பதிவு செய்த நாள்
20 செப்2017
00:05

புதுடில்லி : பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள, பொதுத் துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் பலவற்றில், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிகளை, ஒருவரே வகிக்கிறார்.
இந்த பதவிகளை பிரித்து, தலைவர் மேற்பார்வையில், நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர்கள் செயல்பட்டால், நிர்வாக செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்பது, மேலைநாடுகளில் நிரூபணமாகி உள்ளது.அதனால், இப்பதவிகளை பிரிப்பது குறித்து ஆராய, ‘செபி’ ஆலோசனை குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் அறிக்கை, அடுத்த மாதம் கிடைத்ததும், ‘செபி’ இறுதி முடிவு எடுக்கும்.
தற்போது, நிறுவனங்கள் விருப்பத்தின்படி, பதவிகளை பிரித்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை உள்ளது. இதை, கட்டாயமாக்கும் வகையில், விதிமுறைகளில் திருத்தம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, வங்கிகளில், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிகள், ஏற்கனவே பிரிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|