வங்கி வாராக்கடன்: ‘பிட்ச், கிரிசில்’ எச்சரிக்கைவங்கி வாராக்கடன்: ‘பிட்ச், கிரிசில்’ எச்சரிக்கை ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு ...
இந்திய தொழில்நுட்ப ஜவுளி சந்தை ரூ.1.50 லட்சம் கோடியாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2017
23:52

மும்பை : அடுத்த மூன்று ஆண்­டு­களில், நாட்­டின் தொழில்­நுட்ப ஜவுளி சந்­தை­யின் மதிப்பு, 1.50 லட்­சம் கோடி ரூபா­யாக உய­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மும்­பை­யில், சர்­வ­தேச தொழில்­நுட்ப ஜவுளி கண்­காட்­சியை பார்­வை­யிட்ட, ஜவு­ளித் துறை ஆணை­யர், கவிதா குப்தா, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­தா­வது: இந்­தி­யா­வில், தொழில்­நுட்ப ஜவு­ளித் துறை, மிகச் சிறந்த வளர்ச்சி வாய்ப்பை கொண்­டுள்­ளது. தற்­போது, இத்­து­றை­யின் சந்தை மதிப்பு, 1.16 லட்­சம் கோடி ரூபா­யாக உள்­ளது. இது, ஆண்­டுக்கு, 12 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 2020ல், 1.50 லட்­சம் கோடி ரூபா­யாக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

சர்­வ­தேச தொழில்­நுட்ப ஜவுளி ஏற்­று­ம­தி­யில், இந்­தி­யா­வின் பங்கு, 4 சத­வீ­த­மாக உள்­ளது. நாட்­டின் மொத்த ஏற்­று­ம­தி­யில், இந்­திய ஜவு­ளித் துறை­யின் பங்கு, 14 சத­வீ­த­மாக உள்­ளது. தற்­போது, 15 ஆயி­ரம் கோடி டால­ராக உள்ள இச்­சந்தை, 2020ல், 25 ஆயி­ரம் கோடி டால­ராக அதி­க­ரிக்­கும். ஜவு­ளித் துறை­யில், 5.10 கோடி பேர் நேர­டி­யா­க­வும், மறை­மு­க­மாக, 6.80 கோடி பேரும் வேலை­வாய்ப்பு பெற்­றுள்­ள­னர். ஜவுளி ஏற்­று­ம­தி­யில், இத்­தாலி, ஜெர்­மனி நாடு­களை பின்­னுக்கு தள்ளி, இந்­தியா இரண்­டா­வது இடத்­திற்கு முன்­னேறி உள்­ளது. நம் ஒவ்­வொ­ரு­வ­ரின் வாழ்­வி­லும், தொழில்­நுட்ப ஜவு­ளிக்கு பங்கு உள்­ள­தால், இத்­து­றைக்கு மிகச் சிறப்­பான வளர்ச்சி காத்­தி­ருக்­கிறது.

மேம்­பட்ட தொழில்­நுட்­பம், நீடித்த உழைப்பு, தர­மான தயா­ரிப்­பு­கள் மூலம், இத்­துறை வேக­மாக வளர்ச்சி காண­வும், முத­லீ­டு­ களை ஈர்க்­க­வும் முடி­யும். உள்­நாட்­டில், தொழில்­நுட்ப ஜவுளி தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், இயந்­தி­ரங்­கள் வாங்க, 15 சத­வீ­தம் மானி­யம் வழங்­கப்­ப­டு­கிறது. ஐந்து ஆண்­டு­களில், இத்­துறை, ஆண்­டுக்கு, சரா­ச­ரி­யாக, 12.4 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு வந்­துள்­ளது. வாக­னம், கட்­டு­மா­னம், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு, விளை­யாட்டு உள்­ளிட்ட பல்­வேறு துறை­களில், தொழில்­நுட்ப ஜவு­ளி­களின் பங்­க­ளிப்பு வேக­மாக அதி­க­ரித்து வரு­கிறது. அத­னால், இத்­து­றைக்கு மிகச் சிறப்­பான எதிர்­கா­லம் உள்­ளது.

இத்­து­றை­யில், ஆய்வு மற்­றும் மேம்­பாட்­டுக்­காக, எட்டு சிறப்பு மையங்­களை, மத்­திய அரசு அமைத்­துள்­ளது. தெலுங்­கானா அரசு, ஜெர்­ம­னி­யின், மெஸ்ஸி பிராங்­பர்ட் நிறு­வ­னத்­து­டன் இணைந்து, வாரங்­க­லில், 1,200 ஏக்­க­ரில், பிர­மாண்ட ஜவுளி பூங்­காவை அமைக்­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

அனைத்து பயன்பாட்டிலும்:
தொழில்­நுட்ப ஜவுளி வகை­கள், வாக­னம், விவ­சா­யம், கட்­டு­மா­னம், தொழிற்­சாலை உள்­ளிட்ட, அனைத்து துறை­க­ளி­லும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. இவ்­வகை ஜவு­ளி­கள், பயிர் பாது­காப்பு போர்­வை­கள், மண் அரிப்பை தடுக்­கும் துணி­கள், கட்­டு­மான பணி­களில் விரி­சலை தடுக்க பயன்­படும் போர்­வை­கள், குண்டு துளைக்­காத உடை­கள் போன்­ற­வற்றை தயா­ரிக்க பயன்­ப­டு­கின்றன. மேலும், தீய­ணைப்பு வீரர்­க­ளுக்­கான ஆடை­கள், கதி­ரி­யக்­கம் பாதிக்­காத உடை­கள், ‘வெல்­டிங்’ கையு­றை­கள், மீன் வலை, கொசு வலை போன்ற எண்­ணற்ற பிரி­வு­களில், தொழில்­நுட்ப ஜவு­ளி­களின் பங்கு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)