பதிவு செய்த நாள்
28 செப்2017
05:38

சென்னை : ‘ஜி.எஸ்.டி., காரணமாக, சிறிய தோல் நிறுவனங்கள், மூலதனச் செலவுகளை சமாளிக்க முடியாமல், மூடும் நிலை ஏற்படும்’ என, தோல் ஏற்றுமதி கழகமான, சி.எல்.இ., எச்சரித்துள்ளது.இது குறித்து, இதன் தலைவர், முக்தருல் அமின் கூறியதாவது:ஜி.எஸ்.டி., விதிகளின்படி, ஏற்றுமதியாகும் சரக்கிற்கு, முன்கூட்டியே சுங்க வரி செலுத்தி, சரக்கு ஏற்றுமதியானதும், திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.இதனால், தோல் நிறுவனங்களுக்கு, கூடுதலாக, 3,000 கோடி ரூபாய் மூலதனம் தேவைப்படுகிறது. தோல் துறையில், 80 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மூலதனத்தை திரட்ட முடியாமல் திணறுகின்றன. இதே நிலை நீடித்தால், இந்நிறுவனங்கள், தொழிற்சாலைகளை மூட வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகும்.ஜி.எஸ்.டி.,யில், ‘ரீபண்டு’ நடைமுறை, இன்னும் முழுமையாக செயல் வடிவம் பெறவில்லை. அதனால், முழு வரியை திரும்பப் பெறும் திட்டத்திற்கான, கெடுவை, 2018 மார்ச் வரை, நீட்டிக்க வேண்டும். முழுமையான தோல் பொருட்களுக்கான, ஜி.எஸ்.டி.,யை, 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|