பதிவு செய்த நாள்
29 செப்2017
23:40

புதுடில்லி : ‘அடுத்த, 10 ஆண்டுகளில், உலகின், மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக, இந்தியா உயரும்’ என, எச்.எஸ்.பி.சி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் விபரம்: ஓராண்டில், பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., போன்ற சீர்திருத்தங்களால், இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்துள்ளது. ஆனால், நடுத்தர காலத்தில், வளர்ச்சி நன்கு இருக்கும். அடுத்த, 10 ஆண்டுகளில், ஜப்பான், ஜெர்மனியை விஞ்சி, உலகின், மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக, இந்தியா உயரும். புதிய, ஜி.எஸ்.டி., திட்டத்தால், நாட்டின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். ஜி.எஸ்.டி., மூலம் மட்டும், நடுத்தர கால அளவில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 0.4 சதவீதம் அதிகரிக்கும். இத்துடன், திவால் சட்டம், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் போன்ற சீர்திருத்த திட்டங்களும், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
இந்தியா, ஒருபுறம் மந்த நிலை, மறுபுறம், எழுச்சி என்ற இரு உலகங்களுக்கு இடையே சிக்கி உள்ளது. நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, 6.5 சதவீதமாக இருக்கும். இது, 2018 – 19ல், 7 சதவீதம்; 2019 – 20ல், 7.6 சதவீதமாக உயரும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|