நடப்பு 2017- – 18ம் நிதியாண்டில்... வாகன உதிரி பாகங்கள் துறை 11 சதவீத வளர்ச்சி காணும்நடப்பு 2017- – 18ம் நிதியாண்டில்... வாகன உதிரி பாகங்கள் துறை 11 சதவீத வளர்ச்சி ... ... நிதி ஆலோ­ச­னை­களை செயல்­ப­டுத்­து­வது எப்­படி? நிதி ஆலோ­ச­னை­களை செயல்­ப­டுத்­து­வது எப்­படி? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
படேல்: ஆர்ப்­ப­ரிக்­காத அமைதி கடல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2017
23:54

ரிசர்வ் வங்கி கவர்­ன­ராக, உர்­ஜித் படேல் பொறுப்­பேற்று, செப்., 4ம் தேதி­யோடு, ஓராண்டு நிறைவு பெற்­றது. இந்த கால கட்­டத்­தில், அவ­ரது முயற்­சி­களும், பங்­க­ளிப்­பு­களும் எப்­படி இருந்­தன? இந்­திய பொரு­ளா­தா­ரத்­தில் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­கள் என்­னென்ன?

ரிசர்வ் வங்­கி­யின், 24வது கவர்­ன­ராக, உர்­ஜித் படேல், கடந்­தாண்டு பொறுப்­பேற்ற போது, இவர், மத்­திய அர­சுக்கு ரொம்­ப­வும் இணக்­க­மாக இருப்­பார் என்ற கருத்து முன்­வைக்­கப்­பட்­டது. இவ­ருக்கு முன், கவர்­ன­ராக இருந்த ரகு­ராம்­ரா­ஜன், மத்­திய அர­சோடு முரண்­பட்ட போக்கை கொண்­டி­ருந்­த­தாக பேச்சு. தன் பத­விக்­கா­லம் முடி­வ­தற்கு முன்பே, ராஜன் பதவி வில­கி­னார். அத­னால், படேல் பத­வி­ஏற்ற போது, ஆர்.பி.ஐ.,யின் சுதந்­தி­ரத்தை, மத்­திய அர­சி­டம் அடகு வைத்து விடு­வாரோ என்ற அச்­ச­மும் எழுப்­பப்­பட்­டது.

வட்டி விகிதங்களில் மாற்றம் :
ஓராண்டு கழித்து, இன்று திரும்­பிப் பார்க்­கும் போது, படேல், ஆர்.பி.ஐ.,யின் சுதந்­தி­ரம் மட்­டு­மல்ல, தன் சுதந்­தி­ரத்­தை­யும் விட்­டுக் கொடுக்­க­வில்லை என்­பது புரி­கிறது. முக்­கி­ய­மாக, வட்டி விகி­தங்­களை குறைக்க வேண்­டும் என்ற எண்­ணப்­போக்கு, நிதித் துறை­யி­டம் இருந்­தது. அதன் மூலம், வங்­கி­களில் கிடைக்­கும் கடன் தொகை அதி­க­ரிக்­கும்; தொழில் அதி­க­ரிக்­கும்; வேலை­வாய்ப்பு அதி­க­ரிக்­கும் என்­பது, நிதித் துறை கணிப்பு.இதற்கு, ஆர்.பி.ஐ., நிதிக் கொள்­கைக் குழு­வி­ன­ரு­டன் பேச்சு நடத்த, மத்­திய நிதித் துறை அழைப்பு விடுத்த போது, அதை நாசூக்­காக மறுத்­த­வர் படேல்.

