பதிவு செய்த நாள்
10 செப்2017
03:18
புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த, ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் துணை நிறுவனமாக, ஹார்லி டேவிட்சன் இந்தியா உள்ளது. இந்நிறுவனம், அதன், புதிய இரண்டு மோட்டார் பைக்குகள் விலையை, 2.5 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:நிறுவனத்தின், 2017ம் ஆண்டின், புதிய வரவான, இரண்டு இருசக்கர வாகனங்களின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ‘பேட் பாய்’ பைக்கின் விலை, 2.01 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டு, 17.01 லட்சம் ரூபாயிலிருந்து, 15 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.அது போல, ‘ஹெரிடேஜ் சாப்ட்டெய்ல் கிளாசிக்’ மாடலின் விலை, 2.50 லட்சம் ரூபாய் குறைக்கப்பட்டு, 16 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் முந்தைய விலை, 18.50 லட்சம் ரூபாயாக இருந்தது. இந்த விலை குறைப்பு, செப்., 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.வாடிக்கையாளர்களுக்கு குறைந்த மாத தவணையில், புதிய கடன் வசதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, ஓராண்டில், ஒருமுறை பெருந்தொகை செலுத்தியோ அல்லது பல தவணைகளிலோ கடனை திரும்பச் செலுத்தலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|