கைகொடுத்த மூன்று துறைகள் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் ஏற்றுமதி இரட்டை இலக்க வளர்ச்சிகைகொடுத்த மூன்று துறைகள் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் ஏற்றுமதி ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.01 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.01 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘ஆதார்’ இணைப்­புக்­கான கெடுவை மறக்க வேண்டாம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2017
00:09

வங்கிச் சேவை உள்­ளிட்ட பல முக்­கிய சேவை கணக்­கு­களை, ஆதார் எண்­ணுடன் இணைப்­பது அவ­சியம். இவற்றை நிறை­வேற்­று­வ­தற்­கான கால கெடுவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆதா­ருடன் இணைக்­கப்­ப­டா­விட்டால், குறிப்­பிட்ட சேவை­களை தொடர்ந்து பெறு­வது சிக்­க­லா­கலாம் என்­பதால், ஆதார் இணைப்­புக்­கான கால கெடுவை நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில் முக்­கிய சேவை­களுடன் ஆதார் எண்ணை இணைப்­ப­தற்­கான கெடு காலம் பற்­றிய விபரம்:

ஆதார் – பான் கார்டு:
ஜூலை 1ம் தேதிக்கு பின் செய்­யப்­படும் வரு­மான வரி கணக்கு தாக்கல் விப­ரங்கள், பான் கார்டு எண், ஆதார் எண்­ணுடன் இணைக்­கப்­பட்­டி­ருந்தால் மட்­டுமே ஏற்­கப்­படும் என, மத்­திய அரசு ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்­தது. எனினும், ஆதார் எண் இணைப்பு தொடர்­பாக, பலரும் சிக்கல் இருப்­ப­தாக கூறி­யதை அடுத்து, இதற்­கான அவ­காசம், ஆக., 5ம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டது. அதன்பின் இந்த கெடு டிச., 31ம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது. விதி­வி­லக்­கான சில பிரி­வி­னரைத் தவிர, பான் கார்டு வைத்­தி­ருக்கும் அனை­வரும், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, அரசு ஏற்­க­னவே அறி­வு­றுத்­தி­யுள்­ளது. எனினும், இந்த கெடு இந்த ஆண்டு வரு­மான வரி கணக்கு தாக்கல் செய்­ப­வர்­க­ளுக்கு மட்­டுமே பொருந்தும். மற்­ற­வர்­க­ளுக்கு கெடு அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

நிதிச் சேவைகள்:
வங்­கிகள், நிதிச்­சேவை நிறு­வ­னங்கள் மற்றும் வினி­யோக அமைப்­புகள் ஆகி­யவை, வாடிக்­கை­யா­ளர்­களின் கே.ஒய்.சி., தக­வல்­களை புதிய விதி­மு­றைக்கு ஏற்ப பெற்­றி­ருக்க வேண்டும். இதில் ஆதார் எண்ணும் அடங்கும். புதிய விதி­மு­றை­களின் படி, கே.ஒய்.சி., தக­வல்­களை பூர்த்தி செய்ய பான் கார்டு மற்றும் ஆதார் எண்­களை கட்­டாயம் அளிக்க வேண்டும். இதற்­கான கால கெடு டிசம்பர் 31ம் தேதி ஆகும். வங்­கிகள், மியூச்­சுவல் பண்ட் நிறு­வ­னங்கள், பங்­குகள், என்.பி.எஸ்., திட்டம் உள்­ளிட்­ட­வற்றில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

மொபைல் போன்கள்:
தொலை­த்தொ­டர்புத் துறை மொபைல் எண்­க­ளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அடுத்த ஆண்டு பிப்., 6ம் தேதிக்குள் இதை நிறை­வேற்ற வேண்டும். இதே போன்று சமையல், ‘காஸ்’ மானியம் உள்­ளிட்ட சமூக நலத்­திட்­டங்கள் பயனை தொடர்ந்து பெறவும், ஆதார் எண் இணைப்பு அவ­சியம். இதற்­கான கடைசித் தேதி டிசம்பர் 31.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)