ஒரு­படி மேலே போய், பண­வீக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­து­வது மட்­டுமே, முதல் கடமை என்ற நோக்­கோடு செயல்­பட்­டார், படேல். ஒரு கட்­டத்­தில், அர­சின் பொரு­ளா­தார ஆலோ­ச­க­ரான, அர­விந்த் சுப்­ர­ம­ணி­யம், இறங்­கு­மு­க­மாக இருக்­கும் பண­வீக்­கத்தை கருத்­தில் கொண்டு, வட்டி விகி­தங்­களில் மாற்­றம் கொண்டு வர­லாமே என, கேட்டே விட்­டார். அதன்­பின், போது­மான ஆலோ­ச­னை­கள் மேற்­கொண்டு, ‘ரெப்போ’ விகி­தங்­களில் மாற்­றம் செய்­தார். யாரு­டைய அழுத்­தத்­துக்­கும் இடம் கொடுக்­கா­த­வ­ராக, படேல் இருப்­பது கண்­கூடு.

அவ­ரது ஒப்­பு­தல் பெறப்­பட்­டதா, முழு­மை­யான ஆத­ரவு பெறப்­பட்­டதா என, இன்­னும் தெளிவு இல்­லாத இடம், பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்கை. கவர்­ன­ராக பொறுப்­பேற்று, இரண்டே மாதங்­களில் நடை­பெற்ற அதி­ரடி அது. பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்கை தொடர்­பான கூட்­டத்­தின் அறிக்கை, இன்­னும் வெளி­யா­க­வில்லை. ஆனால், அதன்­பின், இரு விஷ­யங்­களை மிகத் தெளி­வா­கச் செய்­தார், உர்­ஜித் படேல்.

சகஜ நிலை:
ஊட­கங்­களில் தலை­காட்­ட­வில்லை. எல்லா கேள்­வி­க­ளுக்­கும், சக்­தி­காந்த தாஸை பதில் சொல்ல வைத்­தார். கவர்­னர் பேச வேண்­டாமா, விளக்­கம் தர வேண்­டாமா என, ஊட­கங்­கள் பத­றிய போது, அவர் காத்த அமைதி அலா­தி­யா­னது. ஒரே ஒரு­வர் பேசி­னால் போதும்; எல்­லா­ரும் பேசி­னால், குட்­டை­யைக் குழப்­பு­வது போல் ஆகி­வி­ட­லாம் என்­பதே, அவ­ரது மறை­முக பதி­லாக இருந்­தது. ஆனால், இரண்­டா­வது விஷ­யம் முக்­கி­ய­மா­னது.புதிய, 500 – 2,000 ரூபாய் நோட்­டு­கள் அச்­ச­டிப்­ப­தை­யும், வங்­கி­கள் மூலம் வினி­யோ­கிப்­ப­தை­யும் துரி­தப்­ப­டுத்­தி­யது மெச்­சத்­தக்­கது. இவற்றை செய்ய, எட்டு மாதங்­கள் ஆகும், 12 மாதங்­கள் ஆகும் என, கணிக்­கப்­பட்ட நிலை­யில், 2017 ஜன­வரி இறு­திக்­குள், ஓர­ள­வுக்கு சகஜ நிலை திரும்­பி­யது யாரும் எதிர்­பா­ரா­தது. அதை நடத்­திக்காட்­டிய பெருமை, படே­லையே சேரும்.

எச்சரிக்கை:
வாராக்­க­டன்­கள் மீது, படேல் தொடுத்­தி­ருக்­கும் போர், பல விமர்­ச­னங்­களை எழுப்பி உள்­ளது உண்மை. எந்த நிறு­வ­னங்­கள், எவ்­வ­ளவு நிலு­வைத் தொகை வைத்­துள்­ளது என்­பதை கணக்­கி­டும் பணி, படேல் கவர்­ன­ரா­வ­தற்கு முன் முடிந்­து­விட்­டது. ஆனால், என்ன நட­வ­டிக்கை எடுப்­பது; எப்­படி எடுப்­பது; எடுக்­கத்­தான் வேண்­டுமா என்­றெல்­லாம் கேள்­வி­களும், அச்­ச­மும் நிரம்­பி­யி­ருந்­தன.உர்­ஜித் படேல், அதை எடுத்­தார். அவ­ருக்­குத் தோதாக, அர­சும், புதிய திவால் சட்­டத்­தி­ருத்­தத்­தைச் செய்து கொடுத்­தது. வங்­கி­க­ளுக்கு கட­னைத் திருப்­பிச் செலுத்­தாத, 12 நிறு­வ­னங்­கள் மீது, சட்ட ரீதி­யான நட­வ­டிக்கை எடுக்­கும் முயற்சி துவங்­கி­யது.

