பதிவு செய்த நாள்
18 செப்2017
18:05

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் எழுச்சியுடன் காணப்பட்டதுடன், நிப்டி புதிய உச்சத்தையும் எட்டியது.
ஆசிய உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகள் உயர்ந்து இருந்தது, உள்நாட்டில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை உயர்தது, முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து அந்த ஏற்றம் நாள் முழுக்க நீடிக்க, பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 151.15 புள்ளிகள் உயர்ந்து 32,423.76-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 67.70 புள்ளிகள் உயர்ந்து 10,153.10-ஆகவும் முடிந்தன. இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நிப்டி 10,114.65 புள்ளிகள் உச்சம் பெற்றதே சாதைனையாக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|