பதிவு செய்த நாள்
28 செப்2017
05:40

புதுடில்லி, செப். 28–உலக பொருளாதார குழுமமான, டபிள்யு.இ.எப்., பொருளாதாரத்தில், அதிக போட்டித் திறன் உள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டு உள்ளது.அதில், 2016ல், 39வது இடத்தில் இருந்த இந்தியா, ஒரு நிலை இறங்கி, 40வது இடத்தை பிடித்துள்ளது.ஒரு நாட்டின் பொதுத் துறை நிறுவனங்கள், அடிப்படை கட்டமைப்பு, பொருளாதார சூழல், நிதிச்சந்தை மேம்பாடு, அடிப்படை கல்வி, ஆரோக்கியம், தொழில்நுட்பம், வர்த்தகம், கண்டுபிடிப்பு உள்ளிட்ட, 12 பிரிவுகளின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து, ஜி.சி.ஐ., குறியீடு தயாரிக்கப்படுகிறது.இது குறித்து, டபிள்யு.இ.எப்., அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:முந்தைய இரு ஆண்டுகளில், இப்பட்டியலில், இந்தியா, தொடர்ந்து முன்னேறி வந்தது. இந்தாண்டு, ஒரு நிலை கீழிறங்கி, 40வது இடத்தை பிடித்துள்ளது. இது, நாட்டின் ஸ்திரத்தன்மையை உணர்த்துகிறது. பல துறைகளில், போட்டித் திறன் அதிகரித்துள்ளது.அடிப்படை கட்டமைப்பு துறையில், 66வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. உயர் கல்வி மற்றும் பயிற்சியில், 75; தொழில்நுட்ப தயார் நிலையில், 107வது இடம் கிடைத்துள்ளது.அது போல, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள் துறையிலும், இந்தியா, நன்கு முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, தனிநபர் இணைய பயன்பாடு, மொபைல் போன் மற்றும் இணைய பயன்பாடு, பள்ளிகளில், இணைய தொடர்பு வசதி ஆகியவற்றில், வளர்ச்சி உள்ளது. அதே சமயம், தனியார் துறையில் நிலவும் லஞ்ச ஊழல் தான், இந்தியாவில் வர்த்தகம் புரிவதற்கு தடையாக இருக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
‘டாப் – 10’ நாடுகள்1. சுவிட்சர்லாந்து2. அமெரிக்கா3. சிங்கப்பூர்4. நெதர்லாந்து5. ஜெர்மனி6. ஹாங்காங்7. சுவீடன்8. பிரிட்டன்9. ஜப்பான்10. பின்லாந்து
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|