பதிவு செய்த நாள்
29 செப்2017
23:40

மும்பை : ‘சில்லரை பணவீக்க உயர்வு காரணமாக, வங்கிகளுக்கு வழங்கும், குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பில்லை’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜூலையில், நாட்டின் சில்லரை பணவீக்கம், 2.36 சதவீதமாக இருந்தது. இது, ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஆகஸ்டில், 3.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், சில்லரை பணவீக்கம், 3.7 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, நடுத்தர கால அளவில் நிர்ணயிக்கப்பட்ட, சில்லரை பணவீக்க இலக்கு அளவான, 4 சதவீதத்தை விட, குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்த போதிலும், அக்., 3ல் கூடும், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை குறைக்காது என, தெரிகிறது. ஏனெனில், வரும் மாதங்களில், சில்லரை பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வரும், 2018 மார்ச் வரையிலான காலத்தில், சில்லரை பணவீக்கம், 4.5 – 5 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டியை குறைக்கும் பட்சத்தில், கார்ப்பரேட் நிறுவனங்கள், அதை வரவேற்கும். அதே சமயம், முதலீட்டு நடவடிக்கைகள் புத்துயிர் பெறும் என, கூற முடியாது. ரிசர்வ் வங்கி, 0.25 சதவீத வட்டியை குறைப்பதால் ஏற்படும் பலனை விட, ஏற்றுமதி நடைமுறைகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு கண்டால், அதை விட, அதிக பலன் கிடைக்கும். ஜி.எஸ்.டி., போன்ற, புதிய வரி திட்டத்திற்கு மாறும் போது, நாட்டின் வளர்ச்சியில் தாக்கம் ஏற்படுவது இயற்கை. தற்போது, அந்த நிலை தான் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|