பதிவு செய்த நாள்
17 செப்2017
03:43
நாட்டில், நீண்ட தூர பயணத்துக்கான, 'டூரர்' ரக பைக்குகளை, குறைந்த விலையில், முதன்முதலில், ராயல் என்பீல்டு நிறுவனம் தான், 'ஹிமாலயன்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. விற்பனை, சக்கை போடு போட்டாலும், ஹிமாலயன், பி.எஸ்., - 4 புகை கட்டுப்பாடு விதிகளுக்கு உட்படாததால், விற்பனை நிறுத்தப்பட்டது.இந்நிலையில், சில மாதங்களாக, சந்தையில் கிடைக்காமல் இருந்த ஹிமாலயன், பி.எஸ்., - 4 புகை கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப, இன்ஜினில், 'பியூயல் இன்ஜெக் ஷன்' பொருத்தப்பட்டு, சந்தைக்கு மீண்டும் வந்து உள்ளது. இதனால், அதன் விலை, 5,000 ரூபாய் அதிகரித்துள்ளது.இதில், முந்தைய மாடலில் இருந்தது போல், ஐந்து கியர்; சிங்கிள் சிலிண்டர், 411 'சிசி' இன்ஜின் இடம் பெற்றுள்ளது; 'கிரானைட், ஸ்னோ' ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|