நடப்பு 2017- – 18ம் நிதியாண்டில்... வாகன உதிரி பாகங்கள் துறை 11 சதவீத வளர்ச்சி காணும்நடப்பு 2017- – 18ம் நிதியாண்டில்... வாகன உதிரி பாகங்கள் துறை 11 சதவீத வளர்ச்சி ... ... நிதி ஆலோ­ச­னை­களை செயல்­ப­டுத்­து­வது எப்­படி? நிதி ஆலோ­ச­னை­களை செயல்­ப­டுத்­து­வது எப்­படி? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2017
23:47

இந்­திய பங்­குச் சந்­தை­கள், கடந்த வாரம் சரி­வில் முடி­வ­டைந்­தன. தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான, நிப்டி, 50 புள்­ளி­கள் குறைந்து, 9,934 என்ற நிலை­யில், கடந்த வெள்­ளி­யன்று அதன் வர்த்­த­கம் முடி­வுற்­றது.

இந்த வாரம் சந்தை மற்­றும் பங்­கு­களின் போக்கு, செவ்­வாய் மற்­றும் வியா­ழக் கிழ­மை­களில் வெளி­வர உள்ள பொரு­ளா­தார கார­ணி­களை பொறுத்தே அமை­யும்.சர்­வ­தேச சந்­தையை பொறுத்­த­வரை, 2008 முதல் 2016 வரை ஏற்­பட்ட பொரு­ளா­தார மந்த சூழல் தற்­போது மாறி ­வ­ரு­கிறது. அமெ­ரிக்க மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 3 சத­வீ­தம் அள­வுக்கு வளர்ச்சி அடைந்­துள்­ளது. மேலும், ஐரோப்­பிய நாடு­கள் மற்­றும் சீனா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யும் வளர்ச்சி காண்­கிறது. இது சர்­வ­தேச பங்­குச் சந்­தை­களை ஊக்­கு­விக்­கும்.

இச்­சூ­ழ­லில், இந்­திய பொரு­ளா­தார கார­ணி­யான, மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, கடந்த இரண்டு ஆண்­டு­க­ளைக் காட்­டி­லும் குறை­வாக இருக்­கிறது. மேலும், நடப்பு நிதி­யாண்­டின், இரண்­டாம் காலாண்டு மொத்த உற்­பத்தி வளர்ச்­சி­யும் இல்லை. வரும் செவ்­வா­யன்று வெளி­வர உள்ள தொழிற்­துறை வளர்ச்சி குறி­யீ­டான, ஐ.ஐ.பி., ஜூலை மாதத்தை பொறுத்­த­வரை, குறை­வா­கவே காணப்­படும். ஜூன் மாதத்­தி­லும் இக்­கு­றி­யீடு, 0.1 சத­வீ­தம் குறை­வா­கவே இருந்­தது.

மேலும் வியா­ழன் அன்று வெளி­வர உள்ள, ஆகஸ்ட் மாத மொத்த விலை குறி­யீ­டான, டபுள்யு.பி.ஐ., 2.1 சத­வீ­தம் அள­வுக்கு உய­ரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.சி.பி.ஐ., மற்­றும் டபுள்யு.ஐ.பி., இரண்­டும் உய­ரும் போக்கு உள்ள நிலை­யில், வரும் அக்­டோ­பர் மாதம் கூடும், ரிசர்வ் வங்கி கூட்­டத்­தில், வட்­டி­வி­கி­தம் குறை­வ­தற்­கான வாய்ப்பு இல்லை.தற்­போது உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் அதி­க­ள­வில் பங்­கு­கள் மீது முத­லீடு செய்­கின்­ற­னர். இதன் கார­ண­மாக சந்தை வலு­வி­ழக்­கா­மல், சரா­சரி நிலை­யில் வர்த்­த­க­மா­கிறது.

ஆகஸ்ட் 18 முதல் இது­வரை, நிப்டி 100 புள்­ளி­கள் அள­வுக்கு ஏற்ற இறக்க நிலை­யில் உள்­ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்­தில், வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள், 20 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­வுக்கு விற்­பனை செய்­த­தும் அதே அள­விற்கு உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் கொள்­மு­தல் செய்­த­தும் குறிப்­பி­டத்­தக்­கது.வட­கொ­ரி­யா­வின் ஏவு­கணை தாக்­கு­தல் சந்­தை­யில் பெரிய மாற்­றத்தை உண்­டாக்­கும். இந்த வாரம், நிப்டி ரெசிஸ்­டென்ஸ், 10,010 மற்­றும் 10,050 ஆகும். ஏதே­னும் பாத­க­மான செய்தி வந்து, நிப்டி குறை­யும்­பட்­சத்­தில், 9,850 மற்­றும் 9,685 நல்ல சப்­போர்ட் ஆகும்.

கவ­னிக்க வேண்­டிய பங்­குகள்ஹேவல்ஸ், வொண்­டர்லா, ஆர்.சி.எப்., ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், அசோக் லேலாண்டு

-முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)