‘ஓட்டல்களின் சேவை கட்டண வருவாய்க்கு வரி’‘ஓட்டல்களின் சேவை கட்டண வருவாய்க்கு வரி’ ... சட்டபூர்வ மதிப்புடன், ‘டிஜிட்டல் கரன்சி’; ரிசர்வ் வங்கி வெளியிட திட்டம் சட்டபூர்வ மதிப்புடன், ‘டிஜிட்டல் கரன்சி’; ரிசர்வ் வங்கி வெளியிட திட்டம் ...
ஆப்பிள், ‘ஐபோன் – 8, 8 பிளஸ்’ போன் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2017
23:45

கூப்பர்டினோ: ‘ஐபோன்’ ரசி­கர்­கள் ஆவ­லு­டன் எதிர்­பார்த்த, ‘ஆப்­பிள்’ நிறு­வ­னத்­தின், ‘ஐபோன் – 8, ஐபோன் – 8 பிளஸ்’ மாடல்­கள், அமெ­ரிக்­கா­வில் அறி­மு­கம் செய்­யப்­பட்­டன.

ஆப்­பி­ளின் ஐபோன் மாடல்­கள் மீது, டெக்­னா­லஜி பிரி­யர்­க­ளுக்கு, எப்­போ­துமே ஓர் ஈர்ப்பு உண்டு. 2007ல், ஸ்டீவ் ஜாப்ஸ், முதன்­மு­த­லாக, ஐபோனை அறி­மு­கம் செய்த போது இருந்த அதே எதிர்­பார்ப்­பும், ஆர்­வ­மும், ‘ஐபோன் – 8’ போன் மீதும் இருந்­தது. இந்­நி­லை­யில், கலி­போர்­னி­யா­வில் உள்ள, ஆப்­பிள் நிறு­வ­னர், ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்­ட­ரில், நேற்று முன்­தி­னம், ‘ஐபோன் – ௮’ அறி­முக விழா நடந்­தது.

புதிய, ‘ஐபோன் – 8 மற்­றும் 8 பிளஸ்’ மாடல்­கள், 64 ஜி.பி., 256 ஜி.பி., என, இரண்டு நினை­வக வச­தி­களில் வெளி­யாகி உள்ளன. ஒவ்­வொரு ஆண்­டும், புதிய மாடல்­களை அறி­மு­கம் செய்­வதை, ஆப்­பிள் வழக்­க­மாக வைத்­தி­ருக்­கிறது. இந்த ஆண்­டும், ‘ஐபோன் எக்ஸ்’ என்­கிற ஐபோனை அறி­மு­கம் செய்­துள்­ளது. ‘ஐபோன் – 8 மற்­றும் 8 பிளஸ்’ அட்­ட­கா­ச­மான நவீன வச­தி­க­ளு­டன் வந்­தி­ருந்­தா­லும், ஐபோன்­களின், 10வது ஆண்டு பதிப்­பாக கரு­தப்­படும், ‘ஐபோன் எக்ஸ்’ தான், விழா­வின் ஹைலைட்.

இந்த ஐபோ­னில், சூப்­பர் ரெட்­டீனா எச்.டி., திரை­யும், அதில் முகத்தை காண்­பித்து, ‘அன்­லாக்’ செய்­யும் வகை­யில், பேஸ் ஐ.டி., டச் ஐ.டி., தொழில்­நுட்­பங்­களும் உள்ளன. மேலும், ‘ஹோம் பட்­டன்’ நீக்­கப்­பட்டு, ‘எட்ஜ் டூ எட்ஜ்’ திரை, ‘3டி சென்­சார்’ வசதி உடன், ‘டூயல் பிரை­மரி கேமரா, ஒயர்­லெஸ் சார்­ஜிங், வாட்­டர் புரூப்’ வசதி போன்ற புதிய தொழில்­நுட்­பங்­கள், ஐபோன் எக்­ஸில் உள்ளன.

இந்­திய மதிப்­பில், ‘ஐபோன் – 8 மற்­றும் 8 பிளஸ்’ போன்­களின் விலை, முறையே, 64 ஆயி­ரம் ரூபாய் மற்­றும் 73 ஆயி­ரம் ரூபா­யாக உள்­ளது. ‘ஐபோன் எக்ஸ்’ விலை, 89 ஆயி­ரம் ரூபா­யில் துவங்­கு­கிறது. இந்த ஐபோன்­க­ளுக்­கான, ‘ஆர்­டர்’ நாளை துவங்­கு­கிறது. செப்., 22ல், இவை விற்­ப­னைக்கு வரு­கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)