பங்­கு­களில் முத­லீடு அதி­க­ரிப்புபங்­கு­களில் முத­லீடு அதி­க­ரிப்பு ... பண்­டிகை கால செலவில் தாராளம் காட்டலாமா? பண்­டிகை கால செலவில் தாராளம் காட்டலாமா? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பங்குச் சந்தை பாடங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2017
07:30

பங்குச் சந்தை முத­லீட்­டா­ள­ராக திகழ பொறு­மையும், நிதா­னமும் அவ­சியம். சந்­தையின் ஏற்­றத்­தாழ்வு தொடர்­பான பர­ப­ரப்­புக்கு மத்­தி­யிலும், பங்­கு­களின் அடிப்­ப­டையில் கவனம் செலுத்த வேண்டும். அதோடு, பங்கு முத­லீட்­டா­ளர்கள் செய்யும் வழக்­க­மான தவ­று­க­ளையும் தவிர்க்க வேண்டும். பொது­வாக, பங்கு முத­லீட்­டா­ளர்கள் செய்யும் இந்த தவ­று­களை தவிர்ப்­பதன் மூலம், பங்கு முத­லீட்டில் உங்கள் வெற்றி விகி­தத்தை அதி­க­மாக்கி கொள்­ளலாம்.

திட்டம் தேவை:
எந்த ஒரு முத­லீட்­டா­ள­ருக்கும் தெளி­வான திட்டம் அவ­சியம். அப்­போது தான் என்ன தேவை என்­பதை தீர்­மா­னிக்க முடியும். அதற்­கேற்ப முத­லீட்டு வாய்ப்­பு­களை தேர்வு செய்­யலாம். ஒரு சிலர், ஓய்வு காலத்­திற்­காக முத­லீடு செய்­யலாம். இன்னும் சிலர், குறு­கிய பலனை மனதில் கொண்டு முத­லீடு செய்­யலாம். எப்­படி இருந்­தாலும், முத­லீட்­டிற்­கான அடிப்­படை திட்டம் இருந்தால் மட்­டுமே, என்ன வகை பங்­கு­களில், எவ்­வ­ளவு காலம் முத­லீடு செய்­யலாம் என, தீர்­மா­னிக்க முடியும்.

ஆய்வு அவ­சியம்:
திட்­ட­மி­டாமல் முத­லீடு செய்­வதைப் போலவே, போதிய ஆய்வு செய்­யாமல் முத­லீடு செய்­வதும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தலாம். மற்­ற­வர்கள் சொல்லும் ஆலோ­ச­னைகள் அல்­லது வெறும் யூகத்தின் அடிப்­ப­டையில் முத­லீடு செய்­வதை தவிர்க்க வேண்டும். பங்­கு­களின் செயல்­பாடு, வர­லாறு உள்­ளிட்ட அம்­சங்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றின் அடிப்­படை பற்றி தெளிவு பெற்ற பின், முத­லீடு குறித்து தீர்­மா­னிக்க வேண்டும்.

சந்தை போக்கு:
சந்­தையின் போக்கு தொடர்­பாக வெளி­யாகும் செய்­தி­க­ளுக்கு அதிக முக்­கி­யத்­துவம் அளிக்கக் கூடாது. பங்­குகள் தொடர்­பான அறிக்­கை­களை வாசிக்­கலாம். ஆனால், சந்தை போக்கை பின்­தொ­டர்ந்து செயல்­படும் போது, பல நேரங்­களில் யூகத்தின் அடிப்­ப­டையில் முடிவு செய்ய நேரலாம். இதனால், இழப்பும் உண்­டா­கலாம். சந்தை போக்கை கவ­னத்தில் கொண்­டாலும், சொந்­த­மாக ஆய்வு செய்ய வேண்டும்.
முத­லீட்டு கூடை:
உங்­க­ளிடம் புரோட்­போ­லியோ என சொல்­லப்­படும் முத­லீட்டு கூடை இருக்க வேண்டும். அதில் பங்­குகள், பத்­தி­ரங்கள், இ.டி.எப்.,கள் என, பல வகை­யான முத­லீட்டு சாத­னங்கள் இருக்க வேண்டும். அதா­வது, உங்கள் முத­லீடு பர­வ­லாக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். மாறாக, பங்­கு­களில் மட்டும் முத­லீடு செய்­வது ரிஸ்­கா­னது. இதி­லி­ருந்து தற்­காத்­துக் ­கொள்ள பர­வ­லாக்கல் அவ­சியம்.

பலன் மட்டும் போதுமா?
அதிக பலன் தரும் பங்­கு­களில் மட்டும் கவனம் செலுத்­து­வது ரிஸ்­கா­னது. பங்­குகள் கடந்த காலத்தில் சிறந்த பலனை அளித்த கார­ணத்தால் மட்டும், அவை தொடர்ந்து அதே வித­மான பலன் தரும் என்ற நிச்­ச­ய­மில்லை. எனவே, எதிர்­கால வளர்ச்சி சாத்­தி­ய­மான பங்­கு­க­ளிலும் கவனம் செலுத்த வேண்டும். நிறு­வன செயல்­பா­டு­களை விரி­வாக ஆய்வு செய்து தீர்­மா­னிக்க வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)