பதிவு செய்த நாள்
20 செப்2017
00:04

ஜி.எஸ்.டி., அமலான பின், தமிழகத்திற்கு வரி வருவாய் குறையவில்லை. ஜூலை மாத வருவாய், 5,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
தமிழகத்தில், 2016 – 17ம் நிதியாண்டில், வணிக வரித்துறை, 67 ஆயிரத்து, 576 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. தற்போது, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்துள்ளது. அதனால், தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என, கருதப்பட்டது.
எதிர்பார்ப்பு:
இதற்கிடையே, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ‘ஜூலை இறுதியில், ஜி.எஸ்.டி., வாயிலாக, மத்திய, மாநில அரசுகளுக்கு, 92 ஆயிரத்து, 263 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.‘அது, நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகம்’ என, தெரிவித்தார். ஆனால், தமிழகம், உற்பத்தி மாநிலம் என்பதால், அதற்கு பாதிப்பு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், வருவாய் குறையவில்லை என, தமிழக அதிகாரிகள் உறுதிப்படுத்திஉள்ளனர்.
இது குறித்து, வணிக வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், தற்போது, 75 சதவீத வணிகர்கள், ஜி.எஸ்.டி., செலுத்தியுள்ளனர். அதனால், வரி வருவாய், 5,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது, ஜி.எஸ்.டி.,க்கு முன்பிருந்த வழக்கமான, மாத சராசரி வருவாய் ஆகும். இதில், 45 சதவீதம், ஜி.எஸ்.டி., விதிப்பு வரம்பில் வராத, பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மதுபான வகைகள்.
குறையவில்லை:
அதை நீக்கிவிட்டு பார்த்தாலும், நமக்கு வருவாய் குறையவில்லை. இதுதவிர, ஐ.ஜி.எஸ்.டி., எனப்படும், மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு பரிவர்த்தனை இன்னும் வர வேண்டியுள்ளது. அதில், இதுவரை, 400 கோடி ரூபாய் வந்துள்ளது. எனினும், நம் ஆண்டு வருவாயில், 14.5 சதவீதம் அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அதற்கு ஈடாக, மத்திய அரசு, நமக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|