பதிவு செய்த நாள்
04 செப்2017
16:34

மும்பை : வர்த்தகவாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பமாகி, சரிவுடனேயே முடிந்தன.
வடகொரியா மீண்டு அணு ஆயுத சோதனை நடத்தியிருப்பது மீண்டும் சர்வதேச அளவில் டென்சனை உருவாக்கியிருக்கிறது. இதன் காரணமாக உலகளவில் பங்குச்சந்தைகளில் சுணக்கமான சூழல் நிலவியது. இதனால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன. மேலும் ரூபாயின் மதிப்பும் சரிந்ததும் பங்குச்சந்தைகள் சரிய மற்றுமொரு காரணமாகின.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 190 புள்ளிகள் சரிந்து 31,702.25-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 61.55 புள்ளிகள் சரிந்து 9.912.85-ஆகவும் நிறைவடைந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|