அடுத்த, 26 நிறு­வ­னங்­களின் பட்­டி­ய­லும் வெளி­யி­டப்­பட்டு உள்­ளது. வாராக்­க­டன்­களை, வங்­கி­கள் தலை­மு­ழு­கி­வி­டும் என்ற எண்­ணம் துடைத்­தெ­றி­யப்­பட்­டது.துரத்­தித் துரத்தி கொடுத்த பணத்­தின், ஒரு பகு­தி­யை­யே­னும் மீட்­டு­விட வேண்­டும் என்ற படே­லின் முனைப்பு பாராட்­டத்­தக்­கது. அது, மக்­கள் பணம்; தாம், அதை நிர்­வா­கம் மட்­டுமே செய்­கி­றோம்; பெரிய நிறு­வ­னங்க­ளி­டம் ஏமாந்­து­வி­டக் கூடாது என்ற எச்­ச­ரிக்கை உணர்வு, வர­வேற்­கத்­தக்­கது.

வங்கி துறைக்­குள், படேல் மேற்­கொண்ட இன்­னொரு முயற்சி கவ­னிக்­கத்­தக்­கது. பல பொதுத் துறை வங்­கி­கள், தங்­கள் வாராக்­க­டன் தொகையை முழு­மை­யா­கக் காட்­டா­மல் தவிர்த்­தன. அவற்றை முழு­மை­யாக காண்­பிக்­கச் சொன்­ன­து­டன், அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய இழப்­பு­க­ளுக்கு, போதிய நிதியை ஒதுக்கி வைக்­க­வும் அறி­வு­றுத்­தி­னார். இத்­த­கைய சூழ­லில், அர­சுக்கு, ஆர்.பி.ஐ., ஒவ்­வொரு ஆண்­டும் வழங்­கும் ஈவுத் தொகையை, இம்­முறை பாதி­யாக குறைத்து, 30,659 கோடி ரூபாய் மட்­டுமே வழங்­கி­னார். வங்­கி­களின் கஷ்­டத்தை புரிந்து கொண்ட செய­லா­கவே, இது பார்க்­கப்­ப­டு­கிறது.

திறமை:
அதி­கம் பேசா­த­வர், படேல். ஓராண்­டில், ஆறு முறை மட்­டுமே வாய் திறந்­துள்­ளார். பல மாநி­லங்­கள் கடன் தள்­ளு­படி செய்ய முனைந்த போது, அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய நிதிச் சிக்­கலை, பளிச்­சென்று எடுத்­துச் சொன்­னது, ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு கசக்­க­லாம். ஆனால், நியா­யத்தை பேசு­வ­தில் தயக்­கம் இல்­லா­த­வர். அதே போல், சிறிய வங்­கி­களை, பெரிய வங்­கி­க­ளோடு இணைப்­பதை முன்­மொ­ழிந்து வரு­கி­றார். இவர் பெயர், தலைப்­புச்செய்­தி­களில் அடி­ப­ட­வில்லை என்­றா­லும், இவ­ரது பணி­கள் அனைத்­தும், தலைப்­புச் செய்­தி­க­ளாக மாறு­கின்றன. அலட்­டல் இல்­லா­மல், அடக்­க­மாக, அதே சம­யம், விழிப்­பு­டன் செயல்­ப­டு­வ­தும் ஒரு திறமை தான். அது, உர்­ஜித் படே­லுக்கு கைவந்­தி­ருக்­கிறது.
-ஆர்.வெங்­க­டேஷ், பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)