நடப்பு 2017- – 18ம் நிதியாண்டில்... வாகன உதிரி பாகங்கள் துறை 11 சதவீத வளர்ச்சி காணும்நடப்பு 2017- – 18ம் நிதியாண்டில்... வாகன உதிரி பாகங்கள் துறை 11 சதவீத வளர்ச்சி ... ... நிதி ஆலோ­ச­னை­களை செயல்­ப­டுத்­து­வது எப்­படி? நிதி ஆலோ­ச­னை­களை செயல்­ப­டுத்­து­வது எப்­படி? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சந்­தைக்கு புதி­தல்ல, மந்தை மனநிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2017
23:51

சந்தை எப்­போ­தெல்­லாம் உச்­ச­நிலை அடை­கி­றதோ, அப்­போ­தெல்­லாம், முத­லீட்­டா­ளர் நடத்­தை­யில், மந்தை மனநிலை தெளி­வாக வெளிப்­படும். சந்தை தாழ்­நிலை அடை­யும் போதும், முத­லீட்­டா­ளர்­களின் மந்தை மனநிலை தெளி­வாக தெரி­யும்.

பிறர் என்ன செய்­தா­லும், அதை அப்­ப­டியே நாமும் செய்­தாலே, முத­லீட்­டில் எளி­தில் வெற்­றி­க­ர­மான முடி­வு­களை எடுக்க முடி­யும் என்­பதே, இந்த மன நிலை உரு­வாக முக்­கிய கார­ணம். எங்கே, நாம் பிறர் போல முடிவு எடுக்க தவ­றி­னால், அவர்­கள், நம்மை புறந்­தள்ளி வெற்றி அடைந்­து­ வி­டு­வரோ என்ற அச்­சம் தான், இந்த மனநிலை உரு­வாக முக்­கிய கார­ணம்.அனை­வ­ரும், ஒரே அடிப்­ப­டை­யில் முத­லீட்டு முடி­வு­கள் எடுத்­தால், எல்­லா­ருமே வெற்றி அடை­ய­லாம் என்ற நம்­பிக்­கை­யும், இதில் அடக்­கம். இத்­தனை பேர், ஒரே மாதிரி சிந்­திக்­கும் போது, அந்த சிந்­தனை தவ­றாக அமைய வாய்ப்­பில்லை என்ற நம்­பிக்­கை­யும், இந்த மன நிலை உரு­வாக முக்­கிய கார­ணம்.

நிதி சார்ந்த நடத்தை பற்றி, உல­கெங்­கும் பல ஆய்­வு­களை செய்து, மந்தை மன நிலை குறித்து, பல அறி­ஞர்­கள் விரி­வாக எழுதி இருக்­கின்­ற­னர். இந்த துறை சார்ந்த அறி­ஞர் பல­ரும், இந்த தலைப்­பில் ஆளுமை உள்­ள­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர். முத­லீட்­டில் லாபம் அடை­வதை ஒரு கலை­யா­க­வும், நடத்தை சார்ந்த நகர்­வா­க­வும், இவர்­கள் ஒருங்­கி­ணைந்து பார்க்­கின்­ற­னர். இதன் வடி­வம் தான், மதிப்­பு­சார் முத­லீடு.
ஆங்­கி­லத்­தில், ‘வேல்யூ இன்­வெஸ்­டிங்’ எனப்­படும், இந்த அணு­கு­முறை, நம் நாட்­டி­லும், ஒரு சிறு வட்­டத்­திற்­குள் சிறந்த ஆய்­வு­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு, இன்று, பரஸ்­பர நிதி­க­ளி­லும் அதி­கம் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்றன. உல­க­ள­வில், இத்­து­றை­யில் பெரு­ம­திப்பை சம்­பா­தித்­த­வ­ரில், ஹவர்ட் மார்க்ஸ் மிக முக்­கி­ய­மா­ன­வர். அவர், இந்­தாண்டு, இந்­தி­யா­வில் நெடும் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்டு, பல ஆய்­வு­கள் செய்து, பல சிறந்த உரை­க­ளை­யும் நிகழ்த்­தி­னார். இந்த உரை­களில், இந்­திய சந்தை பற்­றி­யும், இங்­குள்ள பங்கு மதிப்பு பற்­றி­யும் பேசி­னார். தன் சிந்­த­னை­களை, தொடர்ந்து, மடல் மூலம் எழுதி வரு­கி­றார். ‘சந்­தை­யின் போக்கை, முன்­கூட்­டியே கணிக்க முடி­யாது. ஆனால், நாம் அதன் மாற்­றங்­க­ளுக்கு, நம்மை தயார்­ப­டுத்­திக் கொள்ள முடி­யும்’ என, தொடர்ந்து அறி­வு­றுத்தி வரு­கி­றார்.

ஆகவே, சந்தை வீழுமா என்ற யூகங்­களை விட்­டு­விட்டு, ஒரு­வேளை வீழ்ந்­தால், நாம் என்ன செய்ய வேண்­டும் என்­ப­தற்கு, நம்மை நாமே தயார்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டிய அவ­சி­யத்தை உணர்த்­தி­னார். அதிக மதிப்பு கொடுத்து வாங்­கும் மிகச் சிறந்த பங்­கு­களை விட, மதிப்­பிற்கு ஏற்ற, கூர்ந்த ஆய்வு மூலம் நமக்கு சாத­க­மாக தோன்­றும் சிறந்த பங்­கு­களை வாங்­கி­னால், அதிக லாபம் பெற­லாம். அதே நேரம், அந்த முடி­வு­கள் சந்தை சரிந்­தா­லும், நம்மை காலப் போக்­கில் அதி­கம் பாதிக்­காது என்­ப­தும், அவர் கருத்து.இந்த கருத்து, மிக சரி என்­றா­லும், அத்­த­கைய பங்­கு­களை அடை­யா­ளம் காண்­பது, மிக கடி­னம். இன்று சிறந்து விளங்­காத எந்த நிறு­வ­னங்­கள், நாளை சிறக்­கக் கூடும் என்ற கணிப்பை, சரி­யாக செய்ய வேண்­டும். இதுவே, மார்க்ஸ், நமக்கு அறி­வு­றுத்­தும் முத­லீட்டு அறி­வுரை. இதை, சரி­யாக கடைப்­பி­டிக்க தேவை­யான ஆய்­வுத்­தி­றன், முதிர்வு மற்­றும் பொறுமை அவ­சி­யம்.

பல நிறு­வ­னங்­களின், நாளைய நிதி­நி­லையை சரி­யாக கணிக்க வேண்­டிய கட்­டா­யம் இருக்­கிறது. இது, முதிர்ந்த அனு­ப­வம் பெற்ற முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கும், பெரும் சவா­லா­கவே இருக்­கிறது. சந்­தை­யில், அதிக அனு­ப­வ­மின்றி பங்­கு­ பெ­று­வோ­ருக்கு, இது எளி­தல்ல. இருப்­பி­னும், முத­லீடு செய்­யும் போது, இதை மன­தில் கொள்­வது, உங்­கள் நிதி வளர்ச்­சிக்கு நல்­லது.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)