சவரன் ரூ.23,000 க்கு கீழ் சரிந்தது தங்கம் விலைசவரன் ரூ.23,000 க்கு கீழ் சரிந்தது தங்கம் விலை ... அடுத்த ஆண்டு முதல் 5ஜி சோதனை செய்ய பி.எஸ்.என்.எல். திட்டம் அடுத்த ஆண்டு முதல் 5ஜி சோதனை செய்ய பி.எஸ்.என்.எல். திட்டம் ...
365 நாட்கள், 13 கோடி வாடிக்கையாளர்கள்: ஜியோ புதிய சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2017
16:11

மும்பை: இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான ஒரு வருட ஆண்டு விழாவை முன்னிட்டு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தனது ஊழியர்களை நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன்படி, ஜியோ கடந்த 365 நாட்களில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 5, 2017 உடன் ஒரு ஆண்டை நிறைவு செய்த ரிலையன்ஸ் ஜியோ சேவையில் இதுவரை 13 கோடி பேர் இணைந்துள்ளனர். இத்தகைய சாதனையையொட்டி உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட ஜியோவின் அனைத்து பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதோடு சர்வதேச சந்தையிலும் ஜியோ தனக்கான இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் சேவைகளை துவங்கிய ஒரு வருட காலத்தில் 13 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஜியோவின் அசுர வளர்ச்சி ஆய்வு பொருளாகியுள்ளதாக அம்பானி தெரிவித்துள்ளார்.
செப்டபம்பர் 5, 2016 துவங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் மொத்தம் 30,000 நேரடி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். செப்டம்பர் முதல் மார்ச் மாத இறுதிவரை அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கியது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கட்டண சேவையை துவங்கிய ஜியோ வாழ்நாள் முழுக்க தனது வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தின் சமீபத்திய அறிக்கையின் படி ஜூன் 2017 வரை 12.33 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோ சேவையை பயன்படுத்தி வருகிறது. ஜியோ அதிகாரி ஒருவரின் தகவலின் படி இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு மாதம் 20 கோடி ஜிபியில் இருந்து 150 கோடி ஜிபி வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் ஜியோ வாடிக்கையாளர்கள் மட்டும் 125 கோடி ஜிபி டேட்டாவினை பயன்படுத்துகின்றனர்.
ஜூலை மாதத்தில் ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி இந்தியாவின் அனைத்து பீச்சர் போன் பயனர்களுக்கும் ஏற்ற ஜியோபோன் சாதனத்தை முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அறிவித்தார். ஜியோபோன் முன்பதிவுகள் ஆகஸ்டு 24-ம் தேதி துவங்கியது. முன்பதிவு துவங்கியது முதல் பல லட்சம் பேர் முன்பதிவு செய்ததால் ஒரே நாளில் முன்பதிவு நிறுத்தப்பட்டது. ஜியோபோன் முன்பதிவில் வாடிக்கையாளர்கள் வழங்கிய வரவேற்பைத் தொடர்ந்து முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஜியோ அறிவித்தது.


அந்தவகையில் ஜியோபோன் வாங்க முதற்கட்ட முன்பதிவில் சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என அறிவித்துள்ளது. ஒரே நாளில் இத்தனை பேர் முன்பதிவு செய்திருப்பது ஜியோவின் எதிர்பார்ப்புகளை மிஞ்சிவிட்டதாக தெரிவித்துள்ளது. முன்னதாக வாரத்திற்கு 50 லட்சம் ஜியோபோன்களை விநியோகம் செய்ய ஜியோ திட்டமிட்டிருந்த நிலையில் ஜியோபோன் விநியோகம் செப்டம்பர் 21-ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம் வெள்ளி சந்தை செப்டம்பர் 07,2017
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
வர்த்தக துளிகள் செப்டம்பர் 07,2017
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)