பதிவு செய்த நாள்
29 செப்2017
23:39

புதுடில்லி : எச்.ஜி., இன்ப்ரா இன்ஜினியரிங் நிறுவனம், அடிப்படை கட்டமைப்பு பொறியியல் சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’யிடம் விண்ணப்பித்து இருந்தது. இது தொடர்பான ஆவணங்களை பரிசீலித்த, ‘செபி,’ எச்.ஜி., இன்ப்ரா இன்ஜி., நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 5௦0 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது. இந்த நிதி, புதிய உபகரணங்களை கொள்முதல் செய்யவும்; நிறுவனத்தின் பழைய கடன்களை செலுத்தவும்; நிறுவன நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படும். இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ், எச்.டி.எப்.சி., பேங்க் ஆகியவை நிர்வகிக்க உள்ளன.
இதையடுத்து, விரைவில் பங்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பங்கு வெளியீடு முடிந்த பின், இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும். இதைத் தொடர்ந்து, பங்குகள் மீது வர்த்தகம் துவங்கும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|