பதிவு செய்த நாள்
03 செப்2017
06:02

புதுடில்லி : நடப்பு, 2017-- – 18ம் நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் மொத்த பொது கடன், 3.6 சதவீதம் அதிகரித்து, 63.35 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கடந்த நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், நாட்டின், மொத்த பொது கடன் (பொது கணக்கின் கீழ் உள்ள கடன்கள் நீங்கலாக) 61.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள, பொது கடன் மேலாண்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:நடப்பு நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் மொத்த பொது கடனில், உள்நாட்டின் பங்கு, 93 சதவீதமாக உள்ளது; அதில், நிதிச் சந்தை கடன்களின் பங்கு, 83.2 சதவீதமாகும். நாட்டில், பணப்புழக்கம் நன்கு உள்ளது.பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், மதிப்பீட்டு காலாண்டில், பணம் உபரியாகவே புழக்கத்தில் இருந்துள்ளது.கடந்த, 2016- – 17ம் நிதியாண்டு துவக்கத்தில், மத்திய அமைச்சகங்கள் புதிய திட்டங்களை செயல்படுத்த முனைந்தன. இதையொட்டி, இத்திட்டங்களின் முதற்கட்ட செலவினங்களுக்காக, அதிக தொகை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே சமயம், ஏற்கனவே வெளியிட்டு முதிர்ச்சி அடைந்த, அரசு கடன் பத்திரங்களுக்கு, திரும்பத் தர வேண்டிய தொகையும் அதிகமாக இருந்தது. இது போன்ற காரணங்களுடன், வழக்கமாக, முதல் அரையாண்டில் குறைந்து காணப்படும் பணப்புழக்கமும், நிதி தட்டுப்பாட்டிற்கு வழிவகுத்து விட்டது. இதன் காரணமாக, மத்திய அரசு, முதல் காலாண்டில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து, மிகைப் பற்று, தற்காலிக கடன் உட்பட, பல வழிகளில் பணம் திரட்டியது. இந்த வகையில், மத்திய அரசு, 1.30 லட்சம் கோடி ரூபாய் பெற்றது. இத்தொகையில், 40 ஆயிரம் கோடி ரூபாய், அதே காலாண்டில் திரும்ப அளிக்கப்பட்டது.இதையடுத்து, மத்திய அரசு, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் தற்காலிக கடனுக்கான வரம்பை, 60 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயித்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மத்திய அரசு, குடிநீர் வசதி, மின்சாரம், சாலை, துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட, அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதால், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் பங்குதேசிய பொது கடன் என்பது, மத்திய அரசு பெறும் மொத்த கடனில் ஒரு பகுதியாகும். இதில், நிதிச் சந்தை கடன்கள், சிறப்பு கடன் பத்திரங்கள், கருவூல பில்கள், சிறப்பு கடன்கள், கடன் பத்திரங்கள் ஆகியவையும், வெளிநாடுகளுக்கு அளிக்க வேண்டிய கடனும் அடங்கும்.மத்திய அரசின் ரொக்க கணக்கை பராமரிக்கும் பொறுப்பு, ரிசர்வ் வங்கியிடம் உள்ளது. பணத் தட்டுப்பாடு ஏற்படும் போது, ரிசர்வ் வங்கி வாயிலாக பெறும் தற்காலிக கடன்கள், கடன் பத்திர வெளியீடுகள் போன்றவற்றின் மூலம், நிலைமை சமாளிக்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|