பதிவு செய்த நாள்
04 செப்2017
07:24

எந்த வகையான தடை அல்லது சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு, சாதகமாக மாற்றிக் கொள்வதற்கான வழிகளை, ‘தி அப்ஸ்டகல் ஈஸ் தி வே’ புத்தகத்தில், ரயான் ஹாலிடே விவரிக்கிறார்:
நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களை நாம் எப்படி பார்த்து, அவை தொடர்பான கருத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. இந்த விஷயங்கள் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதும் முக்கியம். நம்முடைய இந்த கருத்து பலமாகவோ, பலவீனமாகவோ அமையலாம். தடைகளை எதிர்கொள்ளும் போது, நாம் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். நாம், அறிவுப்பூர்வமாக நடந்து கொள்ளவும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் முயற்சிக்க வேண்டும்.
பதற்றமடையாமல், எல்லாவற்றையும் சரியாக பொருத்திப் பார்க்க வேண்டும். தற்போதைய தருணத்தில் மனதை செலுத்தி கட்டுப்படுத்தக் கூடியவை மீது கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் தடைகளுக்கு மத்தியில் வாய்ப்புகளை காணலாம். இதற்கு கொஞ்சம் பயிற்சி தேவை. நிகழ்வுகள் தொடர்பான நம்முடைய புரிதலால் நாம் அவற்றை சிக்கலாக்கி கொள்கிறோம். நம்முடைய புரிதல் இல்லாமல் நல்லதோ, தீங்கானதோ இல்லை. நிகழ்வுகள் இருக்கின்றன. அவற்றை பற்றி நாம் சொல்லிக் கொள்ளும் கதைகள் இருக்கின்றன. ஆக, எண்ணம் தான் எல்லாவற்றையும் மாற்றுகிறது அல்லவா?
ஒரு சூழல் மோசமாக இருக்கிறது என, மற்றவர்கள் சொல்வதால் மட்டும் அது அவ்வாறு ஆகிவிடுவதில்லை. நாமும் அப்படி சொல்லிக் கொள்கிறோம். ஆக, நாம் கொண்டு உள்ள கருத்து பலவற்றை மாற்றக்கூடியது என்பதை அறிய வேண்டும். உண்மையில் நம் சூழல் எந்த அளவு ஆபத்தாக இருக்கிறது என்பதை மீறி, நாம் கொண்டுள்ள மன அழுத்தம், அச்சத்தின் விளைவுகளுக்கு உள்ளாக்குகிறது. நெருக்கடியான சூழல் அல்லது தடையை எதிர்கொள்ளும் போது, உங்களுக்குள் ஒரு உரையாடலை மேற்கொள்ளுங்கள்.
நடந்த நிகழ்வுகள் உங்களை நியாயமாக, கட்டுப்பாட்டுடன், கருணையுடன், நேர்மையாக, புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதில் இருந்து தடுக்கிறதா? இல்லை எனில், உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்.இந்த நிலை பற்றி நான் கவலைப்பட வேண்டுமா எனும் கேள்வியை ஆழ் மனதில் கேட்டுக் கொண்டே இருங்கள். இந்த சூழலில் இருந்து உங்களை விலக்கி கொண்டு, மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வது போல யோசித்துப் பாருங்கள். மற்றவர்கள் நிலையில் யோசிக்கும் போது சுமையில்லாமல் யோசிக்கலாம். உங்கள் சூழலை எடுத்துக் கொண்டு, அது உங்களுக்கு நிகழவில்லை என நினைத்துக் கொண்டு யோசியுங்கள். இந்த சூழலை எப்படி கையாளலாம் என யோசித்துப் பாருங்கள். நாம் கொள்ளும் கருத்தே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|