எஸ்.பி.ஐ., லைப் – பிரதாப் ஸ்நாக்ஸ் பங்கு வெளியீட்டுக்கு வருகின்றனஎஸ்.பி.ஐ., லைப் – பிரதாப் ஸ்நாக்ஸ் பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன ... ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.64.18 ரூபாயின் மதிப்பு சரிவு : ரூ.64.18 ...
‘பிபா – யு 17’ உலக கால்பந்து போட்டி: இறக்குமதி சாதனங்களுக்கு வரி விலக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2017
05:12

புதுடில்லி : நாட்­டில் முதன்­மு­றை­யாக நடை­பெற உள்ள, ‘பிபா – யு 17’ உலக கால்­பந்து போட்­டி­யை­யொட்டி, இறக்­கு­ம­தி­யா­கும் விளை­யாட்டு சாத­னங்­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்கு, முழு வரி விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது.

அக்., 6 – 28 வரை, நாட்­டில், 17 வய­துக்கு உட்­பட்­டோர் பங்­கேற்­கும், ‘பிபா – யு 17’ உலக கால்­பந்து போட்டி நடை­பெற உள்­ளது. இதை­யொட்டி, இப்­போட்டி தொடர்­பாக இறக்­கு­ம­தி­யா­கும் விளை­யாட்டு சாத­னங்­கள், பயிற்சி உப­க­ர­ணங்­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்கு, நிபந்­த­னை­யு­டன் கூடிய முழு வரி விலக்கு அளிக்­கப்­ப­டு­கிறது.

இது குறித்து, மத்­திய கலால் மற்­றும் சுங்க வரி­கள் வாரி­யம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: அனைத்து விளை­யாட்டு சாத­னங்­கள், உடற்­ப­யிற்சி கரு­வி­கள் உள்­ளிட்­ட­வற்­றின் இறக்­கு­ம­திக்கு, நிபந்­த­னை­யின் அடிப்­ப­டை­யில், முழு வரி விலக்கு அளிக்­கப்­படும். விளை­யாட்டு ஒளி­ப­ரப்பு தொடர்­பான சாத­னங்­கள், கால்­பந்து அணி­களின் சீரு­டை­கள், ஆடை­கள், உப­க­ர­ணங்­கள், பயன்­பாட்டு பொருட்­கள், சத்து பானங்­கள், உணவு வகை­கள் ஆகி­ய­வற்­றுக்­கும், வரி விலக்கு கிடைக்­கும்.

வரி விலக்கு சலுகை பெறு­வோர், அன்­ப­ளிப்பு பொருட்­கள், நினைவு சின்­னங்­கள், கேட­யங்­கள் ஆகி­யவை நீங்­க­லாக, இறக்­கு­ம­தி­யான பொருட்­களை, போட்டி முடிந்த, மூன்று மாதங்­க­ளுக்­குள் மறு ஏற்­று­மதி செய்ய வேண்­டும். இந்த உத்­த­ர­வா­தத்­து­டன், தேவை­யா­ன­வற்றை, வரி­யின்றி இறக்­கு­மதி செய்து கொள்­ள­லாம்.

‘பிபா – யு 17’ போட்­டியை நடத்­தும் அமைப்­பு­கள், ஒருங்­கி­ணைப்பு நிறு­வ­னங்­கள், ‘டிவி’ ஒளி­ப­ரப்பு நிறு­வ­னங்­கள் ஆகி­யவை, வரி விலக்கு சலு­கையை பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம். அனைத்து சாத­னங்­க­ளுக்­கும், ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி.,யில் இருந்­தும் விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

மொத்த பட்ஜெட்:
‘பிபா – யு 17’ போட்­டி­யின் மொத்த பட்­ஜெட், 76 கோடி ரூபாய். இது­த­விர, மத்­திய அரசு, 120 கோடி ரூபாய் செல­வி­டு­கிறது. இதில், 95 கோடி ரூபாய், கால்­பந்து போட்­டிக்­கான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்டு உள்­ளது.

எந்தெந்த சாதனங்கள்?
விளை­யாட்டு சாத­னங்­கள், உடற்­ப­யிற்சி கரு­வி­கள், ஊக்க மருந்து கண்­டு­பி­டிப்பு சாத­னங்­கள், முத­லு­தவி பெட்­டி­கள், சேட்­டி­லைட் போன்­கள், வீடியோ, பிளாஸ்மா திரை­கள், மின்­னணு ஸ்கோர்­போர்டு, ஸ்டாப் வாட்ச், புரொ­ஜக்­டர், பிரின்­டர், கம்ப்­யூட்­டர், ஸ்மார்ட் போன், ரூட்­டர் உள்­ளிட்ட பல்­வேறு சாத­னங்­கள் மற்­றும் பொருட்­க­ளுக்கு, சுங்­கம் மற்­றும் ஐ.ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது.

முதல் போட்டி:
கொச்­சி­யில், ஜவ­கர்­லால் நேரு விளை­யாட்டு அரங்­கில், அக்., 6ல், முதல் கால்­பந்து போட்டி துவங்­கு­கிறது. இறுதி போட்டி, அக்., 28ல், கோல்­கட்­டா­வின், சால்ட் லேக் ஸ்டே­டி­யத்­தில் நடக்­கிறது. இந்­தியா உட்­பட, 24 நாடு­கள், ‘பிபா – யு 17’ இப்­போட்­டி­யில் பங்­கேற்க உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)