பதிவு செய்த நாள்
28 செப்2017
05:40

மும்பை : மும்பையில், அனில் அம்பானியின், ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டம், நேற்று நடந்தது. அதில், அன்மோல் அம்பானி, தன் பெற்றோர், அனில் அம்பானி, டினா முனிம் ஆகியோருடன் மேடை ஏறினார். அவர், ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின், செயல் இயக்குனராக பொறுப்பேற்ற பின், முதன்முறையாக, பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. எங்கள் வர்த்தகத்தில், ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நாம் இப்போது, ‘டிஜிட்டல்’ யுகத்தில் உள்ளோம்.இந்திய நிதித் துறையை, வளமாக வடிவமைக்கும் கனவு, நமக்கு உள்ளது. நிறுவனம், ஏராளமான கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு உள்ளது. எதிர்காலம், டிஜிட்டல் மற்றும் மனித பயன்பாடு இணைந்த, ‘பிஜிட்டல்’ யுகமாக உருவெடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.ஜூலையில், முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்கூட்டத்தில், அவரது மகன், ஆகாஷ் அம்பானி, மகள், இஷா அம்பானி ஆகியோர், முதன்முறையாக மேடையேறி, ‘ஆர்ஜியோ’ மொபைல் போனை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|