பதிவு செய்த நாள்
28 செப்2017
05:42

புதுடில்லி, செப். 28–‘‘அடுத்த ஓராண்டில், ‘2ஜி’ தொழில்நுட்ப வசதியை விஞ்சும் வகையில், ‘4ஜி’ வளர்ச்சி இருக்கும்,’’ என, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர், முகேஷ் அம்பானி தெரிவித்து உள்ளார்.அவர், டில்லியில், ‘இந்திய மொபைல் காங்கிரஸ்’ மாநாட்டில், மேலும் பேசியதாவது:‘டிஜிட்டல்’ பொருளாதாரத்தின் சுவாசக் காற்றாக, ‘டேட்டா’ எனப்படும், தகவல் பயன்பாடு உள்ளது. வாழ்க்கையின் முக்கிய அங்கமான இந்த வசதியை, தடையின்றி மக்கள் பெற வேண்டும். குறைந்த கட்டணத்தில், அதிவேகமாக தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வசதியை வழங்க வேண்டும்.‘2ஜி’ அவுட்ஒவ்வொரு இந்தியருக்கும், நியாயமான விலையில், ‘ஸ்மார்ட் போன்’ கிடைக்க வேண்டும். இதன் மூலம், எல்லையில்லா அறிவாற்றலும், இணையத்தின் சக்தியும், மக்களுக்கு கிடைக்கும்.இந்திய மொபைல் போன் சந்தையில், தகவல் பரிவர்த்தனைகளின் பிரவாகம் பொங்கி வழிகிறது. அதை, 130 கோடி மக்களுக்கு கொண்டு செல்ல, வலுவான, ‘டிஜிட்டல்’ கட்டமைப்பு தேவைப்படுகிறது.அடுத்த ஓராண்டில், ‘2ஜி’ தொழில்நுட்ப சேவையின் பரப்பை விட, ‘4ஜி’ சேவையின் பரப்பு உயரும்.மொபைல் போனில், இணைய பயன்பாட்டில், கடந்த ஆண்டு, இந்தியா, 155வது இடத்தில் இருந்தது. ஒரே ஆண்டில், உலகளவில், மொபைல் போனில் தகவல் பரிவர்த்தனையை, அதிகளவில் மேற்கொள்ளும் நாடு என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.இதற்கு, கடந்த ஆண்டு, ‘ஆர்ஜியோ’ அறிமுகப்படுத்திய, இலவச மொபைல் போன் சேவையும், பின், மிகக் குறைந்த கட்டணத்தில், அச்சேவையை நீட்டித்ததும் தான் காரணம்.மொபைல் போன் தகவல் பரிவர்த்தனைக்கு, மேம்பட்ட, ‘டிஜிட்டல்’ கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.சர்வதேச அளவில், இயந்திரமயம், பரந்த உற்பத்தி, தானியங்கி நடைமுறை என்ற மூன்று தொழில் புரட்சிகள் நடந்துள்ளன. ஆனால், இந்த வாய்ப்பை, இந்தியா தவற விட்டுவிட்டது.அஸ்திவாரம்அடுத்து, தகவல் பரிவர்த்தனை, இணைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் மூலம், நான்காவது தொழில் புரட்சி உருவாகி உள்ளது. இந்த வாய்ப்பை, இந்தியா தவறவிடக் கூடாது.மொபைல் இணையம், மேகக் கணினி தொழில்நுட்பம் ஆகியவை தான், நான்காவது தொழில் புரட்சிக்கான அஸ்திவாரம்.தகவல் பரிவர்த்தனை என்பது, புதிய எரிபொருள். அதை, இந்தியா இறக்குமதி செய்ய தேவையில்லை. அது, நம்மிடம் அபரிமிதமாக உள்ளது. அது, ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியா மற்றும் கோடிக்கணக்கான இந்திய மக்களின் வாழ்க்கையை வளமாக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆதரவு தேவை‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தில், இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இத்துறையில், இந்தியாவிற்கான நேரம் வந்து விட்டது. சர்வதேச அளவில், மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒவ்வொன்றும், இந்தியாவை உற்று நோக்குகின்றன. ‘டிஜிட்டல்’ சேவையின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் தொலைநோக்கு இலக்கை எட்டும், மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும்.சுனில் மிட்டல், தலைவர், பார்தி ஏர்டெல்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|