நடப்பு 2017- – 18ம் நிதியாண்டில்... வாகன உதிரி பாகங்கள் துறை 11 சதவீத வளர்ச்சி காணும்நடப்பு 2017- – 18ம் நிதியாண்டில்... வாகன உதிரி பாகங்கள் துறை 11 சதவீத வளர்ச்சி ... ... நிதி ஆலோ­ச­னை­களை செயல்­ப­டுத்­து­வது எப்­படி? நிதி ஆலோ­ச­னை­களை செயல்­ப­டுத்­து­வது எப்­படி? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2017
23:49

கச்சா எண்ணெய்
கச்சா எண்­ணெய், கடந்த வார விலை­யில் பெரிய மாற்­றம் எது­வும் இல்­லா­மல் வர்த்­த­க­மா­னது. தற்­போது ஒரு பேரல், 48.16 டாலர் என்ற நிலை­யில் உள்­ளது. ஜூன் மாத உயர்­வுக்கு பின், கச்சா எண்­ணெய் விலை தொடர் சரிவை சந்­தித்து வரு­கிறது. அதி­க­ரித்து வரும் அமெ­ரிக்க எண்­ணெய் உற்­பத்தி மற்­றும் ஒபெக் நாடு­களின் தீர்­மா­ன­மான தின­சரி உற்­பத்தி குறைப்பை அதன் உறுப்பு நாடு­கள் சில சரி­வர அமல்­ப­டுத்த இய­லா­மல் போனது போன்­றவை, விலை சரி­வுக்கு கார­ணங்­க­ளா­கும்.

இருப்­பி­னும், அமெ­ரிக்­கா­வில் ஏற்­பட்ட, ‘ஹார்வி’ புய­லால், அமெ­ரிக்க சுத்­தி­க­ரிப்பு நிறு­வ­னங்­களின் இயல்பு நிலை பாதிப்­புக்­குள்­ளா­னது. 25 சத­வீ­தம் அள­வுக்கு ஆழ்­கு­ழாய் கிண­று­கள் இயக்­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

எண்­ணெய் விலையை பொறுத்­த­வரை, இந்த ஆண்டு மிகப் பெரிய மாற்­றம் எது­வும் இல்லை. அதா­வது 42 முதல் 50 டாலர் என்ற நிலை­யில், சில மாதங்­க­ளாக வியா­பா­ரம் நடை­பெற்று வரு­கிறது. மேலும், அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்பு குறைவு மற்­றும், வட­கொ­ரியா, அமெ­ரிக்கா நாடு­க­ளுக்கு இடை­யே­யான அசா­தா­ரண சூழல் போன்­றவை, எண்­ணெய் விலை­யில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும் உல­க­ள­வில், இந்­தியா மற்­றும் சீனா கச்சா எண்­ணெய் பொருட்­களை அதி­க­ள­வில் இறக்­கு­மதி செய்­யும் நாடு­க­ளா­கும்.

வரும் நாட்­களில், கச்சா எண்­ணெய் விலை­யில், 45.50 டாலர் என்­பது நல்ல சப்­போர்ட் ஆகும். இதை கடக்­கும் நிலை­யில் மீண்­டும் விலை குறைய வாய்ப்பு உள்­ளது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 3,042 3,000 3,135 3,180என்.ஒய்.எம்.இ.எக்ஸ்., (டாலர்) 46.80 45.50 49.50 51.00

தங்கம், வெள்ளி
தங்­கம் மற்­றும் வெள்­ளி­யின் விலை­யில், முந்­தைய வார விலை அதி­க­ரிப்பு கடந்த வார­மும் தொடர்ந்­தது. 2017ம் ஆண்­டின் உச்ச விலை­யில் தற்­போது வியா­பா­ரம் நடை­பெ­று­கிறது.

தங்­கம் விலை­யைப் பொறுத்­த­வரை ஒரு அவுன்ஸ் விலை, 1,300 டாலர் என்ற இலக்கை கடந்த பின், விலை உயர்வு அதி­க­ரித்­தது. கடந்த வாரம் நடை­பெற்ற, உலக மத்­திய வங்­கி­களின் தலை­வர்­கள் கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய, அமெ­ரிக்க மத்­திய வங்­கி­யின் தலை­வர், ஏலன், பொரு­ளா­தார சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­கள் துரி­தப்­ப­டுத்­தப்­படும் என்­றும், பொரு­ளா­தார வளர்ச்சி எட்­டப்­படும் என்­றும் கருத்து தெரி­வித்­தார். இதன் கார­ண­மாக அடுத்த வட்­டி­வி­கித கூட்­டம்,டிசம்­பர் மாதம் நடை­பெற உள்­ளது. இதில் வட்­டி­ வி­கி­தம் உயர வாய்ப்பு குறைவு என்ற கணிப்­பில், தங்­கம் விலை, உயர்வு கண்­டது.

மேலும் அமெ­ரிக்க நாணய குறி­யீ­டான, டாலர் இன்­டெக்ஸ் மதிப்பு குறைந்­தது மற்­றும் வட­கொ­ரியா மற்­றும் அமெ­ரிக்­கா­வுக்கு இடை­யே­யான மோதல் குறித்த அச்­ச­மும், முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில் தங்­கம் மீதான ஆர்­வத்தை அதி­க­ரித்­தது. உல­கில் எந்த ஓர் அசா­தா­ர­ண­மான சூழல் நிக­ழும் போதும், தங்­கம் மற்­றும் வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை உயர்­வது வழக்­க­மா­ன­தா­கும். இந்த வார­மும் தங்­கம் மற்­றும் வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை உய­ரக்­கூ­டும்.
தங்கம்
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 30,100 29,850 30,475 30,690காம்எக்ஸ் (டாலர்) 1,340 1,328 1,359 1,372

வெள்ளி
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 41,300 40,800 42,000 42,590காம்எக்ஸ் (டாலர்) 17.60 17.15 18.25 19.00

செம்பு
செம்பு மற்­றும் அனைத்து தொழிற்­சாலை மூலப் பொருட்­களின் விலை­யும், தொடர்ந்து இரு மாதங்­க­ளாக அதி­க­ரித்து வரு­கிறது. சுரங்க உற்­பத்­தி­யில் ஏற்­பட்ட பாதிப்பு மற்­றும் தொழிற்­சாலை தேவை அதி­க­ரிப்பு போன்­றவை, விலை உயர காரணங்­க­ளா­கும்.

உல­க­ள­வில், மூலப்­பொ­ருட்­களை இறக்­கு­மதி செய்­யும் நாடாக, சீனா திகழ்­கிறது. இந்­நாட்­டின் ஒட்­டு­மொத்த உற்­பத்தி, உல­கத்­தின் அனைத்து நாடு­க­ளுக்­கும் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கிறது. தற்­போது, சீனா­வின் உள்­நாட்டு சந்­தை­யில், தொழிற்­சாலை மூலப் பொருட்­கள், பொருள் வணி­கத்­தைக் காட்­டி­லும் அதி­க­மாக (பிரீ­மி­யம்) உள்­ளது. இது பொருட்­களின் தேவை அதி­க­ரிப்பை உணர்த்­து­கிறது. மேலும், அமெ­ரிக்க டால­ரின் சரி­வும் இவ்­விலை உயர்­வுக்கு கார­ண­மா­கும்.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 428.00 425.10 425.10 438.00

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)