பதிவு செய்த நாள்
04 செப்2017
07:26

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் தாக்கத்தால், நிதிச் சேவைகள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்வது அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள தகவல்கள் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பலன்கள் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், இந்தியர்கள் நிதிச் சேவைகளில் அதிகம் முதலீடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
ரிசர்வ் வங்கி தகவலின் படி, 2017ம் ஆண்டில், ‘டிஸ்போசபிள் இன்கம்’ என சொல்லப்படும் செலவிடக்கூடிய வருமானத்தில், 11.8 சதவீதம் நிதிச் சேவைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இது, 10.9 சதவீதமாக இருந்தது. இவற்றில் பெரும்பகுதி வங்கி சேமிப்பு கணக்கில் அமைந்திருந்தாலும், மற்ற நிதிச் சாதனங்களிலும் முதலீடு அதிகரித்துள்ளது. சேமிப்பு கணக்கு டிபாசிட், 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பங்குகளில் முதலீடும் செலவிடக்கூடிய வருமானத்தில், 1.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டில், 0.2 சதவீதமாக இருந்தது. இந்த காலத்தில் பங்குச் சந்தை குறியீடுகளும் உயர்ந்துள்ளன. ‘மியூச்சுவல் பண்ட்’ திட்டங்களில் முதலீடு அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|