பதிவு செய்த நாள்
09 செப்2017
01:34

ஐயா, நான் ஆலோசகராக உள்ளேன். என் வாடிக்கையாளர் ஒருவர், ஜி.எஸ்.டி., பதிவு பெற்று, பந்தல் மற்றும் பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.சிறு நிகழ்ச்சிகளுக்கு வழங்கக்கூடிய வழங்கல்களுக்கு, பெறுநர் பதிவு பெறாத காரணத்தால், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில் வரி செலுத்த வேண்டுமா?– ரமேஷ், பல்லடம்பதிவு பெற்ற நபர் அளிக்கும், அனைத்து விதமான வழங்கல்களுக்கும், வரி வசூலித்து செலுத்த வேண்டும். சேவை பெறுபவரின் பதிவு நிலையை, கருத்தில் கொள்ளக் கூடாது. நீங்கள் மேற்குறிப்பிட்ட பரிவர்த்தனையில், பதிவு செய்த நபர் வழங்கும் அனைத்து வழங்கல்களுக்கும், வரி வசூல் செய்து, அரசுக்கு செலுத்த வேண்டும்.
நான், ஒரு மூத்த குடிமகன். எனக்கு, குடியிருப்பு வாடகையாக, ஆண்டுக்கு, 15 லட்சம் ரூபாய் வருகிறது. இதற்கு, நான் வருமான வரி செலுத்துகிறேன். தற்போது, நான் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை வாங்கி உள்ளேன். அதற்கு, ஜி.எஸ்.டி., இணக்க வரி திட்ட பதிவையும் பெற்றுவிட்டேன். ஜி.எஸ்.டி., பதிவு பெற்ற காரணத்தால், குடியிருப்பு வாடகைக்கும், ஜி.எஸ்.டி., வருமா? இதனால் பாதிப்பு ஏதும் உள்ளதா?– ஸ்ரீதர், சென்னைகுடியிருப்பிற்காக வாடகைக்கு விட்டால், அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்கக் கூடாது. நீங்கள், இணக்க வரி திட்டத்தை பெற்றதால், குடியிருப்பு வாடகை தொகையில், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.ஐயா, நாங்கள், ‘மைக்ரேஷன்’ முறையில், ‘வாட்’ பதிவிலிருந்து, ஜி.எஸ்.டி., தற்காலிக பதிவெண் பெற்றோம். எங்களுடைய, ‘பான்’ எண்ணை அடிப்படையாக கொண்டு, 15 இலக்க, ஜி.எஸ்.டி., தற்காலிக பதிவெண் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், எங்களுடைய நிறுவனத்தின் பெயருக்கு பதிலாக, வேறொரு நிறுவனத்தின் பெயர், தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை, எவ்வாறு சரி செய்வது? நாங்கள் வரி செலுத்தினால், அது எங்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படுமா அல்லது தவறாக குறிப்பிடப்பட்டிருக்கும் வேறு நிறுவனத்திற்கு சென்றுவிடுமா?– பார்த்தசாரதி, காஞ்சிபுரம்நீங்கள் வரி செலுத்துவதில், எவ்வித பிரச்னையும் இருக்காது. நீங்கள் செலுத்திய வரி, ஜி.எஸ்.டி., பதிவு எண்ணை அடிப்படையாக கொண்டு, உங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நீங்கள் குறிப்பிட்ட பெயர் மாற்ற விபரத்தை, helpdesk@gst.gov.inஎனும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால், அவர்கள், அதை சரிசெய்ய உதவுவர்.
நாங்கள், சிமென்ட் சில்லரை வணிகத்தில் உள்ளோம். எங்களிடம் உள்ள கையிருப்பு சரக்கின் விபரங்களை, சரியாக பராமரித்து வருகிறோம். ஜூன், 30ல், எங்களுக்கு, ‘வாட்’ உள்ளீட்டு வரி தொகையாக, 1,77,285 ரூபாய் இருந்தது. ஜி.எஸ்.டி.,டிரான் – 1 தாக்கல் செய்த காரணத்தால், இந்த தொகை, எஸ்.ஜி.எஸ்.டி., பயனாக வந்துவிட்டது. ஜூலையில் செலுத்த வேண்டிய, ஜி.எஸ்.டி.,யில், இந்த தொகையை, ‘அட்ஜஸ்ட்’ செய்ய முடியுமா?– செல்லம் பாண்டியன், பரமக்குடிஜூலையில் செலுத்த வேண்டிய, எஸ்.ஜி.எஸ்.டி., – ஐ.ஜி.எஸ்.டி.,க்கு நிகராக, நீங்கள் குறிப்பிட்ட தொகையை உபயோகப்படுத்தலாம். நீங்கள் செலுத்த வேண்டிய, சி.ஜி.எஸ்.டி., தொகைக்கு நிகராக, இந்த தொகையை உபயோகப்படுத்த இயலாது. அதை, பணமாக செலுத்த வேண்டும்.சார், நாங்கள், ‘காம்போஷிசன்’ பிரிவில், சில்லரை ஜவுளி மற்றும் ரெடிமேடு வியாபாரம் செய்கிறோம். நாங்கள், உள் மாநிலத்தில் பிற ஊர்களில், காம்போஷிசன் பிரிவில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு, ஜவுளி மற்றும் ரெடிமேடு அனுப்பலாமா? இதற்கு வரி எவ்வளவு செலுத்த வேண்டும்.– சக்தி, திருப்பூர்நீங்கள், தாராளமாக உள் மாநிலத்தில் விற்பனை மேற்கொள்ளலாம். தங்களால், வெளிமாநிலத்தில் விற்பனை செய்ய இயலாது. நீங்கள், இணக்க வரி திட்டத்தை தேர்வு செய்த காரணத்தால், 1 சதவீதம் வரியாக, அரசுக்கு செலுத்த வேண்டும். உங்களால் வரி வசூல் செய்ய இயலாது; உள்ளீட்டு வரி பயனும் பெற இயலாது.
‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறையில், வரி செலுத்த வேண்டிய விபரத்தை, ஜி.எஸ்.டி.ஆர்., – 1 படிவத்தில் குறிப்பிட வேண்டுமா அல்லது ஜி.எஸ்.டி.ஆர்., – 2 படிவத்தில் குறிப்பிட வேண்டுமா?– தினேஷ், அரக்கோணம்நீங்கள், பதிவு பெறாத நபரிடமிருந்து பெறும் வழங்கலில், செலுத்த வேண்டிய, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ வரி விபரத்தை, ஜி.எஸ்.டி.ஆர்., – 2 படிவத்தில், 4பி எனும் வரிசையில் குறிப்பிட வேண்டும்.ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|