத யூனியன் பிரதேசத்தில், யு.டி.ஜி.எஸ்.டி., விதிக்கப்படும். கீழ்கண்ட பிரதேசங்கள் இதில் அடங்கும்.அந்தமான் – நிக்கோபார் தீவுகள், லட்சத் தீவுகள், டையூ – டாமன்,தாத்ரா – நாகர் ஹவேலி, சண்டிகர் ஆகிய பிரதேசங்களில், மாநிலத்தில் விதிக்கக்கூடிய, எஸ்.ஜி.எஸ்.டி., விதிக்கு பதிலாக, யு.டி.ஜி.எஸ்.டி., விதிக்கப்படும்.
உலர்ந்த திராட்சை வகைகளை பாக்கெட் செய்து, மொத்த விற்பனை செய்து வருகிறோம். நாங்கள், ‘பிராண்டு’ பெயர் எதுவும் வைக்கவில்லை. இதற்கு, ஜி.எஸ்.டி., விதிப்பு உண்டா?– வரதராஜன், கும்பகோணம்உலர்ந்த திராட்சை வகைகளுக்கு, 5 சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்கப்படும். நீங்கள், ‘பிராண்டு’ பெயர் பதிவு செய்யாவிட்டாலும் இதற்கு வரி உண்டு.
சார், நான், இரண்டு லாரிகள் வைத்து சரக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு உள்ளேன். என் ஆண்டு மொத்த வருமானம், 20 லட்சம் ரூபாயை தாண்டிவிடும். நான், பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு மட்டும், ‘கான்ட்ராக்ட்’ முறையில் சேவை செய்கிறேன். நான், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டுமா? இதில், மாற்று கருத்து நிலவுகிறது. தயவு செய்து விளக்கவும்.– ரமணிசந்திரன், ஈரோடுநீங்கள், பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு மட்டுமே, சரக்கு போக்குவரத்து சேவை செய்தால், அதற்கான, ஜி.எஸ்.டி.,யை, சேவையை பெறும் நபர்கள், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில் செலுத்த வேண்டும். எனவே, உங்களுடைய, ஜி.எஸ்.டி., பதிவு கட்டாயம் இல்லை. ஆனால், பதிவு செய்யப்படாத நபர்களுக்கும், நீங்கள் சேவையை அளித்தால், அந்த சேவைக்கு, நீங்கள் வரி வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும். அந்த தருணத்தில் மட்டுமே, உங்களுக்கு, ஜி.எஸ்.டி., பதிவு அவசியம்.
நாங்கள், ‘ஸ்குவாஷ்’ விளையாட்டிற்காக கூட்டமைப்பு வைத்துள்ளோம். தமிழக அரசு மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற்றுள்ளோம். வருமான வரி பிரிவு – 12ஏஏ பதிவும் பெற்றுள்ளோம். கீழ்கண்ட எங்களுடைய சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்படுமா?1. எங்களால், விளையாட்டு வீரர்களிடமிருந்து, தேசிய போட்டிகளுக்காக வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணம்2. எங்களால் பெறப்படும், ‘ஸ்பான்சர்ஷிப்’ தொகை3. விளையாட்டு வீரர்களிடம் இருந்து பெறப்படும் பதிவு தொகை– செயலர், ஸ்குவாஷ் விளையாட்டு மன்றம்நீங்கள், வருமான வரி பிரிவு – 12ஏஏ பதிவை பெற்றிருப்பதால், வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிக்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்படாது. நீங்கள், விளையாட்டு வீரர்களிடம் இருந்து வசூலிக்கும் போட்டிக்கான நுழைவுக் கட்டணம் மற்றும் பதிவுத் தொகைக்கு, ஜி.எஸ்.டி., விதிக்கக் கூடாது. ஜி.எஸ்.டி., சட்டப்படி, ‘ஸ்பான்சர்ஷிப்’ தொகை அளிப்பவர், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில், வரி செலுத்த வேண்டும். நீங்கள், விளையாட்டு அமைச்சகத்திடம் இருந்து அனுமதி பெற்றுள்ள காரணத்தால், உங்களுக்கு, ‘ஸ்பான்சர்ஷிப்’ தொகை அளித்தவர்கள், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில், வரி செலுத்த வேண்டாம். அதற்கு விலக்கு உள்ளது.
சார், மேடை நாடகத்திற்கு நுழைவுக் கட்டணத்தில், 18 சதவீதம், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்டுமென, குறிப்பிட்டு இருந்தீர்கள். அவ்வாறு செய்தால், நாங்கள், நாடக அரங்கிற்கு செலுத்திய வாடகை தொகையிலுள்ள, ஜி.எஸ்.டி., தொகையை முழுமையாக பெற முடியுமா அல்லது ஏதேனும் குறைக்கப்படுமா?– வேணுகோபால், சென்னைஉங்களுடைய வரி விதிக்கக்கூடிய வழங்கல்களுக்கான, செலுத்திய வரியை உள்ளீட்டு வரி பயனாக பெறலாம். நீங்கள் குறிப்பிட்டபடி, நாடக அரங்கிற்கு செலுத்திய வாடகையிலுள்ள, ஜி.எஸ்.டி.,யை முழுமையாக உள்ளீட்டு வரி வரி பயனாக பெறலாம். இதில், எந்த தொகையும் குறைக்கப்பட மாட்டாது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|