பதிவு செய்த நாள்
04 செப்2017
07:32

தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் என, வரிசையாக பண்டிகைகள் அணிவகுக்கும் விழா காலத்தின் கொண்டாட்ட மன நிலையில், ‘ஷாப்பிங்’ செய்வதும் முக்கிய பங்கு வகிக்கிறது. விழா காலத்தில், புத்தாடைகளும், தேவையான பொருட்களும் வாங்கி மகிழலாம் என்றாலும், இதில் ஒரு கட்டுப்பாடும் அவசியம் என, வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
தள்ளுபடி போன்ற சலுகைகளால் ஈர்க்கப்பட்டு அளவுக்கு அதிகமாக செலவு செய்தால், கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, விழா கால செலவுகளை தீர்மானிக்கும் முன், சில விஷயங்களை மனதில் கொள்வது நல்லது.
திட்டமிடல்:
முதலில் விருப்பங்களையும், தேவைகளையும் பிரித்தறிய வேண்டும். தேவையான பொருட்களை வாங்கலாம், ஆனால், விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்குவதை தவிர்ப்பது நலம். எனவே, விழா கால ‘ஷாப்பிங்’கை துவக்கும் முன், எந்த பொருட்களை எல்லாம் வாங்க வேண்டும் என, திட்டமிட்டு பட்டியல் போட வேண்டும்; அதற்கான பட்ஜெட்டையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இந்த பட்டியலுக்கு ஏற்பவே பொருட்களை வாங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், பார்த்தவுடன் விருப்பம் கொண்டு பொருட்களை வாங்குவதை தவிர்க்கலாம்.
விழா காலம் என்றவுடன், தள்ளுபடி அறிவிப்புகளும் அனேகம் இருக்கும். ஆன்லைனிலும் பல அதிரடி தள்ளுபடி திட்டங்களை காணலாம். ஆனால், தள்ளுபடியை பார்த்தவுடன் பொருட்களை வாங்க வேண்டாம். அந்த பொருள் தேவை தானா என, யோசிக்க வேண்டும். அதன் பின், உண்மையிலேயே அந்த பொருள் தள்ளுபடியில் கிடைக்கிறதா என்பதற்காக விலைகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இணையத்தில் பல விலை ஒப்பீட்டு இணையதளங்கள் இருக்கின்றன.
பொதுவாக சேமித்து வைத்து இருக்கும் பணத்தில் பொருட்களை வாங்குவதே சரியாக இருக்கும். இதற்கென கடன் வாங்குவது சரியல்ல. இது, கூடுதல் சுமையை ஏற்படுத்தும். கிரெடிட் கார்டு வசதியையும் திட்டமிட்டு புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், கிரெடிட் கார்டு தொகைக்கான காலத்தையும் கணக்கிட வேண்டும்.
அதே போல நெருங்கியவர்களுக்கும், நண்பர்களுக்கும் பண்டிகை கால பரிசுகள் வாங்கிக் கொடுக்கும் போது, நீண்ட நாள் சொத்தாக இருக்கக்கூடிய வகையில் நிதி சாதனங்களை தேர்வு செய்து பரிசளிக்கலாம்; தங்க நாணயம் போன்றவையும் ஏற்றவை. அது மட்டும் அல்ல, இந்த பண்டிகைக்காக தனியே சேமித்து வைத்திருக்கவில்லை எனில், அடுத்த பண்டிகை காலத்திற்கான சேமிப்பை இப்போது துவங்கலாம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|